நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுவது முக்கியம் என்றும், சமீபத்தில் அடைந்த ஏற்றங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வர்த்தகம் செய்ய வேண்டும்  என்றும் கடந்த இதழில் எச்சரித்திருந்தேன். அது சரியான கணிப்பாகவே இருந்தது. கடந்த வாரத்தில், எல்லா வர்த்தக நாள்களிலும் சந்தை இறக்கத்தைச் சந்தித்து, சந்தைக் குறியீடு மொத்தமாக இந்த வாரத்தில் 2.5 சதவிகிதம் குறைந்து வர்த்தகமானது. வாரத்தின் இறுதியில், இறக்கம் அதிகமாக இருந்தது. கடந்த வியாழனன்று எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரியை ஒட்டி இறக்கம் காண ஆரம்பித்த சந்தை, வெள்ளிக்கிழமையும் இறக்கத்திலேயே தொடர்ந்தது. இது பலரையும் நம்பிக்கை இழக்கச் செய்தது. சந்தை கிட்டதட்ட குறைந்தபட்ச டாப் அண்டு பாட்டம் பேட்டர்னைத்தான் தினசரி சார்ட்டில் உருவாக்குவதாகத் தெரிகிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை அடைந்த இறக்கத்துக்கும் கீழ், வரும் வாரத்தில் சந்தை இறக்கமடைந்தால் இந்தப் பேட்டர்ன் உருவாக வாய்ப்புள்ளது. அப்படி உருவானால் அது சந்தையின் போக்கில் குறுகிய காலத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்நிலையில் இந்த இறக்கம் அதிகமாக இருக்குமா என்பதுதான் நம்மிடையே எழுகிற கேள்வி. அதற்கான ஆதாரங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். வீக்லி சார்ட்டுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட இசிமோக்கு சப்போர்ட் நிலைகள் காணப்படுகின்றன. இவை 10000 புள்ளிகளுக்கு அருகில் சப்போர்ட்டாக இருக்கும். இந்த நிலையில், சந்தை தன்னை தக்கவைத்துக்கொள்ளும்போது அந்த நிலையில் பெரிய அளவில் ஓப்பன் இன்ட்ரஸ்ட் உருவாக வாய்ப்புள்ளதால், அது நல்ல சப்போர்ட்டாக வலுப்பெறும். மேலும் பேங்க் நிஃப்டியானது நிஃப்டி அளவுக்கு இறக்கம் அடையவில்லை. அதனால், நிஃப்டி பெருமளவு இறக்கமடையாமல் இருக்கவும் பேங்க் நிஃப்டி உதவியாக இருந்தது.

எக்ஸ்பைரி நாளில் அடைந்த இறக்கம் மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதிகமான இறக்கத்தினாலும் சந்தையில் இருந்த பெருமளவு லாங்க் பொசிஷன்கள் வெளியே எடுக்கப் பட்டிருப்பதற்கும், நிறைய ஷார்ட் பொசிஷன்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சந்தையில் விலை நகர்வுகள் பெரிய அளவில் இல்லாதபட்சத்தில் சில பாட்டம் ட்ரெண்டுகள் உருவாகும் சூழ்நிலை வரலாம்.

முக்கியமாக எதிர்பார்க்கப்படும் செய்தியாக குஜராத் சட்ட சபை தேர்தல் இருக்கிறது. தேர்தல், வரும் மாதத்தின் மத்தியில்தான் நடக்கிறது என்றாலும், அதன் தாக்கம் அதற்கு முந்தைய வாரங்களில் நிச்சயம் இருக்கும். நகர்வுகள் ஏற்றத்தின் போக்கில் அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றன. எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் நிஃப்டியில் 10000-10350 என்ற வரம்பில் நகர்வுகள் இருக்க வாய்ப்புள்ளன. குறிப்பிட்ட பங்குகளின் விலை நகர்வுகளே சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!விம்டா லேப்ஸ் (VIMTALABS)


தற்போதைய விலை: ரூ.163.25

வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்ததால், சந்தையில் இதன் பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நன்றாக ஏற்றம் கண்டதோடு, நீண்டகால ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து நல்ல பிரேக் அவுட் நிலையை உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்தப் பங்கை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மேலும், வரும் வாரங்களில் அதிக வரம்புகளில் சில புல்பேக் நகர்வுகளையும் பார்க்கலாம். எனவே, இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.190-195 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.150-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

டைம் டெக்னோபிளாஸ்ட் (TIMETECHNO)

தற்போதைய விலை: ரூ.208.90

வாங்கலாம்

இந்தப் பங்கின் விலை நகர்வுகளில் நல்ல போக்கு இருந்து வருகிறது. இந்தப் பங்கில் ஏற்படும் இறக்கங்கள் அனைத்துமே ஏற்றத்துக்கான பாட்டமாகவே உருவாகிறது. தற்போது, இந்தப் பங்கு விலை மீண்டும் ஏற்றமடைந்து புதிய உச்சங்களை அடைய தயாராக இருக்கிறது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் உருவாகியுள்ள முக்கியமான சுழற்சியானது இன்னும் நிலைகொண்டிருப்பதால், அந்தச் சுழற்சியை முடிக்க சில இறக்கங்களுக்கு இந்தப் பங்கு உள்ளாகலாம். அந்த இறக்கங்களை, வாங்கும் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.     ரூ. 230-238 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.200-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் (GUJFLUORO)

தற்போதைய விலை: ரூ.877.45

வாங்கலாம்

ஏற்கெனவே சில முறை இந்தப் பங்கை பரிந்துரைத்திருக்கிறோம். சந்தையில் தொடர்ந்து நன்றாகவே செயலாற்றி வருவதோடு, இதன் சார்ட்டை பார்க்கும்போது காளையின் ஆதிக்கமும் நன்றாகவே தெரிகிறது. கடைசி சில வாரங்களில் பெரிய ஏற்றங்களை இந்தப் பங்கில் பார்க்க முடிந்தது. கடந்த வார இறுதியில் மீண்டும் ஓர் ஏற்றத்துக்கான சிக்னல் இந்தப் பங்கில் உருவாகியிருக்கிறது. இந்தப் போக்கு ரூ.900 என்ற நிலையை மீண்டும் ஒருமுறை கடக்கும்போது உறுதியாகும். எனவே, ரூ.900-ஐ பிரேக் அவுட் ஆகும்போது இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.925 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 880க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.  

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.