Published:Updated:

சந்தையில் உற்சாகமான போக்கு; சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது - 23-07-2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்தையில் உற்சாகமான போக்கு; சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது - 23-07-2018
சந்தையில் உற்சாகமான போக்கு; சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது - 23-07-2018

சந்தையில் உற்சாகமான போக்கு; சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது - 23-07-2018

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்வதேச சந்தைகளின் வர்த்தக யுத்தம் பெரிதாகக்கூடிய சாத்தியம் உள்ள நிலையில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்ற கவலையில் சற்று தொய்வுற்றிருக்கும் நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று நல்ல முன்னேற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 36,749.69 என்ற புதிய உயரத்தைத் தொட்டபின், இன்று 36,18.60 என்ற நிலையில், 222.23 புள்ளிகள். அதாவது 0.61 சதவிகித லாபத்துடன் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 74.55 புள்ளிகள். அதாவது, 0.68 சதவிகிதம் முன்னேறி 11,084.75-ல் முடிவுற்றது.

சந்தையில் உற்சாகமான போக்கு; சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது - 23-07-2018

கடந்த வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் நடந்த மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றது, சந்தையின் உற்சாகத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அதைவிட முக்கியமாக, எஃப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட 88 பொருள்களின் மீதான GST விதிப்பை கணிசமாகக் குறைக்க GST கவுன்சில் முடிவுசெய்திருப்பது இன்றைய ஏறுமுகத்திற்குக் காரணம்.

மேலும், சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டின் ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித அதிகரிப்பு பற்றிய கொள்கையைக் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, டாலரின் மதிப்பு மற்ற கரன்சிகளுக்கெதிராக சிறிது மதிப்பிழந்தது மட்டுமின்றி, இந்திய டாலருக்கெதிராகவும் சிறிது பின் தங்கியது சந்தையின் உயர்வுக்கு ஒரு காரணம்.  

இந்திய நிறுவனங்களின் நடப்பாண்டின் முதல் காலாண்டு செயல்பாடுகுறித்த அறிக்கைகள் ஓரளவு உற்சாகமூட்டக்கூடியதாக அமைந்ததும்கூட, முதலீட்டாளர்களைப் பங்குகள் வாங்கத் தூண்டியது எனலாம்.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

யு.பி.எல்  14.8%
வேதாந்தா 4.4%
பஜாஜ் ஃபைனான்சியல் 4.1%
அதானி போர்ட்ஸ் 3.8%
ஐ.டி.சி  3.8%
பார்தி ஏர்டெல் 3.5%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 3.3%
மாருதி சுசூகி 3.3%
டாடா ஸ்டீல் 2.7%
ஏசியன் பாயின்ட்ஸ் 2.6%
அல்ட்ராடெக் சிமென்ட்  2.3%
ஸ்டேட் பேங்க் 2%
பி.சி.ஜிவெல்லர்ஸ் 14.5%
எல்&டி.ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் 10%
ஹாவெல்ல்ஸ் 9.1%
பாட்டா இந்தியா 7%

விலை சரிந்த பங்குகள் :

ஹீரோ மோட்டோ கார்ப் 6.2%
பஜாஜ் ஆட்டோ 5.3%
விப்ரோ 2.4%
டெக் மஹிந்திரா 1.8%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 1.8%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1529 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1061 பங்குகள் விலை சரிந்தும், 186 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு