Published:Updated:

ஸ்டீலுக்கான இறக்குமதி வரி உயர்வு? - ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்!

ஸ்டீலுக்கான இறக்குமதி வரி உயர்வு? - ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்!
News

அமெரிக்க டாலருக்கு  நிகரான ரூபாயின் மதிப்பு, கடந்த சில வாரங்களாகக் கடுமையாகச் சரிந்து வருகிறது. இந்தநிலையில், ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உருக்கு இறக்குமதி மீதான தீர்வையை அதிகரிக்க  மத்திய உருக்குத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இறக்குமதியாகும் இந்தப் பொருள்கள் மீது 5 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதம் வரை தீர்வை விதிக்கப்படுகிறது. இதை 15 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக முக்கியத்துவம் இல்லாத பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அதற்காகச் செலவிடப்படும் அமெரிக்க டாலர்களைச் சேமிப்பதன் வாயிலாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கட்டுப்படுத்தப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 21 லட்சம் டன் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 15 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2017-18-ம் நிதியாண்டில், 84 லட்சம் டன் உருக்கினாலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து, தங்கம் மற்றும் உயர் ரக எலெக்ட்ரானிக் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz