Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த வாரம் செயில் பங்கு 80 ரூபாய்க்கு கீழே வந்தால் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தேன். ஆனால் அந்த பங்கு 80.60 ரூபாய் வரைக்கும் வந்தது. நான் சொன்ன விலையில் வராததால் முதலீட்டாளர்களால் வாங்கி இருக்க முடியாது. அதனால் போர்ட்ஃபோலியோவில் அந்த பங்கினை நாம் சேர்க்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ருந்தாலும் சில முதலீட்டாளர்கள் 80 ரூபாயை நெருங்கிய உடன் முதலீடு செய்திருக்கலாம்; தவறொன்றும் இல்லை. சரியான முதலீடுதான். முதலீடு செய்தவுடனேயே 6 சதவிகிதத்துக்குமேல் கிடைத்திருக்கும். 15 சதவிகித லாபம் வரும் வரை வைத்திருந்து விற்றுவிடலாம்.

##~##
மேலும், கடந்த வாரம் ஜி.எஸ்.பி.எல். பங்கினை சராசரி செய்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாகவே டிசம்பர் மாதத்தில் ஒரு சிறிய புல்பேக் ராலி இருக்கும் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே டிசம்பர் 1-ம் தேதி ஏற்றத்துடனேயே சந்தை முடிவடைந்திருக்கிறது.  இனி வரும் வாரங்களிலும் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இண்டெக்ஸ்களில் இருக்கும் ஏற்றத்தைவிட தனிப்பட்ட பங்குகளில் கொஞ்சம் அதிகம் ஏற்றம் என்றே எதிர்பார்க்கலாம்.

நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் சில பங்குகள் கூட அதிக ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. சந்தை பலமாகச் சரிந்தால் கூட நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஏ.பி.ஜி. ஷிப்யார்டு பங்கு, சந்தையின் அத்தனை சரிவுகளையும் தாங்கி அப்படியே இருக்கிறது. இப்போது ஏற்றம் ஆரம்பித்த பிறகு அந்த பங்கு ஏற ஆரம்பித்திருக்கிறது. தற்போது 12% விகிதம் லாபத்தில் இருக்கும் இந்த பங்கு விரைவில் நமது இலக்கு விலையை அடைய வாய்ப்பிருக்கிறது. முதலீட்டாளர்கள் கவனமாகப் பார்த்து லாபத்தை புக் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் நிலை!

தற்போதைய நிலையில் நமது போர்ட்ஃபோலியோ 3,082 நிகர நஷ்டத்தில் இருக்கிறது. வரும் வாரங்களில் நஷ்டம் குறையும் என்றே நினைக்கிறேன். மேலும், தற்போதைய நிலை 15 பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. அதனால் இந்த வாரம் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்வோம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வரும் வாரங்களில் சந்தை அதிகரித்து பங்குகள் வெளியேறும்போது சந்தையின் டிரெண்டினை பொறுத்து புதிய பங்குகளில் முதலீடு செய்வோம். இந்த வாரம் ஒரு பங்கு மட்டுமே பரிந்துரை செய்கிறேன். சரியான விலையில் முதலீடு செய்யவும்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்.