Published:Updated:

2025-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? - கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்

கோவையில் வரும் ஆகஸ்ட்18, 19-ம் தேதிகளில் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் கருத்தரங்கை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கில் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு 'விஷன் 2025' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தங்களின் கருத்துகளைப் பகிர்கிறார்கள்.

2025-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? - கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்

இந்தக் கான்க்ளேவ் நிகழ்ச்சியில், 'இந்தியா 2025 - வெற்றியாளர்களை அடையாளம் காண்போம், தோல்வியாளர்களைத் தவிர்ப்போம் (India 2025 - Indentifying Winners And Avoding  Losers) என்கிற தலைப்பில் பங்குச் சந்தை குறித்து விரிவாக யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன் பேச உள்ளார்.

ஜி.மாறன் பங்குச் சந்தை வர்த்தகத்தில் 24 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் பங்குச் சந்தை குறித்தும் பங்குகளில் முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் குறித்தும் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும், யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற பங்கு தரகு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவை கான்க்ளேவ்யில் கலந்துகொண்டு ஜி.மாறன் உரையைக் கேட்பதன் வாயிலாகப் பல்வேறு முதலீட்டு திட்டங்கள், முதலீ்ட்டு வாய்ப்புகள் குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ஒரு மிகப்பெரிய அனுபவமாகவும் இருக்கும்.

2025-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? - கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்

பங்குச் சந்தை குறித்து ஆலோசனை பெற விரும்புவர்கள், ஏற்கெனவே பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்தக் கான்க்ளேவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், https://www.vikatan.com/special/tickets/nanayam-conclave/ என்ற லிங்குக்குச் சென்று தங்களது பெயரைப் பதிவு செய்யவும்.