இந்த நிதியாண்டின் (2017-18) முதலாம் (ஜூன்) காலாண்டு முடிவுகளைப் பெருவாரியான பெரிய நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்த முடிவுகளைப் பற்றி ஆலசி ஆராயும் நிபுணர்கள் ஒவ்வொருவிதமாகக் கருத்துச் சொல்கின்றனர். சிலர், கடந்த மார்ச் காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஜுன் காலாண்டு முடிவுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளதாகச் சொல்கின்றனர். இன்னும் சிலர், கடந்த சில காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான காலாண்டு முடிவுகள் தற்போது வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், முடிந்த ஜூன் காலாண்டு முடிவுகள் எப்படி இருந்தன எனப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

``2017-18-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவு, பெரும்பாலான நிறுவனங்களுக்கு மோசமானதாகவே அமைந்துவிட்டது. முதலாம் காலாண்டைப் பொறுத்தவரை, குறிப்பாக ஜி.எஸ்.டி-யால் நிச்சயமற்றத் தன்மை நிலவியதால், அது பல நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நிறுவனங்களின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தி, காலாண்டு முடிவுகள் மோசமாக அமைந்தன. இதுவரைக்கும் காலாண்டு முடிவுகள் வெளியாகியிருக்கும் 2,732 நிறுவனங்களின் கார்ப்பரேட் ஸ்கோர் கார்டை ஆய்வு செய்துபார்த்தால், இது நமக்கு சட்டெனப் புரியும்.

முதலாம் காலாண்டு முடிவு

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2,732 நிறுவனங்களில், 2016-17-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 12,56,013 கோடி ரூபாயாக இருந்த நிறுவனங்களின் விற்பனை 9.56% உயர்ந்து, 2017-18-ம் முதலாம் காலாண்டில் ரூ.13,76,115 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 5.75% குறைந்துள்ளது. செயல்பாட்டு லாபம், 4.46 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், நிறுவனங்களின் பிற வருமானம், முந்தைய ஆண்டைவிட 17.25% உயர்ந்துள்ளது.

முக்கியமான விஷயம், ஒட்டுமொத்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 17.32% குறைந்துள்ளது. ஆம், 2016-17-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.105,107 கோடியாக இருந்த நிகர லாபம், 2017-18 ன் முதலாம் காலாண்டில் ரூ.86,907 கோடியாகச் சரிந்துள்ளது. அதே நேரத்தில் நிகர லாபம் முந்தைய காலாண்டைவிட 4.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, விற்பனை வளர்ச்சி என்பது மிக முக்கியம். ஆனால், 2017-18ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் விற்பனைக் குறைந்ததால், அதன் வளர்ச்சி முற்றிலும் முடங்கியது. இதனால் நிறுவனங்களின் லாபம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை இன்னும் ஆழமாகப் பார்த்தால், முந்தைய காலாண்டைவிட முதலாம் காலாண்டில் 2,732 நிறுவனங்களில் 1,235 நிறுவனங்களின் விற்பனை குறைந்திருக்கிறது. இதுமட்டுமின்றி, முந்தைய ஆண்டைவிட இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 1,310 நிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய லாபம் குறைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், 2017-18-ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லை.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி

வாகனங்கள், வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகள், உற்பத்தி, ஐ.டி, பார்மா, தொலைத் தொடர்பு எனப் பல துறைகளுக்குக் கடந்த மார்ச் காலாண்டைவிட, இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவு மோசமானதாக அமைந்து உள்ளது. இவை தவிர, உணவு பதப்படுத்துதல், சிமென்ட், கெமிக்கல்ஸ், பொழுதுபோக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளும் குறைந்த விற்பனை வளர்ச்சியையே எட்டியுள்ளன.

