Published:Updated:

``ட்ரேடிங்" என்ன சூதாட்டமா? நீங்களும் செய்யலாமா? - Exclusive Deal.

``ட்ரேடிங்" என்ன சூதாட்டமா? நீங்களும் செய்யலாமா? -  Exclusive Deal.
``ட்ரேடிங்" என்ன சூதாட்டமா? நீங்களும் செய்யலாமா? - Exclusive Deal.

பங்குச் சந்தை, வர்த்தகம், ஸ்டாக் எக்ஸ்சேஞ், காளை, கரடி... இதெல்லாம் தினசரி பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்கள்... பங்குச் சந்தை பற்றி முற்றிலும் அறியாதவர்களாக இருப்பினும் டி.வி. நியூஸிலோ, செய்தித் தாள்களிலோ, நாணயம் விகடன் போன்ற இதழ்களிலோ கண்டிப்பாக இவற்றை நாம் கடந்துதான் வந்திருப்போம். பங்குச் சந்தையில் பணம், நிறைய பணம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. பெரும் பணம் ஈடுபட்டுள்ளதால், பங்குச் சந்தை எல்லோருக்குமானது கிடையாது என்கிற எண்ணமும், அதுவொரு இருளான பாதாளக் கிணறு போன்றும் விஷயம் அறியாதவர்கள் எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால், பலருக்கும் இந்தப் பாதாளக் கிணறுதான் அன்றாடம் பொக்கிஷம் தரும் இடமாகவும் விளங்குகிறது எனக் கூறுகிறார் பங்குச் சந்தை நிபுணரும் பயிற்சியாளருமான கே.எஸ். கிஷோர் குமார்.

``ட்ரேடிங்" என்ன சூதாட்டமா? நீங்களும் செய்யலாமா? -  Exclusive Deal.

பங்குச் சந்தை சூதாட்டமா?

"சூது என்பது, விளைவை தீர்மானிக்கக்கூடிய சக்தி நம் கையில் இல்லாமல், அதிர்ஷ்டத்தை நம்பி நாம் செய்யும் செயல்பாடாகும். இதில் லாபம், நஷ்டம் இரண்டுக்குமே சமபங்கு வாய்ப்புண்டு. ஒரு பந்தயத்தைக் குறிவைத்து அதிக நபர்கள் சூதில் ஈடுபடும்போது, வெற்றிபெறுபவருக்கு லாபம் கணிசமாகக் கிடைக்க, தோல்வியுறுபவர்களுக்கு முழுதும் நஷ்டமாகிறது! மழை நேரம், ஒரே இருட்டு, கரண்ட் போகிறது, இருட்டில் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு கரண்ட் பாக்சில் கைவைத்தால் ஷாக் அடிக்க வாய்ப்புண்டு, அடிக்காமலும் போகலாம். இதுவும் சூதுதான், உங்கள் உயிரையே இங்கு பணயம் வைக்கிறீர்கள். எனவே, கணிக்கமுடியாத விளைவுகள் கொண்ட எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்போதும் அது சூதாட்டமாகிறது. இப்போது பங்குச் சந்தையின் போக்கை கணிக்கமுடியுமா என்ற கேள்வி வரும், நிச்சயமாக கணிக்கமுடியும், அப்படி செய்துதான் பலரும் வெற்றிகராமாக இதில் பணம் சம்பாதிக்கின்றனர்."

பங்குச் சந்தை வர்த்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது முக்கியம்...

"ஒரு தொழில் துவங்க மூலதனம் முக்கியம். இந்த மூலதனத்தை ஈட்ட நாம் கடன் பெறலாம் அல்லது நம் சேமிப்பை உபயோகிக்கலாம். ஒரு நபரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குவதைவிட, அதை நூறு பங்குகளாக பிரித்து, ஒரு பங்கு (Share) ஆயிரம் ரூபாய் என பொதுமக்களிடம் விற்று தங்களுடைய மூலதனத்தை உருவாக்குகின்றன பொது நிறுவனங்கள் (Public Companies). நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்கும்போது, அந்த நிறுவனம் எவ்வளவு லாபம் அடைகிறதோ, நீங்கள் வாங்கிய பங்கைப் பொறுத்து நீங்களும் அதற்கேற்ப லாபம் ஈட்டலாம்! இந்தப் பங்குகளை வாங்கி விற்பனை செய்வதை அரசு அங்கீகாரம் பெற்ற இடைத்தரகர்கள் மூலமே செய்ய முடியும். ஆயிரம் ரூபாய் என்கிற சிறிய தொகையில் இருந்துகூட வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கலாம்!"

``ட்ரேடிங்" என்ன சூதாட்டமா? நீங்களும் செய்யலாமா? -  Exclusive Deal.

யார் வர்த்தகத்தில் ஈடுபடலாம்?

"இப்போது எல்லோருக்கும் இன்டர்நெட் வசதியுள்ளது, போன் மூலமே சுலபமாக பணி ஓய்வு பெற்றவர்கள், வீட்டுப் பெண்கள், மாணவர்கள்... இப்படி யார்வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் பங்குச் சந்தை குறித்த தகுந்த அறிவும், வெற்றி தோல்வியை சமமாகக் கருதும் மனப்பாங்கும் இதற்கு அவசியம்."

இதற்கென தனி படிப்பு ஏதாவது...

"நிறைய பங்குச் சந்தை நிபுணர்கள் இதற்கான பயிற்சியை வழங்குகின்றனர். எங்களின் Trade Achievers Training Academy மூலம் கடந்த ஐந்து வருடமாக மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பணி ஒய்வு பெற்றவர்கள் என பலதரப்பட்டோர்க்கு இதற்கான பயிற்சியை வழங்கிவருகிறோம். Trade Achievers Training Academy-இன் முக்கிய அம்சம், பயிற்சி பெற்ற பின்னரும், எங்களுடைய அலுவலகத்திலேயே நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் வர்த்தகம் செய்யலாம். இதனால் வர்த்தகம் தொடர்பான கல்வி மற்றும் அனுபவ அறிவும் பெற்று சிறந்த வர்த்தக வல்லுனராக மாறமுடியும். இன்டர்நெட்டில் விஷயங்களைப் படித்து நாமே வர்த்தகம் செய்து லாபமடைந்தும் நஷ்டமடைந்தும் கற்றுக்கொள்வதைவிட, எங்களைப் போன்ற நிபுணர்கள் பயிற்சியளிக்கும் அறிவியல்ரீதியான முறைகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும்போது, நஷ்டத்தை பெருமளவு குறைத்து, யார் வேண்டுமானாலும் கைநிறைய பணம் ஈட்ட முடியும்!"  - கே.எஸ். கிஷோர் குமார், நிறுவனர் மற்றும் செயல் தலைவர், Trade Achievers Training Academy.

Trade Achievers நடத்தும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வர்த்தகம் குறித்த தெளிவான அறிவைப் பெற்று, பங்குச் சந்தையில் நாமும் ஒரு கை பார்க்கலாம். விகடன் வாசகர்களுக்கு 40% சிறப்பு சலுகையும் காத்திருக்கிறது! மேலும் விவரங்களுக்கு, இங்கே அணுகவும்...

விவரங்களைப் பெற