“இன்றைக்குக் காலையில் திடீர்னு மும்பை வந்துட்டேன். சாயங்காலம் நானே உமக்கு போன் செய்றேன்’’ என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி யிருந்தார் ஷேர்லக். நாம் கேள்விகளுடன் தயாராக இருக்க, மாலை ஆறு மணிக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் நாம் கேட்ட கேள்வி களும், அதற்கு ஷேர்லக் அளித்த பதில்களும்...

“ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதே..?”

“கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று மட்டும் எஸ்.பி.ஐ வங்கி பங்கு 4.58% உயர்ந்து ரூ.312.80 என்ற நிலையில் வர்த்தகமானது. எஸ்.பி.ஐ, ரூ.1 கோடி வரையிலான சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகக் குறைப்பதாக அறிவித்ததுதான் இந்த ஏற்றத்துக்குக் காரணம். எஸ்.பி.ஐ பங்கு விலை ஏற்றம் கண்டதன் மூலம் ஒரே நாளில் அதன் சந்தை மதிப்பு ரூ.11,557 கோடி உயர்ந்தது. எஸ்.பி.ஐ வங்கி, சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கக் காரணம், நாட்டின் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதன் வரலாற்று இறக்கத்தை அடைந்ததும், ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தைக் குறைக்கும் நிலையில் இருந்ததும்தான்.”

“ஹெச்.டி.எஃப்.சி வங்கியைவிட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க என்ன காரணம்?”

“வங்கிப் பங்குகளைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்டுகளின் முதன்மைத் தேர்வாக ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இருந்து வந்தது. அந்த இடத்தை ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் தற்போது பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 233 ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 230 ஃபண்டுகள் மூலம், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பளவில் ரூ.29,594 கோடியுடன் ஹெச்.டி.எஃப்.சி பேங்க்தான் முன்னிலையில் உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-ம் ஆண்டில் இதுவரை ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு 48 சதவிகிதமும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு 18 சதவிகிதமும் விலை உயர்ந்திருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் முதலீடு செய்யக் காரணம், அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்புவதே.’’

“கடந்த ஜூலையில் சந்தையின் ஏற்றத்துக்குச் சாதகமாக இருந்த காரணிகள் என்னென்ன?”

“ஜூலை மாதத்தில் சந்தை அடைந்த வளர்ச்சிக்குக் காரணம், எதிர்பார்த்த அளவு மழைப் பொழிவும், அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளும்தான். இதனால் சந்தையில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் பாசிட்டிவாக இருந்தது. இதனால் தான் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. அதோடு வெளிநாட்டு முதலீடுகளும் அதிகமாகவே உள்ளன.

சந்தையின் ஏற்றத்துக்கு உதவிய பங்குகள் என்று பார்க்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 17%, எஸ்.பி.ஐ 14.2%, ஹெச்.டி.எஃப்.சி 10.5% உயர்ந்து முன்னிலை வகித்துள்ளன. ஆனால், ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்தபடி பாசிட்டிவாக இருக்காது என்றாலும், சந்தைக்குள் முதலீடு குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால்தான் சந்தை சரிவடைவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஜூலையில் மட்டும் வெளிநாட்டு முதலீடுகள் ரூ.3,706 கோடி வந்துள்ளது. உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் ரூ.8,129 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலையில், உலகப் பங்குச் சந்தைகளில் இந்தியச் சந்தைகள்தான் முன்னிலையில் இருந்தன.”

“காலாண்டு முடிவுகள் எப்படி?”

“இதர வருமானம் அதிகரித்ததால், பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிகர லாபம் 93% அதிகரித்தது. செயல்பாட்டு லாபம் அதிகரித்ததால், சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 18% அதிகரித்து, ரூ.90 கோடியாக அதிகரித்துள்ளது. வருமானம் அதிகரிக்காததால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிகர லாபம் 32% குறைந்துள்ளது. செலவுக் குறைப்பு, சில்லறை வணிக வளர்ச்சி போன்றவற்றால் பஞ்சாப் நேஷனல் பேங்கின் நிகர லாபம் 12% அதிகரித்துள்ளது. மேலும், நிகர வாராக் கடனும் குறைந்துள்ளது. செயல்பாட்டு லாபம் மற்றும் மொத்த வருமானம் குறைந்து போனதால், யூகோ பேங்கின் நிகர லாபம் 50% குறைந்துள்ளது.”

“பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரமோட்டர் ஹோல்டிங் 16 வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறதே?”

“இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களில், புரமோட்டர்கள் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக் கிறது. சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 சதவிகிதப் பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவித்ததையடுத்து புரமோட்டர்கள், தங்களின் ஹோல்டிங்கைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், பங்குகள் நல்ல பிரீமியம் மதிப்பில் ஏற்றமடைந்தபின் கணிசமான சதவிகிதப் பங்குகளை விற்று, புரமோட்டர்கள் பணத்தை எடுத்திருக்கிறார்கள். இதனால் பிஎஸ்இ 500 நிறுவனங்களின் சராசரி புரமோட்டர் ஹோல்டிங் 49.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. டிசம்பர் 2001-க்குப் பிறகு இத்தனை வருடங்களில் இதுதான் குறைவான சதவிகிதம் ஆகும். சந்தை உச்சத்தை அடைந்த டிசம்பர் 2007-ல் இது 59.1 சதவிகிதமாக இருந்தது. புரமோட்டர் ஹோல்டிங் குறைவது சந்தையின் பாசிட்டிவ் போக்குக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.”

“சந்தை அடைய வேண்டிய உச்சத்தை அடையவில்லை என்கிறார்களே?”

“இந்தியச் சந்தைகள் அதன் வரலாற்று உச்சத்தில் இருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் 23 சதவிகிதமும், கடந்த நான்கு ஆண்டுகளில் 74 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. ஆனால், 2008 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளின் பங்குச் சந்தை நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியச் சந்தைகள், அடையவேண்டிய உச்சத்துக்கு வெகுதொலைவில்தான் இருக்கின்றன என்கிறார்கள். பங்குகளின் மதிப்பீடுகள், 2008-ல் இருந்ததைவிட தற்போது குறைவாகவே உள்ளன. உதாரணத்துக்கு, நிஃப்டியின் பிரைஸ் டு புக் (price-to-book) மடங்கு, தற்போது 3.6-ஆக உள்ளது. 2008-ல் இது 6.6 மடங்காக இருந்தது. மேலும், ஜி.டி.பி-யில் சந்தை முதலீடு தற்போது 90 சதவிகிதமாக உள்ளது. ஜனவரி 2008-ல் இது 150 சதவிகிதமாக இருந்தது.

நிறுவனப் பங்குகளின் வருமானமும் ஜி.டி.பி.யில் தற்போது 3 சதவிகிதமே உள்ளது. ஆனால், நிதியாண்டு 2007-2008-ல் இது 7.1 சதவிகிதமாக இருந்தது. அதேபோல், அரசுக் கடன் பத்திரங்கள் வருமானம், 2008-ல் இருந்ததைவிட இப்போது குறைவாகவே இருக்கிறது. மிக முக்கியமாக, மூலதனச் செலவும் 2008-ல் இருந்ததைவிட இப்போது மிகக் குறைவுதான். மேலும், கமாடிட்டி சுழற்சியும் 2008-ஐக் காட்டிலும் தற்போது குறைவான நிலையில் இருப்பதோடு மட்டும் இல்லாமல், கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகவே இருக்கிறது. கூடவே உள்நாட்டு முதலீடுகள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சேமிப்புக் கணக்கு, வைப்புக் கணக்கு, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகிய முதலீடுகள் எல்லாம் கவர்ச்சியை இழந்துவிட்ட தால், பங்குச் சந்தையில் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், இந்தியச் சந்தைகள் தங்களின் உண்மையான உச்சங்களை அடையும்.”

‘‘கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது...?’’

“நீண்ட கால முதலீட்டுக்கு... பி.என்.பி, டெக் மஹிந்திரா, எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல்.”

குறையும் டாலர் மதிப்பு... இனி என்ன ஆகும்?

எம்.அரவிந்த், சைக்னஸ் கன்சல்டன்ஸி சர்வீசஸ்.

‘‘டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, கடந்த 2015 ஜூலையில் இருந்த நிலைக்கு வந்துள்ளது. மாதாந்திர நிலைப்பாட்டினை வைத்துப் பார்க்கும்போது, கடந்த டிசம்பரில் (23.11.16=68.88) தொடங்கிய டாலரின் சரிவு இன்றும் (2.8.17=63.59) தொடர்கிறது. டாலருக்குச் சாதகமற்ற அரசியல், பொருளாதாரச் சூழல்களே உலக அரங்கில் தொடர்ந்து நிலவுகின்றன.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி கடந்த புதனன்று, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டியை 0.25% குறைத்தது. இருந்தாலும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நீண்ட காலக் கடன் பத்திரச் சந்தை முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் லாபகரமாக இருப்பதால் (கடந்த 2.7.17 அன்று 6.47%), அந்நிய முதலீட்டாளர்கள் நம் நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர இது முக்கியக் காரணம். வரும் மாதங்களில் மீண்டும் பணவீக்கம் மேல்நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய வங்கியின் கவனமும் அக்கறையும் நாணய மதிப்பீட்டைக் காட்டிலும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்துவரும் ஓரிரு வாரங்களில் 63.93 – 62.80 என்ற நிலைகளில் டாலர் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம். (டாலருக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டால், வரும் மாதங்களில் மீண்டும் 64.90 என்கிற இலக்கை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.)