முதலாம் காலாண்டில், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மிகவும் மோசமாக அமைந்ததற்கு முக்கியமான காரணம், பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யை செயல்படுத்துவது குறித்த நிச்சயமற்ற தன்மைதான். இவை மட்டு மின்றி, குறைந்த அளவிலான தொழில் துறை வளர்ச்சியால், பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சாதகமாக இல்லை. சர்வதேசப் பிரச்னை, திட்டங்களைக் கையகப்படுத்துதல், புதிய வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்தும் எண்ணிக்கை குறைவு மற்றும் அமெரிக்காவில் ஹெச்1பி (H1B) விசா கட்டுப்பாடு போன்றவற்றினால் ஐ.டி துறை பாதிக்கப் பட்டுள்ளது.

சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஜி.எஸ்.டி நல்ல ஒரு முன்னேற்றத்தைத் தந்தது. வங்கிகளுக்கு வாராக் கடன்போல், பெரும்பாலான துறைகள் குறிப்பிட்ட சில பிரச்னைகளால் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் ஒட்டு மொத்தமாக முதல் காலாண்டு முடிவுகள் மோசமாக அமைந்தன’’ என்றவர், இரண்டாம் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல ஆரம்பித்தார்.

இரண்டாம் காலாண்டு எப்படி..?

‘‘இரண்டாம் காலாண்டு முடிவுகள் சில துறைகளில் சிறப்பாக இருக்கும் எனச் சொல்லலாம். ஏனெனில், இப்போது ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இதன் உண்மையான தாக்கம் என்ன என்பது இப்போது தெரிந்துவிட்டது. பருவ மழையில் முன்னேற்றம், விவசாயத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். நாடு முழுவதும் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால், சில்லறை விற்பனை அதிகரித்துக் காணப்படும். இதனால் இதே காலகட்டத்தில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் விளம்பரத்தின் மூலம் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பார்மா துறை, அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதலைப் பெறுவதில் சில சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதன் மூலம் இந்தத் துறை குறித்து முடிவெடுக்க இன்னும் சிறிது காலம் ஆகலாம்.
இதேபோல, ஐ.டி துறையைப் பொறுத்தவரை, வேலைக்கான ஆர்டர்களை வெளிநாடுகளில் இருந்து கையகப்படுத்துவது, ஆட்டோமேஷன் உள்பட பல காரணங்களால் இந்தத் துறை எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாமல் உள்ளது. எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிக நாள்கள் காத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, இதன் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் சரிவடைந்துள்ளது. மேக்-இன்-இந்தியா பிரசாரம், இந்தத் துறைக்கு எதிர்பார்த்த ஆதாயத்தை அளிக்கவில்லை. வேலைவாய்ப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.

சொந்த வீடு என்பது, ஒவ்வோர் இந்தியரின் கனவாகவே இருப்பதால், கட்டுமானத் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருகிறது. ஆட்டோ மொபைல் துறை, நடப்பு காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் மார்க்கெட், இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பழைய வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி குறைவு. டயர், பேட்டரி மற்றும் இதர வாகன உதிரிப்பாகங்களின் தேவை அதிகரித்தி ருப்பதால், இந்தத் துறை சிறப்பாக வளர்ச்சி யடையும் என எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

சந்தை உயருமா..?

இரண்டாம் காலாண்டு, வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிற நிலையில், பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும், ஃபாலோ பண்ண வேண்டிய பங்குகள் ஏதும் உள்ளதா எனக் கேட்டோம். இந்தக் கேள்விகளுக்கும் விளக்கமான பதிலைச் சொன்னார் அவர்.

‘‘நிஃப்டியைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் இறக்கம் வந்து, மீண்டும் எழும் நிலையில் உள்ளது. நிஃப்டியானது 10137 மற்றும் 9448 புள்ளிகளிடையே வர்த்தகமாகி வருகிறது. நம் சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடுகள் மேற்கொள்வது, பங்குச் சந்தைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, இதுவரை நெகட்டிவாக இருந்த வட்டி விகிதம் மற்றும் ஜி.எஸ்.டி பிரச்னை, இப்போது பாசிட்டிவாக மாறியுள்ளதால், இரண்டாம் காலாண்டில் நெகட்டிவ் நியூஸ் எனச் சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் இல்லாதது நல்ல விஷயம். எல்லையில் அச்சுறுத்தல் மற்றும் ஓபெக் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் திட்டத்தைத் தவிர, நெகட்டிவ் நியூஸ் பெரிதாக எதுவும் இல்லை.

