Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964


இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் சந்தையானது இறக்கத்தின் போக்கிலேயே பெரும்பாலும் நிறைவு செய்திருப்பதுடன், முந்தைய வாரத்தைக் காட்டிலும் இறங்கி வர்த்தகமானது. ஆனால், வியாழன் அன்று சற்று ஏற்றமடைந்தது ஆறுதல் அளித்தது. எனினும், அது ஒரு ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ரோல் ஓவர் செயல்பாட்டை உருவாக்க மட்டுமே நடந்த நிகழ்வாகவே தெரிகிறது. இதனால் வெள்ளி அன்று மீண்டும் இறக்கத்துக்கான மூடில் இருந்தது. வர்த்தக முடிவில் சந்தை சற்று ஏறி முடிந்தது.  

சமீப காலத்தில் குறைவான வரம்புகளில் வர்த்தகமான எக்ஸ்பைரிகளில் ஒன்றுதான் கடந்த ஜூன் மாத எக்ஸ்பைரி ஆகும். மேலும், 2017-ம் ஆண்டில் ஜூன் மாதத்தில்தான் குறைவான ஏற்ற இறக்கம் இருந்தது. இதை ஏற்றத்தின் போக்கு தொடர்வதற்கான அறிகுறி யாகவும் பார்க்கலாம். ஆனால், ஏற்றத்தின் போக்கு ஒருமுறை விழ ஆரம்பித்தால், குறியீடு களில் ஏற்படும் ஏற்ற இறக்கமானது, நம் மனநிறைவைக் குலைக்கும். எனவே, ஜூலையில் நாம் சில பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், சந்தையின் நிலைப்பாட்டில் காளையின் போக்கு தொடர்வதால், இறக்கங்கள் குறைவாகவே இருக்கும். கடந்த ஐந்து மாதங்களாக இல்லாமல் இருந்த கரடியின் ஆதிக்கம், தற்போது சந்தையில் உருவானால் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பார்க்கலாம். ஆனாலும், கரடி தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள சந்தைக்கு நெகட்டிவான செய்திகள் தேவைப்படும். அது நடக்காதபட்சத்தில் அதிகமான இறக்கங்கள் ஏற்படுவது கடினமே.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேங்க் நிஃப்டி ஆரம்பத்தில் நன்றாகச் செயல்பட்டது. ஆனால், தொடர்ந்து மேலே ஏற்றமடைவதற்கான போக்கிலிருந்து பின்வாங்கி இருக்கிறது. இதுவும் நிஃப்டி ஏற்றமடைவதற்குத் தடையாக மாறியிருக்கிறது. இதைப் போலவே, நிஃப்டி ஐ.டி குறியீடும் ஏற்றமடையவில்லை. பெரும்பாலான முன்னணி ஐ.டி நிறுவனப் பங்குகள் ஏற்றமடைய இன்னும் திணறுகின்றன. சந்தையின் செயல்பாட்டுக்கு அதிகம் உதவும் இந்த இரண்டு துறைகளினாலும்,  சில பங்குகளின் உதவியினாலும்தான் நிஃப்டி தன்னிலையை இழக்காமல் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.

தற்போதைய நிலையில் சந்தை குறியீடுகளில் எந்தவொரு புதிய பொசிஷன்களையும் உருவாக்கு வதற்கான தெளிவான அறிகுறிகள் தென்பட வில்லை. எனவே, குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. நிஃப்டி 9400 நிலைக்குக் கீழே போகாத வரை, பங்குகளில் ஏற்றத்துக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். 

ஐ.டி.சி (ITC)

தற்போதைய விலை: ரூ.323.65


வாங்கலாம்


எஃப்.எம்.சி.ஜி பங்குகளுக்குச் சமீப காலமாகவே நல்ல தேவை இருக்கின்றன. அவை பாதுகாப்பானவையாக இருக்கும் அதேநேரம், வளர்ச்சி அடையக்கூடியவையாகவும் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, ஐ.டி.சி நன்றாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

ஐ.டி.சி பங்கின் விலை நகர்வு, வர்த்தக அளவு, நகர்வுகளின் வேகம் மற்றும் டெரிவேட்டிவ் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், லாங் பொசிஷன் எடுப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. ஃப்யூச்சர்ஸ் அல்லது டெலிவரி இரண்டிலும் வர்த்தகம் செய்யலாம். ரூ.305-310 என்ற விலை வரம்பில் வாங்கலாம். அடுத்த மூன்று மாதங்களில் ரூ.350-360 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.295 வைத்துக்கொள்ளவும்.

பார்தி ஏர்டெல் (BHARTIARTL)

தற்போதைய விலை: ரூ.379.70


வாங்கலாம்


டெலிகாம் பங்குகளுக்கான சிறப்பான காலம் இன்னும் உருவாகவில்லை. இருந்தபோதிலும்,  பார்தி ஏர்டெல் பங்கின் விலை நகர்வுகள் நீண்ட காலமாகவே ஏற்ற இறக்கமில்லாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்தது.  இந்த நிலையில், கடந்த வாரம் அந்தப் போக்கு முடிவுக்கு வந்து ஏற்றமடைந்து வர்த்தகமாவதற்கான சாத்தியங்கள் உருவாகி இருக்கின்றன. ரூ.386 என்ற நிலையில் பிரேக் அவுட் பாயின்ட் உருவாகி இருக்கிறது. இந்த நிலையைக் கடக்கும்பட்சத்தில், அந்தப் பங்கில் நகர்வு நன்றாக இருக்கும். எனவே, பார்தி ஏர்டெல் பங்கை வாங்கலாம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பங்கின் விலை ரூ.410 என்ற நிலைக்கு உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.375 வைத்துக்கொள்ளவும்.

இண்டிகோ (INDIGO)

தற்போதைய விலை: ரூ.1,166.55

வாங்கலாம்


ஏர்லைன் நிறுவனப் பங்குகள் தற்போது சிறப்பான போக்கில் உள்ளன. முன்பு பரிந்துரை செய்த ஸ்பைஸ்ஜெட் சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இண்டிகோ வந்திருக்கிறது. பட்டியல் ஆனதில் இருந்து இந்தப் பங்கில் நீடித்து வந்த ஏற்ற இறக்கமில்லாத நிலை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் பங்கில் ரூ.1,230 என்ற நிலையில் பிரேக் அவுட் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையைத் தாண்டி நகர்ந்தால், பெரிய ஏற்றத்துக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். ரூ.1,400 வரை உயர வாய்ப்புண்டு. 12 மாதங்கள் வைத்திருக்கும் நோக்கில் இந்தப் பங்கை இறங்கும்போதெல்லாம் வாங்கலாம். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.