Published:Updated:

இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

இஎல்எஸ்எஸ் ஃபண்ட்  யாருக்கு ஏற்றது?
பிரீமியம் ஸ்டோரி
இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

சேனா சரவணன்

இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

சேனா சரவணன்

Published:Updated:
இஎல்எஸ்எஸ் ஃபண்ட்  யாருக்கு ஏற்றது?
பிரீமியம் ஸ்டோரி
இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?

முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை, டிவிடெண்ட் மற்றும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை என மூன்று முத்தான வசதிகள், இஎல்எஸ்எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருக்கின்றன. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு, ஓராண்டில் 80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.

இஎல்எல்எஸ் ஃபண்டில் திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படு வதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்து மாறும். எனவே, ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே இந்த முதலீடு ஏற்றதாக இருக்கும். 

இஎல்எஸ்எஸ் ஃபண்ட்  யாருக்கு ஏற்றது?

இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீட்டை மூன்றாண்டுகள் கழித்தே எடுக்க முடியும். முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாத இந்தக் காலத்தை ‘லாக் இன் பீரியட்’ என்று சொல்கிறார்கள். பொதுவாக, ‘லாக் இன் பீரியட்’ முடிந்தவுடன், பலரும் தங்களது முதலீட்டைத் திரும்ப எடுத்து விடுகிறார்கள். அப்படி எடுக்கத் தேவையில்லை. இதில் செய்துள்ள முதலீட்டினைக் குறைந்தபட்சம் 5 - 8 ஆண்டுகளுக்குத்  தொடர்ந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது ஏற்படும் ரிஸ்க்கைக் குறைக்க, கீழ்க்கண்ட 5 விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்.

1. பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்  நடத்தும் இஎல்எஸ்எஸ் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

2. குறைந்தது 5 வருடங்களுக்கு மேல் செயல் பாட்டில் உள்ள ஃபண்டாக இருக்க வேண்டும்.

3. இந்த ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.1,000 கோடிக்கு  மேல் இருக்க வேண்டும்.

4. கடந்த காலங்களில் நல்ல வருமானம் தந்திருக்கவேண்டும்.

5. ஒரே இஎல்எல்எஸ் ஃபண்டில் முதலீடு செய்யாமல்,  இரண்டு அல்லது மூன்று  ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.