நிஃப்டியைப் பொறுத்தவரை, 10137 மற்றும் 9448 புள்ளிகளைத் தாண்டி சந்தை மேலே செல்லும் பட்சத்தில், புதிய உச்சத்தை நோக்கிய பெரிய நகர்வுகளை எதிர்பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி, ஜி.எஸ்.டி-யின் பாசிட்டிவான தாக்கம், மத்திய அரசுக்குச் சாதகமான அரசியல் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் உள்பட பல காரணங்களால்தான் சந்தையானது வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தைக் கடந்த வாரங்களில் எட்டிப் பிடித்தது.சந்தையானது தற்போது சற்றே இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இனிவரும் நாள்களில் பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும்பட்சத்தில், அடுத்த ஓர் ஆண்டு மட்டுமல்ல, அடுத்த பத்து ஆண்டுகள் வரை சந்தை பாசிட்டிவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் எந்தப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, லாப வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியக்கூறு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். நிறுவனங்களின் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது வேறு பங்குகளுக்கு மாறிக்கொள்ளலாமா என முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம். ஏனெனில், சிறப்பாகச் செயல்படாத ஒரு லார்ஜ் கேப் நிறுவனத்தின் பங்கை வைத்திருப்பதைவிட, சிறப்பாகச் செயல்படும் மிட் கேப் அல்லது ஸ்மால் கேப் பங்குகளில் முதலீட்டை மேற் கொண்டு லாபமடைவதே அவசியம்” என்றவர், முதலீட்டாளர்கள் ஃபாலோ பண்ண வேண்டிய சில பங்குகளையும் சொன்னார்.

ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகள் எஸ்கார்ட்ஸ்

``எஸ்கார்ட்ஸ் (Escorts) நிறுவனத்தைப் பொறுத்தவரை, முதல் காலாண்டு முடிவில் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து உள்ளது. நிகர லாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 33% உயர்ந்துள்ளது. எனவே இதன் பங்குகளைத் தாராளமாகப் பரிசீலிக்கலாம்.

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

இந்த நிறுவனத்தின் விற்பனையானது, கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் காலாண்டில் 45% உயர்ந்துள்ளது. லாபமும் 92% உயர்ந்துள்ளது. இதன் புத்தக மதிப்பு நன்றாக இருக்கிறது; நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற தரமான பங்கு இது.

விசாகா இண்டஸ்ட்ரிஸ் (visaka industries)

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இதன் லாபம் 38% வளர்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், கட்டுமானப் பொருள்கள் பிரிவில் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது இதன் விற்பனை 10% மட்டுமே உயர்ந்துள்ளது. நடுத்தர, நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு இது.

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்

விற்பனை வளர்ச்சி மற்றும் கடன்களைக் குறைப்பதன் மூலம் மிகச் சிறப்பான காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். அதிகரித்த உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் நீண்ட கால நோக்கில் நன்றாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம். நடுத்தர மற்றும் நீண்ட கால நோக்கில், இந்தப் பங்கில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம்.

டாக்டர் லால் பாத்லேப்ஸ் (Dr Lal PathLabs)

கடந்த மார்ச் காலாண்டைவிட விற்பனை 12 சதவிகிதமும், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் 14 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இந்தத் துறையின் முதலாம் காலாண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருந்தாலும், இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆகையால், இந்த நிறுவனம், இனிவரும் நாள்களில் நன்கு செயல்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த நிறுவனத்தை ஃபாலோ செய்யலாம்’’ என்று முடித்தார் ரெஜி தாமஸ்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் யாரோ சொன்னார் என்று ஏதோவொரு பங்கை வாங்குவதைவிட, நிறுவனங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து அதில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே நல்லது.

-சோ.கார்த்திகேயன்