Published:Updated:

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். ஜி.எஸ்.டி ஸ்பெஷல் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவரிடம், “அட்டகாசமான கவரேஜ். இந்தப் புதிய வரிவிதிப்புப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தையும் தந்திருக் கிறீர்கள்’’ என்று நம்மைப் புகழ, நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

‘‘சி.டி.எஸ்.எல் நிறுவனப் பங்கு சந்தையில் பட்டியலான அன்றே இந்தப் போடு போட்டிருக்கிறதே!’’ என்றோம் வியப்புடன்.

‘‘சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (சி.டி.எஸ்.எல்), ஐ.பி.ஓ வந்தபோது அதன் பங்குகளுக்கு 170 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. பணம் படைத்தவர்கள்கூட மிகக் குறுகிய காலத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி, இந்தப் பங்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். கிரே மார்க்கெட்டிலும் இந்தப் பங்குக்கு நல்ல தேவையிருந்தது. ஐ.பி.ஓ-வில் இந்தப் பங்கின் விலை ரூ.149 என நிர்ணயமானது. இது சந்தையில் பட்டியலிடப்படும்போது  பிரீமியத்தில்தான் பட்டியலாகும்  என்கிற எதிர்பார்ப்பு சந்தை முழுக்க நிரம்பியிருந்தது.  அதன்படி இந்தப் பங்கு இன்று சந்தையில் டிரேட் ஆகத் தொடங்கியவுடனே விலை   ஜிவ்வென்று  அதிகரித்தது. இன்றைக்கு மட்டும் ஏறக்குறைய 1.5 கோடி பங்குகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகத்தின்போது பங்கின் விலை ரூ.268-க்கு அதிகரித்தது.  இது ஏறக்குறைய 80% அதிகரிப்பாகும். இந்த நிறுவனத்தின் புரமோட்டர் பி.எஸ்.இ என்பதால், இதன் பங்குகள் என்எஸ்இ-ல் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன” என்றவருக்கு, சில்லென்று பாதாம் பாலைத் தந்தோம். அதைக் கொஞ்சமாகப் பருகியவர், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.      

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

‘‘கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ வருகிறதே, நிறுவனம் எப்படி?’’ என்று விசாரித்தோம்.

‘‘கோத்ரேஜ் தனது துணை நிறுவனமான கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் டைவர்சிஃபைடு நிறுவனமாக விளங்குகிறது. இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.400 கோடி திரட்ட உள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது இந்த நிறுவனத்தில் 60.8 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் நிதியை வைத்துத் தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. பெரிய நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பதால், ஐ.பி.ஓ வரும் தேதியை அறிய ஆவலோடு காத்திருக்கலாம்’’ என்றார் புன்னகைத்தபடி.

‘‘எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி எப்படி முடிந்தது?’’ என்று ஆர்வத்துடன் வினவினோம்.

‘‘ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதையொட்டி கடந்த வாரத்தில் சந்தை இறங்கிக் காணப்பட்டது. எஃப் அண்ட் ஓ முதிர்வு அன்று பெரும்பாலான பொசிஷன்கள் ஜூலைக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்டு இருக்கின்றன. ஜூலையில் நிஃப்டி 9450-9400-க்கு இறங்கக்கூடும் என அனலிஸ்ட்கள் தெரிவிக்கிறார்கள். நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தை இதுவரைக்கும் சுமார் 20% ஏற்றம் கண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி அமலுக்கு வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தையின் மதிப்பீடு அதிகம் என்கிற கவலை பரவலாக இருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, மும்பைப் பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை இரண்டும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எஸ்.ஆர்.இ.ஐ  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் மற்றும் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களும் எஃப் அண்ட் ஓ-வில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வர்த்தகமாகத் தொடங்கியிருக்கின்றன. தற்போது வரை 200 நிறுவனங்கள் எஃப் அண்ட் ஓ வர்த்தகப் பிரிவில் உள்ளன’’ என்று விஸ்தாரமாக விளக்கம் தந்தார்.  

‘‘11 நிறுவனப் பங்குகளைத் தனது எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாவதைத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறதே, பி.எஸ்.இ...’’ என்று கேட்டோம்.

‘‘தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாகச் சந்தையின் விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றாததன் காரணமாக 11 நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தற்காலிகமாக தடை செய்திருக்கிறது மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். பிர்லா ட்ரான்ஸ் ஏசியா கார்பெட்ஸ்,  ஜே எனர்ஜி அண்ட் எஸ் எனர்ஜி, அனில், கோ டூல் இந்தியா, கிருஷ்ணா ஃபேப்ரிக்ஸ், ஆர்பிட் கார்ப்பரேஷன், ரப்பர் புராடக்ட்ஸ், சான்ஷியா குளோபல் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ், எஸ்.எம் எனர்ஜி டெக்னிக் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சாஃப்ட்வேர் டெக்னாலஜி குரூப் இன்டர் நேஷனல் மற்றும் பூச்சிராஜு இண்டஸ்ட்ரீஸ் போன்றவையே அந்த நிறுவனங்கள். இந்த நிறுவனப் பங்குகளின் வர்த்தகம் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் தடை செய்யப்பட இருக்கிறது.

