Published:Updated:

ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

ஷேர்லக்: சந்தை இன்னும் பல  உச்சங்களைத் தொடும்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

Published:Updated:
ஷேர்லக்: சந்தை இன்னும் பல  உச்சங்களைத் தொடும்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்!

“சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘அதை அப்புறமா கழுகார்கிட்ட கேட்டுச் சொல்றோம். இப்ப நீங்கள் சந்தை நிலவரங்களைச் சொல்லுங்கள்” என்றோம். “சரி, கேளுங்கள்” என்று சொல்லி விட்டு, அவருக்காகத் தயாராக வாங்கி வைத்திருந்த ஆப்பிள் ஜூஸைக் கையில் எடுத்துக் கொண்டார்.

ஷேர்லக்: சந்தை இன்னும் பல  உச்சங்களைத் தொடும்!

“இந்தியப் பங்குச் சந்தையின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன்  இரண்டு ட்ரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதே?”

“கடந்த சில மாதங்களாகவே இந்தியப் பங்குச் சந்தைத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களும் அதிக உற்சாகத்துடன் பங்குகளில் முதலீடு செய்துவருகின்றனர். இதனால் பங்குகளின் மதிப்புகள் உயர்ந்து, அவற்றின் மார்க்கெட் கேபிட்டலை சேஷனை உயர்த்தி இருக்கின்றன. இதன் காரணமாக, பங்குச் சந்தையின் மொத்த மார்க்கெட் கேபிட்டலைசேஷன் இரண்டு ட்ரில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது. இது, இந்திய ரூபாயில் சுமார் 130 லட்சம் கோடி ஆகும். இதனால் உலகிலேயே ஒன்பதாவது பெரிய பங்குச் சந்தையாக இந்திய சந்தை திகழ்கிறது.

மேலும், தற்போது வேகமாக வளர்ந்து வரும் பங்குச் சந்தைகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. பங்குச் சந்தையின் மார்க்கெட் கேபிட்டலைசேஷனுக்கும் இந்திய ஜிடிபிக்கும் இடையிலான விகிதம் 0.88 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ளன. அதிகம் வர்த்தகமாகும் 50 சதவிகித நிறுவனங்களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ.500 கோடிக்குக் கீழ் உள்ளவைதான் என்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்.

இத்தனைக்கும் பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக வும் முதலீடு செய்பவர்கள் நம் மக்கள் தொகையில் 3 முதல் 4% மட்டுமே. இது 8 சதவிகித மாக உயர்ந்தால், சந்தை இன்னும் எந்த அளவுக்கு வளர்ச்சி காணும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.”  

“ஐடிபிஐ வங்கியின் ரேட்டிங் குறைக்கப்பட்டிருக்கிறதே?”

“இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பானது பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் ரேட்டிங்கை AA+லிருந்து AA ஆகக் குறைத்துள்ளது. காரணம், அதன் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதும், நிதி நிலை நெருக்கடியைச் சந்தித்து வருவதும்தான். கடன் செலவுகளும் அதிகமாகவே உள்ளன. ரேட்டிங் குறைக்கப்பட்ட செய்தி வெளியானதும் ஐடிபிஐ வங்கிப் பங்கின் விலை 7.9% குறைந்து வர்த்தகமானது.”

“நான்காம் காலாண்டில் ஹெச்யுஎல் நிறுவனம் லாபம் கண்டிருக்கிறதே!’’

“இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கு பண மதிப்பு நீக்கம் காரணமாக விற்பனை குறைந்து வருமானமும் குறைந்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள மார்ச் காலாண்டில் அதன் வருமானம் அதிகரித்து, அதன் நிகர லாபமும் 6% வளர்ச்சியுடன்,  ரூ.1,183 கோடியாக உள்ளது. மேலும், இந்த மார்ச் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டில் நடந்த விற்பனை அளவைக் காட்டிலும் 4% அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறது”.

‘‘ஜேஎஸ்டபிள்யூ-வின் லாபம் அபாரமாக அதிகரித்திருக்கிறதே!’’

‘‘ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்-ன் நிகர லாபம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்து, வருவாய் 53% உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் ரூ.11,747 கோடியாக இருந்த இதன் வருவாய், 2016-17-ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் ரூ.17,917 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 235% உயர்ந்து ரூ.1,009 கோடியாக உள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதன் வருடாந்திர நிகர லாபம் அதிகரித்து ரூ.3,467 கோடியாக இருக்கிறது. இதற்குக் காரணம், அதன் ஏற்றுமதி விற்பனை பெருமளவில் அதிகரித்திருப்பதே.

மேலும், இந்த நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் விரிவுபடுத்தல் திட்டங்களுக்காக ரூ.26,800 கோடி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசினஸில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பங்குக்கு ரூ.2.25 வீதம் டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஸ்டீலுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான், இந்தப் பங்குக்கான டிமாண்ட் கூடியிருக்கிறது.”

