Published:Updated:

கம்பெனி அலசல் - ஐ.சி.ஐ.சி.ஐ.

கம்பெனி அலசல் - ஐ.சி.ஐ.சி.ஐ.

கம்பெனி அலசல் - ஐ.சி.ஐ.சி.ஐ.

ந்த வாரம் நாம் அலசப் போவது 55 ஆண்டுகளுக்கும் மேலான பாரம் பரியத்தைக் கொண்ட  ஒரு வங்கியை.  ஏதாவது பப்ளிக் செக்டார் வங்கியாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்.

அதுதான் இல்லை. 1955-ல் 'இண்டஸ்டிரியல் கிரெடிட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியா’ என்ற தொழிற்கடன் வழங்கும் நிறுவனமாகத்   தொடங்கப்பட்டு, இன்று இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியைத் தான் நாம் இந்த வாரம் கம்பெனி அலசல் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வங்கி வரலாறு!

1996-ல்தான் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆரம்பிக்கப் பட்டது என்றாலும் 1955-லேயே அதன் புரமோட்டரான ஐ.சி.ஐ.சி.ஐ. (இண்டஸ்டிரியல் கிரெடிட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா), உலக வங்கி, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தியத் தொழில் அதிபர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, ஏ.ராமசாமி முதலியார் என்பவரை தலைவராகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.

2011 மார்ச் இறுதியில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாகத் திகழும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2,543 கிளைகளையும் 7,037 ஏ.டி.எம்-களையும் கொண்டு 19 நாடுகளில் செயல்பட்டு வருகின்றது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி துணை நிறுவனங்கள் மூலமாக இங்கிலாந்து, ரஷ்யா, கனடா போன்ற நாடுகளிலும், அமெரிக்கா, சிங்கப்பூர், பஹ்ரைன், ஹாங்காங், இலங்கை, கத்தார் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் கிளைகள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் தொடர்பு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

அதிவேகமாகச் செயல்படும் வங்கி!

ஐ.சி.ஐ.சி.ஐ. என்றவுடனேயே மிகவும் அக்ரெஸிவாக வியாபாரத்தில் குதித்த வங்கியாயிற்றே? ரிஸ்க் ஏதும் இல்லையா என்பதுதான் உங்களுடைய கேள்வியாக இருக்கும். ரீடெயில் கடன்களில் முழுமூச்சாக செயல்பட்டு வந்ததால், உங்கள் மனதில் அந்த நாள் ஞாபகம் அப்படியே இருக்கின்றது. 2007-ல் 65 சதவிகிதமாக இருந்த இதன் ரீடெயில் அசெட் (சில்லறைக் கடன் கொடுத்த விகிதம்) 2011-ல் 33 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதில் இருந்தே இந்த வங்கி பெரிய மற்றும் சிறு/மத்திம அளவு நிறுவனங்களுக்கு கடன் வாங்குவதில் முனைப்பாக இருக்கத் தொடங்கிவிட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இதுவும் தவிர, விவசாயத் துறை மற்றும் சர்வீஸ் சார்ஜ்கள் மூலம் வரும் வருவாயைப் பெருக்கு வதிலும் இந்த வங்கி வெகுமுனைப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது. வங்கித் துறையில் லீடராய் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ-யின் துணை கம்பெனிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (ஏ.எம்.சி.) போன்றவையும் அந்தந்தத் துறையில் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்றும் வளர்ந்து கொண்டும் வருகின்றன.

பொருளாதாரம் எப்படி?

வங்கியாயிற்றே, அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? வங்கித் துறையின் வெற்றி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை யில்தானே இருக்கும் என்கிறீர்களா?  

கம்பெனி அலசல் - ஐ.சி.ஐ.சி.ஐ.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 12 மாதங்களுக்கு எப்படி இருக்கும் என்று கணிக்கவே முடியவில்லையே என்று நீங்கள் நினைப்பது எங்களுக்குத் தெரிகிறது. தவிர, இது ஒரு பெரிய வங்கி என்றாலும், அதனால் மட்டுமே ஒரு வங்கி ஜெயித்துவிட வாய்ப்பில்லை என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்பீர்கள். பெரியதாக இருந்தாலும் பிஸினஸ் வேகம் குறையும்போது பாதித்துவிடுமே என்றும் சொல்வீர்கள். அதுவும் தவிர, வட்டிவிகிதம் வேறு கன்னாபின்னாவென்று ஏறிக் கொண்டே வருவதால் என்.பி.ஏ. விகிதமும் ஏறிவிட வாய்ப்புள்ளதே என்றும் எதிர்வாதம் செய்வீர்கள்.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் இந்த வங்கி கொஞ்சம் பிரகாசமாகவே தெரிவதற்கு காரணமும் இருக்கிறது. வங்கித் துறையிலேயே மூலதன தன்னிறைவு விதிமுறைகளை பெரியதொரு அளவில் வைத்திருக்கிற ஒரு வங்கி இது. அளவான காசா ரேஷியோ (சிகிஷிகி ஸிணீtவீஷீ), மிகப் பெரிய ஃபிரான்சைஸி நெட்வொர்க் என இவை மூன்றும், சிறிதளவு பொருளாதாரத்தில் வளர்ச்சி வந்தால்கூட லாபம் சரசரவென அதிகரிப்பதற்குண்டான வாய்ப்புகளைக் கொடுக்கும். இதுவும் தவிர, சமீப காலமாக இந்த வங்கி ஒதுக்கீடு செய்யும் வாராக்கடனுக்கான அளவுகளையும், பேலன்ஸ் ஷீட்டுகளில் இல்லாத ரிஸ்க்குகளை தொகுத்துக் கொடுக்கும் விதத்தையும் வைத்துப் பார்த்தால், பெரிய அளவில் லாப விகிதத்தில் தடுமாற்றமோ/பாதிப்புகளோ வர வாய்ப்பில்லை என்பதைப் போலவே தெரிகிறது.

வியாபார உத்திகள்!

ஆரம்ப காலத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிக வட்டியில் நீண்ட காலத்திற்குப் பணத்தை வாங்கி, குறைந்த வட்டிக்கு குறைந்த காலத்திற்கு வட்டிக்கு கொடுத்து தன்னுடைய மார்க்கெட் ஷேரை அதிகரித்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்தது. அந்த நேரத்தில் புதிய வங்கியாக இருந்த காரணத்தால் ஏற்கெனவே தொழிலில் இருக்கும் ஜாம்பவான் வங்கிகளோடு போட்டி போட இதை மட்டுமே ஒரு உத்தியாக வைத்திருந்தது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. இந்த உத்திகள் வங்கியை வேகமாக வளரச் செய்தது என்றாலும் லாபத்தைக் குறைக்கவே செய்தது. இதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு நிலைமையை நன்றாகவே மாற்றிக் கொண்டுவிட்டது. நெட் இன்ட்ரஸ்ட் மார்ஜின் எனும் நிகர வட்டி விகிதம் (வாங்கும் வட்டி மைனஸ் கொடுக்கும் வட்டி விகிதம்) நன்றாக அதிகரித்து வருவதுதான், வியாபார உத்தியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மாற்றிக் கொண்டே வருகிறது என்பதற்குச் சான்று.

பெருகும் வருமானம்!

வட்டி விகிதம் அதிகரிப்பதால் லாபம் குறையுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது சரியென்றாலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியைப் பொறுத்தவரை கட்டணம் சார்ந்த வருமானம் கிட்டத்தட்ட 41 சதவிகிதம் அளவிற்கு (2010-11 முடிவில்) இருக்கிறது. இந்த கட்டணம் சார் வருவாயில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக ரீடெயில் வியாபாரத்திலிருந்தும், 40 சதவிகிதம் வரை கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. கட்டணம் சார் வருவாயின் பங்களிப்பு லாபத்தில் அதிகமாக இருப்பதால் பொருளாதாரம் சற்று சுணக்கத்தில் இருந்தாலும், லாபத்தில் பெரிய பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் துறையின் அதிகபட்ச மூலதன தன்னிறைவு விகிதத்தை தன்வசத்தே கொண்டிருப்பது இவ்வங்கிக்கு மிகப் பெரிய சாதகமான அம்சம்.

ரிஸ்க்கே இல்லையா?

பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்ட் லோன்களை வாரி வழங்கியதால் மட்டுமே இந்த வங்கி 2008-ல் பிரச்னையில் சிக்கிக் கொண்டது. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்திற்கும் மேலான என்.பி.ஏ. (வாராக்கடனுக்காகச் செய்யப்படும் லாப ஒதுக்கீடு) இந்த பர்சனல் மற்றும் கிரெடிட் கார்ட் லோன்களுக்கானதாகவே இருக்கிறது. பொதுவாகவே பர்சனல் மற்றும் கிரெடிட் கார்ட் லோன்களில் மிகப் பெரிய அளவில் வாராக்கடன்கள் உண்டாக வாய்ப்புள்ளன. ஏனெனில், இந்த லோன்களுக்கு எந்தவிதமானதொரு அடமானமும் கிடையாது. அப்படியிருக்க, 50 சதவிகிதத்திற்கும் மேலான வாராக்கடனுக்கான ஒதுக்கீடு இந்த இரண்டு செக்மென்டிற்குமாக செய்யப்படும்போது, வாராக்கடன் சற்று அதிகமாகிவிடுமோ என்ற பயம் கொஞ்சம் கூடத்தான் செய்கிறது. என்னதான் லாபம் அதிகமாகிக் கொண்டே வந்தாலும் போட்ட முதலுக்கு லாபம் என்ன வந்தது என்று பார்த்தால், அது மற்ற பப்ளிக் மற்றும் பிரைவேட் செக்டார் வங்கிகளை விட குறைவானதேயாகும். இந்த நிலையை சரி செய்ய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு இன்னும் மூன்று வருடங்கள் பிடிக்கலாம்.

வாங்கலாமா, கூடாதா?

பல நிறை, குறைகளைத் தன்வசத்தே கொண்டிருந்தாலும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, தொழிலில் திறமை காட்டி வளரும் புதிய தலைமுறை (நியூ ஜெனரேஷன்) வங்கியாகும். டெக்னாலஜியை முழுமையாகப் புகுத்தி வங்கித் துறையில் மற்ற வங்கிகளை திக்குமுக்காடச் செய்த பெருமை இந்த வங்கிக்கு உண்டு. பழைய தவறுகளில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டு, அவற்றை சரி செய்தும் வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. விலையை வைத்து அளவிட்டால் 52 வார லோ-விற்கு அருகே டிரேடாகிக் கொண்டிருக்கிறது இந்த வங்கி.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கக் கூடிய முதலீட்டாளர்கள் நிச்சயமாக இந்த வங்கியின் பங்குகளை சிறிதளவு தங்களுடைய முதலீட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்