Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் காளையின் போக்கில் தொடர்ந்த இந்திய பங்குச் சந்தை, வார இறுதியில் லாப நோக்கிலான விற்பனையால் இறக்கத்தைச் சந்தித்தது. அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியும் அதனால் ஏற்பட்ட சர்வதேச சந்தைகளின் இறக்கமும் இந்தியச் சந்தைகளின் இறக்கத்துக்குக் காரணமாயின. ஆனாலும் இந்தியச் சந்தைகள்,  இறக்கம் காண நேரிடலாம் என முன்கூட்டியே உணர்ந்து, அதனைச் சந்திக்க தயார் நிலையில் இருந்தன. அது நடக்கவும் செய்தது. தற்போது முதலீட்டாளர்கள் எழுப்பும் கேள்வி

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

என்னவெனில், சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த இறக்கம் மேலும் தொடருமா அல்லது இத்துடன் முடிந்துவிடுமா என்பதே.

சார்ட் பேட்டர்ன்களைப் பார்க்கும் போது, இரண்டு நாள்கள் ஏற்பட்ட இறக்கத்தில், இறக்கம் குறைவாகவே இருந்தது. எனவே, இந்த இறக்கமானது குறுகிய கால ஊசலாட்டம்தான். இதற்கு மேலும் இறக்கம் வராதபட்சத்தில் இது ஏற்ற இறக்கமில்லாத வர்த்தக நிலையை உருவாக்கலாம். ஆனால், சந்தையின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள பாசிட்டிவான நம்பிக்கையை ஒட்டு மொத்தமாகச்  சீர்குலைக்கும் வகையிலான செய்திகள் வரும்வரை சந்தை பெரிய அளவில் இறங்க வாய்ப்பில்லை.  சந்தை தற்போதுள்ள நிலையில், பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்பு, தொடர்ச்சியான முதலீடு, முன்னேற்றமடைந்த முடிவுகள், மற்றும் மேக்ரோ அளவிலான காரணிகள் ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனவே, சந்தை சிறு சிறு இறக்கங்களை மட்டுமே சந்திக்க நேரிடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மேலும், பங்குகளின் விலைப் போக்கு தொடர்பான பேட்டர்ன்களிலும் ஏற்கெனவே நீண்டகால சப்போர்ட்களைக் கொண்ட வரம்பிலிருந்து கொஞ்சம்  இறங்கியே வர்த்தகமாகி வருகின்றன. எனவே, மேலும் இறக்கமடைவதற்கான வாய்ப்பில்லை. ஆனால், இந்தச் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்போது ஏற்ற இறக்கமில்லாத நிலை உருவாகலாம்.

வரும் வாரத்தில் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருக்கிறது. அதில் கவனம் இருக்க வேண்டும். ஆனாலும், வரும் வாரத்தில் 9400-9500 என்ற வரம்புக்குள்தான் சந்தையின் போக்கு இருக்கும். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக வெளியாக அதற்கேற்ப குறிப்பிட்ட அந்தப் பங்குகளின் செயல்பாடு இருக்கும். அது வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளைத் தரும். ஆனால், இண்டெக்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (FORTIS)

தற்போதைய விலை: ரூ.203.55

வாங்கலாம்


ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பங்குகளைப் புரொமோட்டர் களிடமிருந்து பல்க் டீலிங்கில் வாங்குவதற்குப் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள் என்ற செய்தி முன்னர் வெளியானது. இந்தச் செய்தியினால் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் உருவானது. அந்த பேட்டர்ன் ரூ.280 என்ற நிலையை டார்கெட்டாகக் கொண்டுள்ளது. கடந்த சில நாள்களாக இந்தப் பங்கில் ஏற்பட்டுள்ள இறக்கம் ‌்காரணமாக ரூ.198 என்ற நிலையில் வலுவான சப்போர்ட் நிலை உருவாகி இருக்கிறது. இந்தப் போக்கு இந்தப் பங்கை வாங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஸ்டாப் லாஸ் 190-ஆக வைத்துக்கொண்டு தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். இந்தப் பங்கு ரூ.198 என்கிற இலக்கை அடுத்த 3 முதல் 6 மாதங்களில் அடைய வாய்ப்பிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சக்தி பம்ப்ஸ் (SHAKTIPUMP)

தற்போதைய விலை: ரூ. 322.80

வாங்கலாம்

விவசாயத் துறையில் நீர் பாசனத்துக்காகப் பயன்படும் பம்ப் சந்தையில் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சக்தி பம்ப்ஸ் நல்ல நிதிநிலை முடிவுகளுடன் சந்தையில் பட்டியலிட்ட வாரத்தில், முதலீட்டாளர்கள் அந்தப் பங்குகளை எந்தச் சந்தேகமுமில்லாமல் வாங்கிக் குவித்து, இந்தப் பங்கின் விலையை 20% அளவுக்கு  உயர்த்திவிட்டனர். இப்போது இந்தப் பங்கு புதிய உச்சங்களை அடைவதற்கான பிரேக் அவுட் நிலையில் இருப்பதால், நம் போர்ட் ஃபோலியோவில் இந்தப் பங்கைச் சேர்த்துக் கொள்வதற்கான தகுதியைக் கொண்டிருக்கிறது. இதன் பேட்டர்னிலும் தொடர் ஏற்றத்துக்கான மொமென்டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே, தற்போதைய விலையிலும் ரூ.310 என்ற நிலைக்கு இறங்கும் வரையிலும் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.360 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.290 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாடா காபி (TATACOFFEE)

தற்போதைய விலை: ரூ.134.50


வாங்கலாம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது பல்வேறு எஃப்எம்சிஜி பங்குகளுக்குச் சாதகமாக மாறியுள்ளது. அவற்றில் ஒன்றுதான், டாடா காபி. பல மாதங்களுக்குமுன் இந்தப் பங்கில் உருவான பிரேக் அவுட் நிலை ஏற்படுத்திய ஏற்றம் முடிவுக்கு வந்து, பின்னர் இந்தப் பங்கின் விலையில் ஏற்ற இறக்கமில்லாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்தப் பங்கு, தனது சமீபத்திய விலை வரம்பில் இருந்து ஏற்றமடைவதற்குத் தயாராக இருக்கிறது. இதன் அடுத்த டார்கெட் நிலை ரூ.165-ஆக உருவாகியிருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.125 வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.