இண்டெக்ஸ்

கடந்த வாரத்தின் இறுதியில் (வியாழன் வர்த்தக முடிவில்) இந்தியப் பங்குச் சந்தை நம்பிக்கை தரும் வகையில் வர்த்தகமானது. ஆனால், சந்தையில் பெரிய அளவில் ஏற்றமில்லை. சந்தைக் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பிலேயே வர்த்தகமானதே தவிர, அதற்குமேல் ஏற்றமடைய முடியவில்லை. இதனால், அதில் காளையின் ஆதிக்கமோ அல்லது கரடியின் ஆதிக்கமோ தெளிவாக இல்லை.

ஆனாலும், சந்தை இன்னும் காளை சென்டி மென்டிலேயே இருப்பதால், நாமும் அதன் அடிப்படையிலேயே தொடரலாம்.

பேங்க் நிஃப்டி முந்தைய வார உச்சத்துக்குச் சவால்விடும் வகையில் நகர்ந்தது. ஆனால், அதைக் கடந்து ஏற்றமடையும் அளவுக்கு மொமெண்டம் இல்லாததால், புதிய உச்சங்களை அடைய முடிய வில்லை.

தனியார் வங்கிகள் மேலும் உயர்ந்து வர்த்தகமா வதற்கான சாதகங்கள் இல்லாமல் இருந்ததால், அவை பேங்க் நிஃப்டி குறியீட்டின் ஏற்றத்துக்கும் தடையாகவே இருந்தன. அவை இறக்கம் அடையா விட்டாலும் ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்கள் இல்லாததால், அவற்றின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தன.

கடந்த வாரத்தில் ஐ.டி துறை குறியீடு சற்று நன்றாகவே செயலாற்றியது. வங்கிகள் ஏமாற்றமளித்த நிலையில், பெரிய அளவில் நிஃப்டியில் இறக்கம் ஏற்படாமல் இருந்ததற்கு ஐ.டி பங்குகள் காரணமாக இருந்ததைப் பார்க்கும் போது, நிஃப்டியின் நகர்வுகளில் ஐ.டி பங்குகளுக்கு முக்கிய பங்கு இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது. ஐ.டி துறையின் முன்னணிப் பங்குகளில் முன்னேற்றம் இருப்பதால், மிட் கேப் பங்குகளிலும் முதலீட் டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

சந்தையின் நகர்வுகளில் குறிப்பிட்ட பங்குகளின் செயல்பாடுகளின் ஆதிக்கம் செலுத்துவதுதான் தொடர்கிறது. ஆனால், தற்போது நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளியாகி தாக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. இதனால், சந்தையின் நகர்வுகளில் நல்ல ஏற்ற இறக்கங்களைப் பார்க்கலாம்.

குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் (GSFC)

தற்போதைய விலை: ரூ.143.90

வாங்கலாம்

குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் பங்கில் நிலையான போக்கு தொடர்ந்து இருக்கிறது. இதனால், பங்கின் விலையும் ஏற்றத்தின் போக்கில் நிலைத்திருக்கிறது. இறக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து விடுகிறது. இந்தப் பங்கின் விலை இறக்கம் கண்டு 'இச்சிமோக்கு கிளவுட் சிஸ்டம்' வழங்கிய சப்போர்ட் நிலையை அடைந்தது. ஆனால், தற்போது இந்தப் பங்கு ஏற்றத்துக்கான நகர்வுகளுக்குத் தயாராக இருப்பது தெரிகிறது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். சில வாரங்களில் ரூ.155 - 160 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.135-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

நக்ரிகா எக்ஸ்போர்ட்ஸ் (NAGREEKEXP)

தற்போதைய விலை: ரூ.51.55

வாங்கலாம்

ஒரு பங்கின் சார்ட் பேட்டர்னில் நம்பத் தகுந்த பேட்டர்ன் நிலையாகவும், நீடித்த அக்குமிலேஷனுடனும் இருக்கும் ரவுண்டிங் பாட்டம் பேட்டர்ன் ஆகும். நக்ரீகா எக்ஸ்போர்ட்ஸ் பங்கின் சார்ட்டில் அத்தகைய பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இதனால், அந்தப் பங்கில் பிரேக் அவுட் நிலை அடைந்திருக்கிறது. எனவே, வரும் காலங்களில் இந்தப் பங்கில் ஏற்றத்தின் போக்கைக் காணலாம். உடனடி டார்கெட்டாக ரூ.60 இருக்கிறது. இந்தப் பங்கின் விலை அடுத்த 1-2 மாதங்களில் ரூ. 75 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.43-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி (JSWENERGY)

தற்போதைய விலை: ரூ.83.15

வாங்கலாம்

இந்தப் பங்கின் சார்ட்டில் விலை நகர்வின் போக்கு நிலையாக இருக்கிறது. மேலும் இந்தப் பங்கு எஃப் அண்டு ஓ பிரிவில் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் தொடர் ஏற்றத்துக்கான போக்கு தொடர்ந்து இருக்கும் எனில், இந்தப் பங்கை வாங்கி வைத்திருக்கும் முடிவுக்கு வரலாம். தற்போது, இந்தப் பங்கில் ஏற்பட்ட சமீபத்திய இறக்கம் முடிவுக்கு வந்து ஏற்றத்துக்கான சாத்தியங்களுடன் தயாராக இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஒரு மாத காலத்தில் இந்தப் பங்கு ரூ.91 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.77-க்குக்கீழ் வைத்திருக்கவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.