Published:Updated:

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in

Published:Updated:
உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ரையில் இறங்கும் விமானங்கள்...  எழுத்தாளர் இந்துமதியின் பிரபலமான நாவல் தலைப்பு இது. அதைத் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும், சந்தையில் மிகவும் தீவிரமாக இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையாகச் சொல்லலாம். தற்போதைய நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்குமுன்,  இந்தியப் பங்குச் சந்தையின் தற்போதைய நிலவரத்தையும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு வரும் முதலீட்டு விவரங்களையும் பார்ப்போம்.   

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் மட்டும் ரூ.6 லட்சம் கோடி உள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் மட்டும்  மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வந்த மொத்த முதலீடு ரூ.62,000 கோடி.

தற்போது எல்லோரும் உச்சரிக்கும் மந்திரச் சொல் எஸ்.ஐ.பி. சென்ற வருடம் எஸ்.ஐ.பி  முறையில் ஒருவர் சராசரியாக மாதம் முதலீடு செய்த தொகை  சுமார் ரூ.2,200. இது இப்போது ரூ.3,000-3,250-ஆக அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்குமுன், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி கணக்கு வைத்திருந்தவர்களின்  எண்ணிக்கை சுமார் 68 லட்சமாக இருந்தது.  இப்போது அது, 1.4 கோடியாக உயர்ந்துள்ளது.  கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் எஸ்.ஐ.பி மூலம் சந்தையில் முதலீடான தொகை ரூ.5,206 கோடி.

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் /ஃபண்டுகளின் வருமானம் மூன்று மற்றும் ஐந்து வருடங்களில்  இரட்டை இலக்கத்தில் இருப்பது பரவசம் தருவதாக உள்ளது. எனவேதான், மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டங்களில் முதலீட்டாளர் கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



இப்போது ஆரம்பத்தில் கூறிய தரையில் இறங்கும் விமானங்கள் பற்றிப் பார்ப்போம். விமானம் எவ்வளவு உயர உயரப் பறந்தாலும், ஒருநாள் தரையிறங்கித்தான் ஆகவேண்டும். அதுபோல, தற்போது சென்செக்ஸ்-ன் பி/இ விகிதம் ( 19-09-17)  மற்றும்  பிரைஸ் டு புக்  விகிதம்  3.08-ஆக உள்ளது. இது கடந்த கால சராசரிகளைவிட சற்று அதிகமாக உள்ளது. 

சென்செக்ஸ் பி/இ மற்றும் பி/பி விகிதங்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும், பிறகு குறைந்து, நீண்ட காலத்தில் அது சராசரியான நிலைக்கு வந்துவிடும் என்பது காலத்தின் கட்டாயம். 

இது நடப்பதற்குப் பங்குச் சந்தையானது இப்போதிருக்கும் நிலையிலிருந்து ஒன்று உயர வேண்டும் அல்லது இறங்கவேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்கும் வரை சந்தையின் ரிஸ்க் சற்று அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் புரிந்துகொண்டு நமது பணத்தை முடிந்தவரை பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

கடந்த 3 மற்றும் 5 வருடங்களில் கிடைத்த அதிக லாப விகிதங்களைப் பார்த்து, இப்போது முதலீடுசெய்து, அடுத்துவரும்  3 அல்லது 5 வருடங்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற அதீத ஆசை கொள்ள வேண்டாம்.  உங்களது ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்றவாறு, ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து, பணவீக்கத்தைவிட, வங்கி வட்டியைவிட, சற்றுக் கூடுதல் லாபம் கிடைத்தால் போதும் என்கிற பக்குவம் அல்லது எதிர்பார்ப்புடன் முதலீடு செய்தால், ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

எனவே, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பங்குச் சந்தை மிக அதிகமாக ஏறியுள்ள இந்தக் காலகட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக  லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கோ மாற்றுவது பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம்

புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளை மட்டுமே தேர்வு செய்யாமல், டைனமிக் அஸெட் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ரிஸ்க்கிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நிச்சயம் உதவும்.

சந்தை ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொண்டு முதலீடு செய்தால், தரையில் இறங்கும் விமானங்கள் குறித்துக் கவலையில்லாமல் இருக்கலாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism