Published:Updated:

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

Published:Updated:
பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

விவசாயத்தையும் முதலீட்டையும் ஒருவிதத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். முதலீடு என்பதும் விவசாயம் போலத்தான். விவசாயத்தில் எப்படி சிறு விவசாயி முதல் பண்ணையார்கள் வரை உள்ளனரோ அதுபோலத்தான் முதலீட்டிலும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் என்று எந்தப் பேதமும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சம்பாதிக்கும் காலத்தில் சிறு தொகையையாவது முதலீடு செய்பவர்கள் மட்டுமே, பிற்காலத்தில் அதை பெரும் தொகையாக அறுவடை செய்ய முடியும். ஷேர் மார்க்கெட் ஏறுகிறது, இறங்குகிறது என்று சாக்குப்போக்குச் சொல்பவர்கள் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்க முடியும்.

விவசாயத்தில் எப்படி நெல், கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை உணவுப்பயிர் என்றும் கரும்பு,  தேக்கு, டீ, காபி போன்றவற்றைப் பணப்பயிர் என்றும் சொல்கிறார்களோ அதுபோல முதலீட்டிலும் கடன் சார்ந்த ஃபண்டுகளை உணவுப்பயிருக்கும், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளை பணப்பயிருக்கும் ஒப்பிடலாம்.

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

குறுகிய காலப் பயிர்களாகிய நெல், கோதுமை, சிறுதானியம் போன்றவற்றை அன்றாட தேவைக்கும், மா, பலா, தேக்கு போன்றவற்றை நீண்ட காலத் தேவைக்கும் பயிரிடுகிறோம். அதுபோல குறுகிய காலத் தேவைக்கு லிக்யூட் ஃபண்ட், டெப்ட் ஃபண்டுகளிலும் நீண்ட காலத் தேவைக்கு பேலன்ஸ்டு ஃபண்ட், பங்கு சார்ந்த ஃபண்டுகளிலும் (செல்வம் சேர்ப்பதற்கு) முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடு செய்வதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை. ஒருசில அடிப்படை விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்டாலே போதும். ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டால் அது தினமும் வளருவது கண்கூடாகத் தெரியும். அதாவது வாழை மரத்தின் அடியில் தோன்றும் வாழைக்கன்றை வெட்டினால், சிறிது நேரத்தில் அது வளருவது கண்கூடாகத் தெரியும். எல்லாத் தாவரங்களிலும் இலை, கிளை, பூ, காய், வேர் என ஏதேனும் ஒன்று தினமும் நேர் முகமாகவோ, மறைமுகமாகவோ வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதுபோலத்தான் நாம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் செய்யும் முதலீடும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் வளர்ச்சியைக் கணக்கிட இரு காரணிகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!



1. யூனிட்கள் எண்ணிக்கை 2. என்.ஏ.வி மதிப்பு.

இந்த இரண்டின் பெருக்குத் தொகை அன்றைய மதிப்பாக இருக்கும். பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை யூனிட்களாகப் பிரிப்பார்கள். என்.எஃப்.ஓ-வின்போது புது ஃபண்டின் ஆரம்ப விலை பொதுவாக ரூ.10 ஆக இருக்கும். உதாரணமாக, 5,000 ரூபாயை முதலீடு செய்தால் 500 யூனிட்டுகள் கிடைக்கும். (500x10 = 5,000)

மார்க்கெட் ஏறும்போது 10 ரூபாய் என்.ஏ.வி மதிப்பு உயரும். உதாரணமாக, ரூ.11 இருக்கும்பட்சத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் 454 யூனிட்டுகள் கிடைக்கும் (454.45x11=5,000)

அடுத்த மாதத்தில் சந்தை இறங்கும்பட்சத்தில் என்.ஏ.வி குறைந்து 9 ரூபாயாக இருக்கும்போது 555 யூனிட்டுகள் கிடைக்கும். (555.5x9=5,000)

தாவரத்தில் எப்படி இலை அல்லது தண்டு வளருகிறதோ அதுபோல் யூனிட்களின் எண்ணிக்கை அல்லது என்.ஏ.வி மதிப்பு வளரும். செடியின் உயரம் வளரும்போது, அதை நெடுக்குவாட்டில் வளருகிறது (Vertical Growth) என்போம். அதன் பருமன் வளரும்போது, அதை பக்கவாட்டில் வளருகிறது (Horizantal Growth) என்போம். 

பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

அதுபோல முதலீடு செய்யும்காலத்தில், மார்க்கெட் ஏறும்போது என்.ஏ.வி மதிப்பு ஏறுகிறது. அதை வெர்டிகல் குரோத் என்போம். மார்க்கெட் குறையும்போது யூனிட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதை ஹரிசாண்டல் குரோத் என்போம். இப்படியாக நாம் செய்யும் முதலீடு, மாதாமாதம் ஏதேனும் ஒருவகையில் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

 நிதியாண்டு 2015-2016-ல் இந்தியாவில் எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் சராசரியாக முதலீடு செய்த தொகை ரூ.3,000 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் (2016-2017) ரூ.4,200 கோடியாக வளர்ந்துள்ளது.

இதேநிலை இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் உலகளவில் நமது இந்திய மார்க்கெட் உச்சத்தை பெறும். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 40% முதலீட்டில் வளர்ச்சியடைந்தாலும், முதலீட்டாளர் எண்ணிக்கையில் 10% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது முதலீடு பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இன்னும்  ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது. உலகளவில், வளரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ள  நிலையில், முதலீடு செய்யும் அனைவரும் உன்னத நிலையை அடைய முடியும்.

1979-ல் மும்பை பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டபோது சென்செக்ஸ் மதிப்பு 100-ஆக இருந்தது. இன்றைக்கு அது 31,000-ஐ கடந்து நிற்கிறது. ஆரம்ப நாள் முதல் ஒவ்வொரு 10 வருடமாகப் பிரித்துப் பார்க்கும்போது அது இயற்கையாகவே 6 மடங்கு வளர்ந்துள்ளது தெரியும். 1979-ல் 100 புள்ளி, 1989-ல் 600 புள்ளி,   1999-ல் 3600 புள்ளி, 2009-ல் 21000 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 2019-ல் சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும்.

கடந்த 25 ஆண்டுகளில்  பல்வேறு முதலீடுகளை ஒப்பிடும்போது, டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே 25%-க்கும் மேலாகக் கூட்டு வட்டியில் வருமானம் கொடுத்துள்ளது. எனவே, இனியாவது இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் பருவத்தே முதலீடு செய்து பலன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism