Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் சந்தையானது அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்ததைப் பார்க்க முடிந்தது. வாரத் தொடக்கத்தில் கண்ட ஏற்றம், வாரத்தின் பிந்தைய நாள்களில் காணாமல் போய் இறக்கத்தைச் சந்தித்தது. மொத்தத்தில் கடந்த வாரம் முழுவதுமே ஏற்ற இறக்கமாகவே சந்தை நீடித்ததால், சந்தையின் போக்கு எந்தப் பக்கம் இருக்கிறது என்பதை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த வார நகர்வுகள் அதற்கு முந்தைய வாரத்தில் லாங் பொசிஷன்களில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தவர்களுக்கு அவற்றிலிருந்து வெளியேற நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. மேலும், ஏதோ ஒரு ஆர்வத்தில் பங்குகளை வாங்கியவர்களும் கடந்த வாரத்தில் பங்குகளின் விலை உயர்ந்தபோது, அவற்றை விற்க வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மொத்தத்தில் கடந்த வாரம் சந்தை சற்று நடுநிலையாகவே இருந்தது.

கடந்த வாரத்தில் ஐ.டி பங்குகள் பரவாயில்லை என்ற நிலையில் வர்த்தகமானது. ஆனால், அவை மேலும் ஏற்றமடைவதை இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து அதன் சி.இ.ஓ விஷால் சிக்கா வெளியேறும் செய்தி வெளியானதிலிருந்து சுக்குநூறாக்கியது. இதனால் நிஃப்டியின் ஏற்றத்துக்கு இந்த இரண்டு துறைகளாலும் உதவ முடியாத நிலை உருவானது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், பேங்க் நிஃப்டி மோசமாகவே இருந்தது. மேலும், நிஃப்டியின் இறக்கத்துக்கும் ஒரு காரணமாக அமைந்தது. பேங்க் நிஃப்டி வாரத்தின் இறுதியிலும் சற்று சோர்ந்து அழுத்தமான நிலையிலேயே தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



சந்தை நகர்வுகளில் நிதிநிலை முடிவுகளின் தாக்கம் முற்றிலுமாக முடிவுக்கு வந்த நிலையில் சந்தையானது தேர்ந்தெடுத்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யப்படும் சந்தையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், சந்தையின் நகர்வுகளானது வெளிவரும் செய்திகளால் தீர்மானிக்கப்படும் நிலையில் இருக்கின்றன. எனவே, வரும் வாரத்திலும் சந்தை ஏற்ற இறக்கத்தில்தான் தொடரும்.

வரும் வாரத்தில் வங்கி மற்றும் ஐ.டி துறை நிறுவனங்களில் மீண்டும் ஏற்றம் வரும்வரை, சந்தையின் பிரதானக் குறியீட்டு எண்களின் நகர்வுகளைப் பொறுத்து விற்பதா, வாங்குவதா என்று முடிவு செய்வது நல்லது.

நிஃப்டியில் புதிதாக டிமாண்ட் உருவாவதற்குமுன், அதன் கீழ்நிலை சப்போர்ட் நிலையான 9700 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஸ்பைஸ்ஜெட் (MODILUFT)

தற்போதைய விலை: ரூ.134.40


வாங்கலாம்

ஏர்லைன் நிறுவனப் பங்குகள் கடந்த வார இறக்கத்திலும் தங்களின் நகர்வுகளைச் சற்று தக்கவைத்துக்கொண்டன. அவற்றில் முன்னணியில் உள்ள இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகளின் விலை மீண்டும் அதிகரிப்பதைப் பார்க்க முடிந்தது.

இந்தப் பங்கின் நகர்வுகளைப் பார்க்கும்போது அதன் போக்கு நன்றாக இருக்கிறது. சார்ட் பேட்டர்னிலும் எதிர்காலத்தில் நல்ல ஏற்றங்களை இந்தப் பங்கு அடைவதற்கான அறிகுறிகளைக் காண முடிகிறது.

எனவே, தற்போதைய விலையில் மற்றும் ரூ.125 என்ற நிலை வரையிலும், இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த 4 முதல் 8 வாரங்களில் ரூ.170 என்ற நிலையை அடைய வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.110 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபைபர்வெப் இந்தியா (Fiberweb India)

தற்போதைய விலை: ரூ.348.00

வாங்கலாம்.


இது அதிகம் பிரபலமடையாத ஒரு பங்கு. டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இதன் போக்கு கடந்த ஒரு வருடமாக மிகச் சிறப்பாகவே உள்ளது. சமீபத்திய வாரங்களில் இந்தப் பங்கின் விலை சில இறக்கங்களுக்கு உள்ளானது. இதன் முதல் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவாக வந்திருப்பதால், எதிர்வரும் காலங்களில் இந்தப் பங்கு ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்தப் பங்கில் இறக்கம் முடிவுக்கு வந்து ஏற்றமடையும் நிலையை கடந்த வார விலை நகர்வுகள் தெளிவுபடுத்தியது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். அடுத்த மூன்று மாதங்களில் ரூ.410 வரை உயரலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பாரத் ஃபைனான்ஸ் (BHARATFIN)

தற்போதைய விலை: ரூ.876.60

வாங்கலாம்

தற்போதைய சந்தை மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்குச் சாதகமான நிலையைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் துறை நிறுவனப் பங்குகளின் வர்த்தகமும் நன்றாகவே உள்ளது. குறிப்பாக, எஃப் அண்ட் ஓ பிரிவில் இந்தப் பங்கு நிறுவனங்கள் பல சேர்க்கப்பட்டபிறகு. அவற்றில் முன்னணியில் பாரத் ஃபைனான்ஸ் உள்ளது. மேலும், இந்த நிறுவனம், பெரிய வங்கிகளுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்தப் பங்கின் மீது முதலீட்டாளர்களின் பார்வையைத் திருப்பியுள்ளது. இதனால் சந்தை இறக்கத்திலிருக்கும் நிலையிலும் இந்தப் பங்கின் நகர்வுகளில் ஏற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரத்தில் ரூ.895 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் சுமார் ரூ.865 வைத்துக்கொள்ளவும்.  

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு