Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த இதழில் நிஃப்டி 9900-9950 என்ற வரம்புக்கு மீண்டு வரும்பட்சத்தில் ஏற்றத்தின் போக்கை நாம் எதிர்பார்க்கலாம்; இறக்கம் அதிகமாக இருந்தால் பல பங்குகளின் விலையும் இறக்கத்தைச் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தேன். 

நாம் எதிர்பார்த்தபடியே, நிஃப்டி அந்த வரம்பை மீண்டும் எட்டியதோடு, கடந்த வார வர்த்தகமும் வலுவான ஏற்றத்தின் போக்கில் நிறைவடைந்தது. ஆனாலும், பேங்க் நிஃப்டி சற்று மந்தமாகவே இருந்தது. காரணம், வங்கித் துறைக்குச் சாதகமான குறிப்பிட்ட செய்திகள் எதுவும் வரவில்லை. எனவே, நிஃப்டியின் வழக்கமான ஏற்றத்துக்கு இந்தத் துறையினால் பங்களிக்க முடியவில்லை. பிற துறைகளின் நகர்வுகளை நம்பியிருக்க வேண்டிய நிலையே நிஃப்டிக்கு உண்டானது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், அவை ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சந்தையை ஏற்றத்துக்குக் கொண்டு சென்றன. மேலும், ஆப்ஷன்ஸ் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியும் சந்தையின் போக்கு, மீண்டும் காளையின் பக்கம் திரும்பியதை உறுதிசெய்கிறது. 

நாம் எதிர்பார்த்த இடத்தைச் சந்தை இப்போது வெற்றிகரமாக எட்டியிருக்கிறது.இந்த நிலையில், இனி என்ன ஆகும், சந்தை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருக்குமா, முன்பு கண்ட உச்சங்களைத் தாண்டி அக்டோபரில் ஏற்றம் காணுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது சற்றுக் கடினமே.  ஏனெனில், அதற்குச் சாதகமான செய்திகள் குறைவாக உள்ளன. பங்குகளின் மதிப்பு இன்னும் உச்சத்தில்தான் இருக்கிறது. மேலும், பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கிறது, அரசின் மீதான விமர்சனங்களும் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பாலிசி கூட்டத்திலும் பொருளாதாரம், பணவீக்கம் போன்ற காரணிகளை முன்வைத்து வட்டி விகிதத்தைக் குறைக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், இனி பொருளாதாரக் காரணிகளின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வட்டி விகிதக் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும், அடுத்த ரிசர்வ் வங்கி கூட்டம்  டிசம்பரில்தான் என்பதால், வட்டி விகிதக் குறைப்புக்குச் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே, வட்டி விகிதமானது சந்தைக்குச் சாதகமாக இருக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.

சந்தைக்குத் தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, வரும் வாரங்களிலிருந்து வரத் தொடங்கும் நிறுவனங்களின் காலாண்டு  நிதிநிலை முடிவுகள்தான். ஒருவேளை, சந்தையின் எதிர்பார்ப்புக்கேற்ப முடிவுகள் அமையுமானால், சந்தைத் தொடர்ந்து ஏற்றமடைந்து புதிய உச்சங்களை அடைய வாய்ப்புள்ளது.ஒருவேளை, எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்டால் (அதற்கான வாய்ப்புகளும் உள்ளன)சமீபத்திய இறக்கங்களை மீண்டும் ஒருமுறை அடைவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, நாம் இப்போது சற்று  கவனமாக இருக்கவேண்டும். சந்தை நமக்கு என்ன  ஆச்சர்யம் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்தச் சூழ்நிலையில் நாம், குறிப்பிட்ட பங்குகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். குறியீடுகள் அவற்றின் வரம்புகளில்தான் நகர்ந்துகொண்டிருக்கும். எனவே, நிஃப்டிக்கு 9800 என்ற நிலையில் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளலாம்.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாடா கெமிக்கல்ஸ் (TATACHEM)

தற்போதைய விலை: ரூ.678.75

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கு, பல வாரங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவந்த நிலையில் பிரேக் அவுட் ஆகி, புதிய உச்சங்களை அடையவிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தப் பங்கில் ஆர்வம் காட்டி, மேலும் இந்தப் பங்கை உச்சத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். எனவே, குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.730 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.660 வைத்துக் கொள்ளலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தோ கவுன்ட் இண்டஸ்ட்ரிஸ் (ICIL)

தற்போதைய விலை: ரூ.110.45


வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்குகள், கடந்த சில மாதங்களாகவே விற்பனை அழுத்தத்தில் இருந்து வந்தன. பங்கின் விலை ரூ.211 என்ற நிலையிலிருந்து ரூ.94-க்குச் சரிந்தது.

தற்போது இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது, இறக்கத்தின் போக்கு முடிவடைந்து, நல்ல விலை நகர்வுகள் நடக்க ஆரம்பித்திருப் பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த சில வர்த்தக நாள்களின் நகர்வுகளும் அதனை உறுதிசெய்வதாக உள்ளன. எனவே, இந்தப் பங்கு தற்போதைய விலையில் வாங்கக்கூடிய, ரிஸ்க் குறைவான பங்காக உள்ளது.  தற்போதைய விலையில் வாங்கலாம். விரைவில் இந்தப் பங்கு ரூ. 130 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.95 வைத்துக் கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிபிஏபி ஆட்டோமோட்டிவ் (PPAP) 

தற்போதைய விலை: ரூ. 378.40

வாங்கலாம்

சில காலமாகவே ஆட்டோமோட்டிவ் துறை பங்குகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. பி.பி.ஏ.பி நிறுவனம் உயர் தரமான ஆட்டோமோட்டிவ் சீலிங் சிஸ்டம் மற்றும் எக்ஸ்டீரியர் தயாரிப்பு களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.

இந்த நிறுவனப் பங்கு, கடந்த பல வாரங்களாக ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவந்தது. ஆனால், தற்போது அது முடிவுக்கு வந்து மீண்டும் ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ. 410 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.360 வைத்துக்கொள்ளவும். 

தொகுப்பு: ஜெ.சரவணன் 

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.