Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!

ஃபண்ட் ரிசர்ச்!

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீ
ங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு புதிதா? இப்போதுதான் முதல் அடி எடுத்து வைக்கிறீர்களா? உங்களுக்கு ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் திட்டம் கணகச்சிதமாகப் பொருந்தும்.

தனியார் மியூச்சுவல் திட்டங்கள் தொடங்க முதன்முதலாக அனுமதிக்கப்பட்டபோது வந்த திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். திட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டன. இந்த 18 வருட காலமும் தொடர்ந்து இத்திட்டத்தில் இருந்தவர்களுக்கும் மற்றும் எஸ்.ஐ.பி. முறை மூலமாக தொடர்ந்து முதலீடு செய்தவர் களுக்கும் இத்திட்டம் வருமானத்தை வாரி வழங்கியுள்ளது.

இத்திட்டம் தொடங்கியபோது (ஜனவரி 1994) ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் ரூ.5,02,044 ஆகும் (ஆண்டிற்கு 24.43% வருமானம்). இதே திட்டத்தில் மாதத்திற்கு ரூ.1,000 வீதம் கடந்த 215 மாதங் களாக முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், இன்றைய அதன் மதிப்பு ரூ.22,70,442 ஆகும் (ஆண்டிற்கு 23.84% வருமானம்).

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!

இத்திட்டம் லார்ஜ்கேப் பங்கு களிலேயே மெஜாரிட்டியாக முதலீடு செய்கிறது. ஆகவே, மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

இத்திட்டத்தின் சிறப்பான அம்சம் என்னவென்றால் சந்தை சரியும்போது, சந்தையை விட குறைவாகத்தான் சரியும். உதாரணத்திற்கு, கடந்த ஒரு வருடத்தில் (நவம்பர் 21, 2011 நிலவரப்படி) சந்தை (நிஃப்டி குறியீடு) 20.5% சரிந்துள்ளது. அதே சமயத்தில் இந்த ஃபண்ட் 10.5%-தான் சரிந்துள்ளது. அதேபோல் சந்தை எழுந்து வரும் போதும், முன்னணிப் பங்குகளைக் கொண்டுள்ளதால் சீக்கிரமாக மேலெழுந்து வரும். சந்தை காளையின் பிடியில் இருக்கும் பொழுது, மிக அதிகமாக வருமானம் தரும் ஃபண்டுகளைவிட, இதன் வருமானம் சற்று குறை வாகத்தான் இருக்கும். ஆகவேதான், இது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள ஒரு கன்ஸர்வேட்டிவ் திட்டமாகும்.

இதன் நெடுநாள் ஃபண்ட் மேனேஜர் கே.என்.சிவசுப்ரமணியன். இவர் இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய ஃபண்ட் மேனேஜர்களில் ஒருவர்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!

இந்த ஃபண்டின் தற்போதைய ஃபண்ட் மேனேஜர் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் வாசுதேவன் ஆவார்கள். இத்திட்டத்தின் வரலாற்றில் ஓரிரு ஆண்டுகளைத் தவிர, தொடர்ந்து நன்றாகவே செயல்பட்டுள்ளது.

கன்விக்ஷன் இல்லாதப் பங்குகளில் இத்திட்டம் முதலீடு செய்வதில்லை. மேலும், கேஷிற்கும் பங்குகளுக்கும் தாவிக் கொண்டே இருப்பதில்லை. எப்போதுமே முழுவதுமாக பங்குகளிலேயே தனது முதலீட்டை முடக்கி இருக்கும். தற்போது இதன் கேஷ் லெவல் கிட்டத்தட்ட 10% ஆகும். சந்தை மேலெழுந்து வரும்போது அதிக கேஷ் லெவலில் உள்ள திட்டங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

ரியல் எஸ்டேட் போன்ற சந்தேகத்திற்கு இடம் தரும் துறைகளிலும் இத்திட்டம் முதலீடு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தரமான நிறுவனங்களிலேயே தனது முதலீட்டை மேற்கொள்கிறது.

தற்சமயத்தில் எனர்ஜி, ஃபைனான்ஷியல்ஸ், டெக்னாலஜி, மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறைகளில் ஓவர் வெயிட்டாக உள்ளது இத்திட்டம்.

உங்களது தேவைகள் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு மேலென்றால், இத்திட்டதில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்திற்கு நம் மதிப்பெண் 90/100.

முதலீடு செய்யலாம் வாங்க!

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!

நாணயம் விகடன் வாசகர்களுக்கு வணக்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் சந்தோஷம். இந்த முறை நான் எழுதப் போவது மியூச்சுவல் ஃபண்ட் பற்றி.

இன்றைய தேதியில் பலரும் விஷயமே தெரியாமல், பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டு  நஷ்டப்படுகிறார்கள். சந்தையை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு இவர்கள் பணத்தை முதலீடு செய்தால் பரவாயில்லை. சந்தையை புரிந்து கொள்வது சிரமம் என இவர்கள் நினைத்தால், இருக்கவே இருக்கிறது மியூச்சுவல் ஃபண்ட். அதில் பணத்தைப் போட்டுவிட்டு, நிம்மதியாக இருக்கலாம்.

மாதம் 500 ரூபாய்கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்து லாபம் பார்த்தால், அதற்கு வரியும் கட்ட வேண்டியதில்லை. தவிர, ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் ஒழுக்கமும் மியூச்சுவல் ஃபண்டில் கைகூடும். இது மாதிரியான எத்தனை நன்மைகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உண்டு என்பதாலேயே இந்த புதிய பகுதியை எழுத வந்திருக்கிறேன்.

இதற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நஷ்டமே தராது என்று சொல்ல வரவில்லை. நல்ல ஃபண்டில்  நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்தால், கணிசமான லாபத்தை நிச்சயம் பார்க்கலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆனால், நல்ல ஃபண்ட் எது? எந்த ஃபண்டை வாங்குவது? எந்த ஃபண்டை வாங்காமல் விடுவது? எந்த ஃபண்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது? என்று கேட்கிறீர்களா..?

இந்தப் பகுதியை தொடர்ந்து படித்தால், இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.