இந்திய பங்குச் சந்தையில் இன்று இரண்டாவது நாளாக வர்த்தகம் ஒரு மந்த கதியிலேயே இருந்தது. தொடக்கம் பாசிட்டிவாக இருந்தபோதும், விரைவிலேயே சரிந்த சந்தை, பின்னர் முன்னேறினாலும், உயர் நிலையில் பங்குகள் சரியான ஆதரவு பெறாததால் மீண்டும் தடுமாற்றம் கண்டு இறுதியில் சிறு நஷ்டத்துடன் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 22.21 புள்ளிகள் அதாவது 0.06 சதவிகிதம் நஷ்டத்துடன் 36,351.23 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 23.35 புள்ளிகள் அதாவது 0.21 சதவிகிதம் சரிந்து 10,957.10-ல் முடிவுற்றது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகச் சந்தைகளில் காணப்பட்ட தொய்வினாலும் பாசிட்டிவான போக்குக்கான எந்தக் காரணங்களும் அமையாததாலும் முதலீட்டாளர்கள் ஓர் எச்சரிக்கை உணர்வுடனே செயல்பட்டார்கள் எனலாம்.
தவிர நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில், பெரிய அளவில் பொசிஷன்களை உண்டாக்கிக்கொள்ள பெரும்பாலும் எவரும் விரும்பவில்லை.
அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்ததும், அமெரிக்க வட்டி விகிதம் அடுத்த மாதம் அதிகரிக்கக்கூடிய நிலையில் ரூபாயின் மதிப்பு இன்னமும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும்கூட ஒரு ஜாக்கிரதை உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.
சமீபத்திய கடும் சரிவுக்குப் பின் கச்சா எண்ணெய்' விலை நேற்று கணிசமாக உயர்ந்ததும் சந்தையின் இன்றைய இறங்குமுகத்துக்குக் காரணமானது.
சற்று தணிந்திருந்ததாகக் கருதப்பட்ட வர்த்தக யுத்தம் பற்றிய கவலை, மீண்டும் தலை தூக்கியிருப்பதும் சந்தையின் தொய்வு நிலைக்கு ஒரு காரணம்.
இன்று விலை அதிகரித்த பங்குகள் :
வேதாந்தா 2.2%
யெஸ் பேங்க் 1.9%
ஐ.டி.சி 1.7%
பார்தி ஏர்டெல் 1.7%
அதானி போர்ட்ஸ் 1.4%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.2%
அதானி பவர் 8.5%
3M இந்தியா 5.1%
வீ மார்ட் 5%
பேங்க் ஆஃப் இந்தியா 4.8%
ரேடிக்கோ கெய்தான் 4.6%
DB கார்ப் 4.5%
இன்று விலை சரிந்த பங்குகள் :
ஹின்டால்கோ 6.4%
பார்தி இன்ஃப்ராடெல் 4.6%
கோடக் பேங்க் 3.7%
லார்சென் & டூப்ரோ 2.6%
சிப்லா 2.5%
பி.சி.ஜிவெல்லேர் 9%
மைன்ட் ட்ரீ 8.6%
8k மைல்ஸ் சாஃப்ட்வேர் 8.2%
L&T இன்ஃபோடெக் 6.7%
ஜெயின் இரிகேஷன்ஸ் 6%
இன்று மும்பை பங்குச் சந்தையில் 827 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1754 பங்குகள் விலை சரிந்தும், 146 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.