Published:Updated:

“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

சி.சரவணன்

நாணயம் விகடனும்  ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து சென்னையில், ‘செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்’ என்ற முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை மியூச்சுவல் ஃபண்ட் - சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனை முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

முதலில், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு சீனியர் ரீஜினல் ஹெட் அசோக் நஞ்சுண்டராஜ் பேசினார். முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களான முதலீட்டு மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் வசதி, வருமான வரிச் சலுகை போன்றவை குறித்து விரிவாக விளக்கிச் சொன்னார் அவர். “சம்பளம் அதிகரிக்கும்போது, சேமிப்பை அதிகரித்தால், எதிர்காலம் வளமாக இருக்கும்’’ என்றார் அவர்.

“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

அடுத்ததாகப் பேசினார் முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண். “வெளிநாட்டு பென்ஷன் ஃபண்டுகள் எல்லாம் நம்முடைய பங்குச் சந்தையில் பணத்தை முதலீடுசெய்து நல்ல லாபத்தை எடுத்துச் செல்கின்றன. ஆனால், நமது பென்ஷன் ஃபண்டிலிருந்து 5% பணத்தைப் போட்டாலே, நாம் அலறுகிறோம். வெளிநாட்டுக்காரர் நம் சந்தை யிலிருந்து லாபத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது, நாம் சும்மா இருப்பது சரியல்ல” என முதலீட்டாளர்களின் சிந்தனையைத் தூண்டினார்.

“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

சிறப்புரையாற்றிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், “ரிஸ்க் உள்ள திட்டங்களில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, அதிக வருமானம் கிடைக்கிறது. அதில் ஒன்றுதான் ஈக்விட்டி ஃபண்ட்” என்றார். 

கூட்டத்தின் இறுதியில் வாசகர் ஒருவர், “இந்தக் கூட்டம் முடிந்ததும் நகை வாங்கச் செல்வதாக இருந்தேன். முதலீடு பற்றிய விழிப்புஉணர்வு ஏற்பட்டதால், நகை வாங்குவதற்குப் பதில் ஃபண்டில் முதலீடு செய்யப்போகிறேன்” என்று சொன்னபோது, அனைவரும் பாராட்டினர்.

படங்கள்: ப.பிரியங்கா