“டாடா ஸ்டீல் நிகர இழப்பு சற்றுக் குறைந்திருக்கிறதே?”

“டாடா ஸ்டீல் நிறுவனம் 2015-16-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், ரூ.3,042 கோடியை நிகர இழப்பாகச் சந்தித்திருந்தது. இது 2016-17-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.1,168 கோடியாகக் குறைந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஸ்டீல் ஆலையை மூடிய வகையில் இந்த நிறுவனம், பிரிட்டிஷ் ஸ்டீல் பென்ஷன் திட்டத்துக்கு ரூ.4,069 கோடி ஒதுக்கீடு செய்ததால், இந்த இழப்பைச் சந்தித்துள்ளது.”

‘‘சிபிசிஎல் நிறுவனத்தின் பெயர் பலமாக அடிபடுகிறதே!’’

‘‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் ( சிபிசிஎல்) நிகர லாபம், 2016-17-ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 38% அதிகரித்து, ரூ.1024 கோடியாக உள்ளது.  விற்பனை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் வளர்ச்சிக்குச் சாதகமாக மாறியுள்ளது.” 

“நிஃப்டியை 9500-க்குக் கொண்டு சென்ற பங்குகள் எவை?”

“இந்தியப் பங்குச் சந்தைகள் வரலாற்று உச்சத்தை அடைந்து தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நிஃப்டி இந்த வருடம் அடைந்துள்ள ஏற்றத்துக்கு பல்வேறு நிறுவனப் பங்குகளின் ஏற்றமும் காரணமாக இருந்திருக்கின்றன. நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் பங்குச் சந்தைக்குக் கைகொடுத்திருக்கின்றன. அவற்றில் ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி இரண்டும் முறையே 14.57% மற்றும் 9.32% பங்கு வகித்திருக்கின்றன. ரிலையன்ஸ் 9.23 சதவிகிதமும், எல் அண்ட் டி 6.58 சதவிகிதமும், ஐடிசி 6.39 சதவிகிதமும் பங்கு வகித்திருக்கின்றன. இதனால் மே 16 அன்று நிஃப்டி அதிகபட்சமாக 9512.25 வரை உயர்ந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் பாசிட்டிவாக இருப்பதே முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துப் பங்குச் சந்தை ஏற்றமடைய முக்கியக் காரணம். சந்தையின் ஏற்றமும், நிறுவனங்களின் பாசிட்டிவான முடிவுகளும், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றின் முதலீடுகளும் முதலீட்டாளர்களின் சென்டிமென்டை பாசிட்டிவாக்கி இருக்கிறது.”

“சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?”

“நிஃப்டி, சென்செக்ஸ் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி மேம்பட்டிருப்பதால் வரும் காலாண்டுகளில், இந்தியப் பங்குச் சந்தை இன்னும் பல உச்சத்தைத் தொடும் என்கிறார்கள் பெரும்பாலான அனலிஸ்ட்கள்.”

“மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள், லார்ஜ் கேப் பங்குகளைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனவே?”

“மோடி பதவியேற்று மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் 35 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவற்றில் லார்ஜ் கேப் பங்குகளைக் காட்டிலும் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிக வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. இந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸைவிட மிட்கேப் குறியீடு 104 சதவிகிதமும், ஸ்மால் கேப் குறியீடு 106 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கின்றன.

ஆனால், லார்ஜ் கேப் பங்குகள் அந்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. இதனால் லார்ஜ் கேப் பங்குகளைச் சந்தையைவிட்டு நீக்கிவிட்டால் என்ன ஆகும் என ஓர் ஆய்வினை நடத்திப் பார்த்தபோது கிடைத்த முடிவுகள் மிகவும் ஆச்சர்யமளித்தன.

லார்ஜ் கேப் பங்குகள் அல்லாத சென்செக்ஸ் வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் 322 சதவிகிதமாக இருந்திருக்கும். சென்செக்ஸ் 30 ஆயிரத்தில் அல்ல, 94 ஆயிரத்தில் இருந்திருக்கும். முதலீட்டாளர்களும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில்தான் அதிக அளவில் முதலீட்டைக் குவித்துள்ளனர்.”   

“கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது..?”

“குறுகிய கால முதலீட்டுக்கு: சுந்தரம் ஃபாசனர்ஸ், வெல்ஸ்பன் கார்ப்பரேஷன், எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்க்ஸ், ஹெச்சிசி. நீண்ட கால முதலீட்டுக்கு : அசோக் லேலாண்ட், எஸ்பிஐ, அமர ராஜா பேட்டரீஸ், எக்ஸைட்.

கமாடிட்டியை ஆன்லைனில் படிக்க : http://bit.ly/2qERjOx