இந்தப் பங்குகளைக் கைவசம் வைத்திருந்தால், உடனே விற்றுவிட்டு வெளியேறிவிடவும். பிற்பாடு வருத்தப்பட வேண்டாம் என்பதற்காகத் தான் இந்தப் பங்குகள் குறித்த தகவல்களைச் சொல்கிறேன்’’ என்று முதலீட்டாளர்களை உஷார்படுத்தினார் ஷேர்லக்.

‘‘மெர்லின் அக்ரி புராஜெக்ட்ஸ் நிறுவனத்தை கேபிட்டல் மார்க்கெட்டிலிருந்து தடை செய்திருக்கிறதே செபி, என்ன காரணம்?’’ என்கிற சந்தேகத்தைக் கேட்டோம்.

‘‘பொதுப் பங்கு வெளியீட்டுக்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி இந்த நிறுவனத்தையும், அதன் இயக்குநர்களையும் கேப்பிட்டல் மார்க்கெட்டில் செயல்படத் தடை விதித்திருக்கிறது. இந்த நிறுவனம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள பங்குகளை 56 பேருக்கு வழங்கி யிருக்கிறது. 50 பேருக்கு மேல் பங்குகளை வழங்கும் பட்சத்தில் அது பொதுப் பங்கு வெளியீடாகவே கருதப்படும். ஆனால், இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கு முன்பே இப்படிச் செய்திருக்கிறது. எனவேதான், செபியானது  இந்த நிறுவனத்தை கேப்பிட்டல் மார்க்கெட்டிலிருந்து நீக்கியிருக்கிறது’’ என்று சொன்னவர், கையில் கட்டியிருந்த வாட்சில் மணியைப் பார்த்தார். புறப்படத் தயாராகிறார் என்று புரிந்துகொண்டோம்.

‘‘பி நோட் முதலீடுகள் ஏழு மாத உச்சத்தை அடைந்திருக்கிறதே?’’ என்று புருவத்தை உயர்த்திக் கேட்டோம்.

‘‘பங்கேற்பு ஆவணங்கள் (பார்ட்டிசிபேட்டரி நோட்  - பிநோட்) வழியாக இந்தியச் சந்தையில் செய்யப்படும் முதலீடு கடந்த ஏழு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, பி-நோட் முதலீடு ரூ.1.81 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ரூ.1.99 லட்சம் கோடியாக இருந்தது. அக்டோபர் மாதத்துக்குப்பின் கடந்த மே மாதத்தில்தான் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றவர், புறப்படுவதற்காக எழுந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? இந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்’’ என்று கெஞ்சினோம்.

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

‘‘கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை நிலையான ஓர் ஏற்றத்தின் போக்கு சந்தையில் இருந்து வந்தது. ஆனால், சமீபத்திய இரண்டு வாரங்கள் கரடியின் ஆதிக்கம் இருக்கவே செய்தது. ஜி.எஸ்.டி வரிச் சட்டம் நடைமுறைக்கு வருவதை ஒட்டியும் சந்தை இறங்கியது. தற்போதைய நிலையில், நம்முடைய சந்தையைப் பாதிக்கக்கூடும் காரணிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், வரும் நாள்களில் சந்தையின் நகர்வுகளைப் பின்வரும் ஐந்து முக்கிய விஷயங்களே தீர்மானிப்பவை யாக இருக்கும்.

கச்சா எண்ணெய் விலைப் போக்கு, அமெரிக்க வட்டி விகிதம் குறித்த முடிவுகள், பருவ மழை அளவு, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய நிகழ்வுகள் மற்றும் நிறுவனங்களின் லாப வளர்ச்சி ஆகிய ஐந்து விஷயங்களைப் பொறுத்தே சந்தையின் செயல்பாடு இருக்கும்.

அடுத்து வரும் வாரங்களில் சந்தை இறங்கும்பட்சத்தில்,  பாரம்பர்யம்மிக்க நல்ல நிறுவனப் பங்குகளின் விலை மலிவாகக் கிடைக்கும்பட்சத்தில் அவற்றை வாங்கிச் சேர்க்க தவறாதீர்கள். இனி சந்தையின் ஒவ்வொரு இறக்கத்தையும் முதலீட்டுக்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும்” என்று சொன்னவர் புறப்படத் தயாரானார்.

‘‘ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதையொட்டி எந்தெந்தப் பங்குகளை ஃபாலோ செய்யலாம்?’’ என அவருடன் நடந்தபடியே கேட்டோம். 

‘‘நீண்ட கால முதலீட்டுக்கு... இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், மாருதி சுஸூகி, ஓ.என்.ஜிசி, பேங்க் ஆஃப் பரோடா.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism