Published:Updated:

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

னிக்கிழமை அன்று காலையில் கான்க்ளேவ்  மற்றும் எக்ஸ்போ நடக்கவிருப்பதால், இதழ் முடிக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம். கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ தொடர்பான பணிகளைக் கொஞ்ச நேரம் கவனித்த ஷேர்லக், ‘‘நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். உங்கள் பணிகள் தங்கு தடையின்றி நடக்கட்டும். எனவே, நேரடியாகச் செய்திகளுக்கு வந்துவிடுகிறேன்’’ என்று சொன்ன ஷேர்லக், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.  

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

நேரடியாகப் பட்டியலிடப்பட்ட பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு, அதிக வருமானத்தை இந்த வருடம் கொடுத்திருக்கிறதே?

‘‘சந்தையின் அபரிமிதமான வளர்ச்சி, அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. சந்தையின் வளர்ச்சியால், நேரடியாகப் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடு இந்த வருடத்தில் 26.8%  வளர்ச்சியடைந்துள்ளது.

மொத்தமாக முதலீடுகளின் சொத்து மதிப்பு வளர்ச்சி 10.9 சதவிகிதமாக உள்ளது. இந்த வளர்ச்சி  மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் மற்றும் பென்ஷன் ஃபண்ட் உள்ளிட்ட பிற நிதி சார்ந்த முதலீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும், நேரடியாகப் பங்குகளில் செய்யப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் இவற்றின் வளர்ச்சிக் குறைவாகவே இருக்கிறது.’’  

புதிய மியூச்சுவல் ஃபண்டுகள் வெளியீடு 9 வருட உச்சத்தை எட்டியிருக்கிறதே?

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில், ஈக்விட்டி சார்ந்த புதிய ஃபண்டுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு 2008-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டில், புதிய ஃபண்ட் திட்டங்களில் ரூ.16,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில், 52 புதிய ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகள் என்.எஃப்.ஓ-களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை குளோஸ் எண்டட் திட்டங்கள் ஆகும்.

சொல்லப்போனால், 2014-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவுதான். சந்தையின் மீதான நம்பிக்கைதான் இதற்குக் காரணம். மேலும், இப்போதைய நிலையில் முதலீடு செய்வதற்கு, பங்குச் சந்தையை விட்டால் வேறு நல்ல முதலீட்டு திட்டங்கள் சந்தையில் இல்லை.’’

நவம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்த பங்குகள் எவை?

‘‘நவம்பரில் ஃபண்ட் மேனேஜர்கள் டெலிகாம், ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி துறைகளில் கவனம் செலுத்தியுள்ளனர். பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, ஐ.டி.சி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றில் அதிகளவு முதலீடு செய்துள்ளனர்.’’

யுனிடெக் பங்கு விலை சரிந்துள்ளதே!

‘‘யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதற்கான தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் ஆணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையையொட்டி, இந்தப் பங்கின் விலை 13% குறைந்து வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 16.90% இறக்கம் கண்டது. இதனால், இதன் மார்க்கெட் கேபிட்டலைசேஷனில் ரூ.278 கோடியை இந்த நிறுவனம் இழந்துள்ளது.’’

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு அதிகரித்துள்ளதே!

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு விழிப்புஉணர்வுக் கூட்டங்களும், விளம்பரங்களும் அதிகரித்ததே காரணம். எல்லோருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்ற வார்த்தை பரிச்சயமாகி வருகிறது. குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) மூலம் முதலீடு செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பரில் மட்டும்  ரூ.5,900 கோடி எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்த எஸ்.ஐ.பி முதலீட்டைவிட 52%  அதிகமாகும்.’’

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளின் செயல்பாடு குறையலாம் என்று சொல்லப்படுகிறதே?

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகப்படியான முதலீடுகள் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த முதலீடுகளை அவர்கள் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள்.  எனவே, ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோக்களில் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. வழக்கமாக, 30-50 பங்குகள் இருக்கும் போர்ட்ஃபோலியோக்களில் இப்போது 60-70 பங்குகள் இருக்கின்றன.  இதனால், அவற்றின் ரிஸ்க் அதிகரிக்கிறது. நீண்ட கால அடிப்படையில் அவை சிறப்பாகச் செயலாற்ற வாய்ப்பிருந்தாலும், குறுகிய காலத்தில் அவற்றின் செயல்பாடு குறைய வாய்ப்புள்ளது.  இதனால், மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் கொடுத்த வருமானத்தைப்போலவே வரும் ஆண்டுகளிலும் தர முடியாமல் போகலாம்.’’

சில  ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கின்றனவே?

‘‘உண்மைதான். கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 54% வருமானம் கொடுத்திருக்கிறது. ரூ.1,578 கோடி மதிப்பிலான பங்குகள் ரூ.5,664 கோடியாக உயர்ந்துள்ளன. எல் அண்டு டி எமர்ஜிங் பிசினசஸ் ஃபண்ட் 56 சதவிகித வருமானம் கொடுத்திருக்கிறது. ரூ.340 கோடி மதிப்பிலான பங்குகள் ரூ.2,283 கோடியாக உயர்ந்துள்ளன. இவை, அந்த ஒரு வருடத்தில் தங்களின் போர்ட்ஃபோலியோவை அதிகப்படுத்தியுள்ளன.

 ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் தனது பங்குகளின் எண்ணிக்கையை ஜனவரி 2015-ல், 60-லிருந்து 87-ஆக உயர்த்தியுள்ளது. எல் அண்டு டி எமர்ஜிங் பிசினசஸ் ஃபண்ட் 53-லிருந்து 75-ஆக உயர்த்தியுள்ளது. இன்னும் சில ஃபண்டுகளும் தங்களது போர்ட்ஃபோலியோவை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால், எல்லா ஃபண்டுகளும் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டிருக்க முடியாது. ஃபண்ட் மேனேஜர்கள் தங்கள் அலோகேஷனைச் சரியாகச் செய்ய வேண்டும்.’’
 
பார்மா கம்பெனிகள் சிலவற்றுக்கு காம்படிஷன் கமிஷன் நோட்டீஸ் அளித்துள்ளதே?

‘‘அதிக லாபம் ஈட்ட, தங்களின் தயாரிப்புகளுக்கு அதிக அளவிலான விலையை நிர்ணயம் செய்ததற்காக காம்பட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு, நோவார்டிஸ், அபாட், எம்க்யுர் ஃபார்மா மற்றும் யுஎஸ்வி ஆகிய நான்கு பார்மா கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக இந்த நிறுவனங்கள்மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.’’

குஜராத் தேர்தல் குறித்த கணிப்பு, சந்தையில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

‘‘குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்ற கணிப்பு ஊடகங்களில் பரவி வருகின்றன. பெரும்பாலும் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான சூழல் இருப்பதாகவே அவை சொல்கின்றன. தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியாக இருக்கிறது.  ஆனாலும், கணிப்புகளின் அடிப்படையில் சந்தை வெள்ளிக்கிழமையன்றே நன்றாக ஏற்றம் அடைய ஆரம்பித்துவிட்டது. வெள்ளிக்கிழமையன்று கிட்டதட்ட ஒரு சதவிகிதம் வரை சந்தையில் ஏற்றம் இருந்தது. தேர்தலில் பாஜக வெற்றி அடைந்தால், வரும் வாரம் சந்தையில் அதிக வரம்பிலான ஏற்ற இறக்கங்களைப் பார்க்கலாம்.’’
 
கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது..?

‘‘ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு கரூர் வைஸ்யா பேங்க், பி.ஹெச்.இ.எல், என்.எம்.டி.சி’’ என்றவர், ‘‘கான்க்ளேவும், எக்ஸ்போவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்” என்றார். 22-ம் தேதி மாலை, சென்னையில் நாணயம் விகடன் நடத்தும் ‘நாணயம் பிசினஸ் ஸ்டார் விருது’ நிகழ்ச்சிக்கும் வந்துவிடுங்கள்’’ என்று அழைப்புவிடுத்தோம். 

‘‘நிச்சயமாக’’ என்று சொல்லிவிட்டுப் புறப்படும்முன், “ஜனவரி 1 முதல் 2,000 ரூபாய்க்குள் டெபிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்தால் எந்தக் கட்டணமும் இல்லை என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மக்களுக்குச் சாதகமான விஷயம்தான்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

பி.எஸ்.இ அறிமுகப் படுத்தும் புதிய இண்டெக்ஸ்கள்! 

நி
றுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷனை அடிப்படையாகக் கொண்டு, மேலும் ஐந்து புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்த பி.எஸ்.இ  தற்போது  திட்டமிட்டுள்ளது. லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறு வனங்களின் செயல்பாடு களை அளவிடுவதற்காக இத்தகையப் புதிய குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படு வதாகக் கூறியிருக்கிறது பி.எஸ்.இ.

 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வகைப்படுத்துமாறு, கடந்த அக்டோபர் மாதம் செபி கேட்டுக்கொண்டது. அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கையை பி.எஸ்.இ எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஷேர்லக்: பார்மா பங்குகள் உஷார்!

ஐ.பி.ஓ  வெளியீடு... கெடுபிடி?

பு
திதாக ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனங்களுக்கு, செபி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்பே நிறுவனங்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, பங்கு களை வாங்க வைப்பதற் கான முயற்சிகள் நடப்ப தாகச் சந்தைக் கட்டுப் பாட்டு ஆணையமான செபி கருதுகிறது. ஐ.பி.ஓ வந்த நிறுவனங்களின் விவரங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது குறித்து விசாரணை செய்வதோடு, ஐ.பி.ஓ வெளியீட்டின் நிபந்தனைகளில் மாற்றங் களையும் கொண்டு வருகிறது. இதனால், ஐ.பி.ஓ வெளியீடுகளில் நடக்கும் முறைகேடான விற்பனை தவிர்க்கப்படும்.

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க : http://bit.ly/2kwIZO6