நாளுக்கு நாள் நம்மவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கூடவே குழப்பமும் அதிகமாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் புரியாமல் குழம்பிப் போய் இருக்கும் விஷயங்களுக்கு விடை காண்போம்.

1. முதலீட்டை இழக்க வாய்ப்பு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முக்கியமாகக் கடன் சார்ந்தது, பங்குச் சந்தை சார்ந்தது, பேலன்ஸ்டு ஃபண்ட் (கடன், பங்குச் சந்தை கலந்தது) என மூன்று வகைகள் உண்டு. இதில், பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தில் மட்டுமே மூலதனத்தை இழக்க வாய்ப்புள்ளது. அதுவும் குறுகிய காலத்தில் மட்டுமே. நீண்ட காலத்தில் பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் பரவலாக்கப் படுவதால், மூலதன இழப்புக்கு வாய்ப்பில்லை.

2. பெரிய தொகை தேவையா?

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு சிறு தொகையைக் கூட முதலீடு செய்யலாம். ரூ.500 இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். மாதம் ரூ.500 வீதம் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். சில மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும்.

3. அதிக என்.ஏ.வி கொண்ட ஃபண்டை தவிர்த்தல்

அதிக என்.ஏ.வி மதிப்புக்கொண்ட ஃபண்டில் முதலீடு செய்தால், குறைவான யூனிட்கள் கிடைக்கும் என்பதற்காக பலரும், அந்த மாதிரி ஃபண்டுகளைத் தவிர்க்கிறார்கள். ஒரு ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பைப் பார்க்க தேவையில்லை. அது கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்தால் போதும்.

பெஞ்ச்மார்க் தாண்டி வருமானம் கொடுத்திருந்தால் அது நல்ல ஃபண்ட். தாராளமாக முதலீடு செய்யலாம். சிலர் என்.ஏ.வி மதிப்பு அதிகமாக இருந்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என நினைக்கிறார்கள். இது தவறு. என்.ஏ.வி மதிப்பைப் பார்க்க தேவையில்லை, வருமானத்தை மட்டும் பார்த்தால் போதும்.

4. நீண்ட காலம் முதலீடு செய்யும் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்டில் குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம் என அனைத்து கால கட்டங்களுக்கும் தேவையான முதலீட்டை மேற்கொள்ள திட்டங்கள் இருக்கின்றன. குறுகிய காலத்துக்கு லிக்விட் ஃபண்ட், நடுத்தரக் காலத்துக்கு பேலன்ஸ்டு ஃபண்ட், நீண்ட காலத்துக்கு ஈக்விட்டி ஃபண்ட் என பல திட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் வருமானம், ஃபண்ட் வகை மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து ஆண்டுக்கு 6% தொடங்கி 15% வரை கிடைக்கலாம்.

5. என்.எஃப்.ஓ முதலீடு லாபகரமாக இருக்கும்

ஏற்கெனவே, இருக்கும் ஃபண்டைக் காட்டிலும் புதிய ஃபண்ட் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என நினைப்பது தவறு. ஏற்கெனவே இருக்கும் ஃபண்டின் செயல்பாடு தெரியும் என்பதால் அதற்கேற்ப முதலீட்டை மேற்கொள்ள முடியும். புதிய ஃபண்டின் செயல்பாடு இனிதான் தெரியும் என்பதால், அதிக ரிஸ்க் இருக்கிறது. ஃபண்டின் வருமானம் என்பது அந்த ஃபண்டின் மேனேஜர்களைப் பொறுத்து உள்ளது.

6. கடந்த கால வளர்ச்சி, பிற்கால வளர்ச்சியை நிர்ணயிக்கும்

உதாரணத்துக்கு, ஒரு ஃபண்ட், வங்கியின் வளர்ச்சியால் குறிப்பிட்ட காலத்தில் நன்கு லாபம் ஈட்டியது. அதே ஃபண்ட், வங்கியின் வாராக் கடன் பிரச்னையால் வளர்ச்சிக் குறைந்தது. இப்போது, மத்திய அரசின் நிதி உதவி யால் அந்த ஃபண்ட் மீண்டும் வளர்ச்சி காண ஆரம்பித்திருக்கிறது. ஆக, பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் இருக்கும். கடந்த கால வளர்ச்சி, பிற்கால வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

7. டீமேட் கணக்கு தேவை

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான், ஆதார் எண் இருந்தால் போதும். டீமேட் கணக்கு தேவையில்லை. ஆனால், டீமேட் கணக்கு ஏற்கெனவே வைத்திருந்தால், மியூச்சுவல் ஃபண்டை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

8. முதலீடு செய்துவிட்டு மறந்து விடுங்கள்

இப்படி இருப்பது மிக மிக தவறு. நாம் செய்த முதலீடு எவ்வாறு செயல்படுகிறது என்று கண்டிப்பாக ஆராய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை எவ்வாறு வளர்ச்சி இருக்கிறது என்று கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் நிதியை முறையாகக் கையாள முடியும். ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு இப்படியிருந்தால், அந்த ஃபண்ட் சரியில்லாத ஃபண்ட் என்கிற போது மூலதனத்துக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

9. முதன்முதலில் முதலீடு செய்பவர்களுக்கு...

முதன்முதலாக முதலீடு செய்பவர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, கடன் சார்ந்த ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டு களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.