நடப்பு
Published:Updated:

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல் சூழலில் மாற்றம் ஏதுமில்லை என்றும், 9350 லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய நல்ல இறக்கம் வராமல் மேல் நோக்கிய வேகமான ஏற்றத்துக்கு வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்கிற சூழலே டெக்னிக்கலாக நிலவுகிறது என்றும், வியாபாரத்துக்கான வாய்ப்புகள் குறைவாகவும் ரிஸ்க் அதிகமாகவும் இருக்கும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

வாரத்தின் மூன்று நாள்கள் பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லாமல் முடிவடைந்தபோதும் நிஃப்டி (இரண்டு நாள்கள் சிறிய அளவில் இறக்கத்துடனும், மூன்று நாள்கள் ஏற்றத்துடனும்) வெள்ளியன்று திடீரென ஏற்றத்தைச் சந்தித்து, அதே வேகத்தில் முடிவடைந்தது. வார இறுதியில் வாராந்திர ரீதியாக 58 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வெள்ளியன்று டிரேடிங்கின் நடுவே, வரலாறு காணாத உச்சிக்கு (9673) நிஃப்டி சென்ற போதிலும், நாளின் இறுதியில் 9653 என்ற இடத்தில் வந்து முடிவடைந்தது.

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டெக்னிக்கலாக 9635 என்ற லெவலுக்கு மேலேயே தொடர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள நிலைக்கு இப்போது நிஃப்டி வந்துள்ளது. அப்படியிருக்கும்பட்சத்தில் மட்டுமே 9700 என்ற எல்லையை நிஃப்டியால் தொடமுடியும். இல்லாதபட்சத்தில், சந்தை இறங்கினால் உடனடி சப்போர்ட் லெவலாக 9580 என்ற லெவலே தென்படுகிறது. 9530 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால் 9330 வரை சென்று திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்துவிடக் கூடும் என்பதால், ஷார்ட் சைட் வியாபாரத்தை  டிரேடர்கள் தற்போதைக்கு நினைத்துப் பார்க்கவே கூடாது.

நிஃப்டி எஃப் அண்ட் ஓ-வில், புதிய கால் ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட்களை வைத்துப் பார்த்தால், மாத இறுதிக்குள் ஒரு சிறு ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற சூழலே நிலவுகிறது.

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

இருப்பினும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், வரும் வாரம் வெளிவர இருக்கிறது. அதன் தன்மையைப் பொறுத்து நிஃப்டியின் போக்கு மாற வாய்ப்பிருப்பதால், அனைத்துவிதமான டிரேடர்களும் பெரிய அளவிலான பொசிஷன்களை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

செவ்வாயன்றும், புதனன்றும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிர்ப்பது ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஸ்ட்ராட்டஜி ஆகும்.

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

வால்யூம் இல்லாமல் திடீர் இறக்கங்கள் வந்தால், ரெக்கவரியை எதிர்பார்த்து சிறிய அளவிலான லாங் சைட் வியாபாரத்துக்கு முயலலாம்.  கேப் ஓப்பனிங் வந்தால் நிஃப்டி செட்டிலாகும் வரை வியாபாரத்தைத் தவிருங்கள். ஏற்கெனவே கூறியதைப் போல் ஷார்ட் சைட் வியாபாரத்தை முழுமையாகத் தவிர்க்கவேண்டிய காலகட்டம் இது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில்கொள்ளவும்.

நிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!