Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், சந்தை குறிப்பிட்ட வரம்புக்குள் வர்த்தகமாகும் என்று எதிர்பார்த்தோம். கிட்டதட்ட சந்தைக் குறியீடுகள் சிறிய வரம்புக்குள் மெதுவாக நகர்ந்து வர்த்தகமாகி, மேலும் இறக்கமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டி பயமுறுத்தியது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்லாமல், தொழில்துறைக் குறியீட்டு வளர்ச்சிக் குறைந்து, பணவீக்கமும் அதிகரித்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சந்தையை இறக்கம் அடைய செய்வதற்கான செய்திகளும் வந்தன. ஆனால், சந்தை இவற்றை யெல்லாம் தாண்டி அதிக இறக்கமடையாமல் தன்னைத் தற்காத்துக்கொண்டு, இறக்கத்திலிருந்து  மீண்டு ஏற்றமடையவும் செய்தது.

அதேசமயம், குஜராத் தேர்தல் முடிவுகள் மீதுள்ள நிலையற்றத்தன்மையினால், சந்தை காளையின் ஆதிக்கத்தில் இன்னும் மேல்நோக்கி நகர்வதற்குத் தயக்கம் காட்டுகிறது. எனவே, சந்தையில் குறிப்பிட்ட பங்குகளைப் பொறுத்தே கடந்த வாரத்தில் வர்த்தகமானது.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!கடந்த வாரத்தில் வங்கிகளும் பெரிதாக ஏற்றமடையவில்லை. சில தனியார் வங்கிகள் சற்று அழுத்தத்தி லேயே தொடர்வதால், பேங்க் நிஃப்டி தற்போதைய வலுவான சப்போர்ட் நிலையான 25000 புள்ளிகளை நோக்கி இறங்கியது. இந்த நிலையில், மீண்டும் பேங்க் நிஃப்டி ஏற்றமடைந்தால், வாங்குவதற்கு வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் தயாராக இருக்கிறார்கள். 

மற்ற துறை குறியீடுகளும் சந்தைக்குப் பெரிதாக உதவவில்லை. சில குறியீடுகளில் ஏற்றத்துக்கான அறிகுறிகள் இருந்தபோதிலும்,  அவற்றால் சந்தையில் எந்த வித்தி யாசத்தையும் ஏற்படுத்த முடிய வில்லை. மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளிலும் லாப நோக்கில் விற்பனை இருந்ததால், அழுத்தத்திலேயே இருந்தன.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையின் போக்கை, குறுகிய கால அடிப்படையில் தீர்மானிப்பதாக குஜராத் தேர்தல் முடிவுகளே உள்ளன. பாஜகவின் செயல்பாடு மோசமாக இருந்தால், அதன் தாக்கம் சந்தையில் இருக்கும். ஆனால், முடிவுகள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும்கூட, விலை இறக்கம் 10000 புள்ளிகள் வரை மட்டுமே இருக்கும். ஒருவேளை வெற்றி அவர்கள் பக்கம் இருந்தால், சந்தைக்கு இருக்கும் தடைகள் நீங்கி அதிகளவில் பங்குகள் வாங்கப்படுவது நடக்கலாம். எனவே, வரும் வாரத்தில் சந்தை அதிக ஏற்ற இறக்கங்களை அடைய வாய்ப்புள்ளது.

வாசகர்கள், தங்கள் பொசிஷன் களில் கவனமாக இருக்க வேண்டும். சந்தையின் போக்கு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது உறுதியானபிறகு புதிதாகப் பங்குகளை வாங்கலாம்.    

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கேம்லின்ஃபைன் சயின்சஸ் (CAMLINFINE)

தற்போதைய விலை: ரூ.113.80

வாங்கலாம்


இந்தப் பங்கில் ஏற்ற இறக்கமில்லாத போக்கு, கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பங்கின் விலை, அதன் முந்தைய உச்சத்திலிருந்து 50% வரை இறக்கம் கண்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்தப் பங்கின் விலை நகர்வுகளில் ஏற்றத்தின் போக்கு தெரிகிறது. தற்போதுள்ள ரெசிஸ்டன்ஸ் நிலையைத் தாண்டி பிரேக் அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் தெரிவதால், இந்தப் பங்கில் ஏற்றத்தைப் பார்க்கலாம். எனவே, இந்தப் பங்கை ரூ.100 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம். அடுத்த 2-3 மாதங்களில் ரூ.150 வரை உயர வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் (JAMNAAUTO)

தற்போதைய விலை: ரூ.66.95

வாங்கலாம்


சமீபகாலமாக, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அவற்றில் ஒன்று, ஜம்னா ஆட்டோ. இந்தப் பங்கு, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வேகமாக ஏற்றம் கண்டது. பின்னர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே வர்த்தகமாகி வந்தது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட வரம்பானது மேல்நோக்கிய நகர்வாக இருப்பதோடு, அதன் நகர்வு பேட்டர்னில், அதைத் தாண்டி மேல்நோக்கி நகர்வதற்கான பிரேக் அவுட் நிலையையும் கொண்டிருக்கிறது.

எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ. 82 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 58-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரமா ஸ்டீல் டியூப்ஸ் (RAMASTEEL)

தற்போதைய விலை: ரூ.198.75

வாங்கலாம்


ஸ்டீல் டியூப் துறையின் பங்குகள் சமீப காலமாகவே சிறப்பாகச் செயலாற்றுகின்றன. அவற்றில் கூடுதல் சிறப்புடன் செயல்படுகிறது ரமா ஸ்டீல். இந்தப் பங்கின் விலை நகர்வுகளில் பாசிட்டிவான போக்கு சிறப்பாக உள்ளது.

இறக்கங்களின்போதுகூட இந்தப் பங்கிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேற விருப்பமில்லாமல் இருப்பதால், விலை இறக்கமும் குறைவாகவே இருக்கிறது. இதனால், இந்தப் பங்கை வாங்குவதில் புதிதாக ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

எனவே, தற்போது இந்தப் பங்கு தனது சமீபத்திய ஏற்ற இறக்கமில்லாத நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி, நல்ல உச்சத்தை அடையத் தயாராக இருக்கிறது. எனவே, இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 180 உடன், இந்தப் பங்கு 225-250 வரை உயர வாய்ப்புள்ளது. 

குறிப்பு : பங்குகளின் விலை நிலவரம், டிசம்பர் 14

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.