Published:Updated:

கறுப்புப் பணம் ஒழிவதால் ரூபாய் மதிப்பு சரிவு: சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம்

கே.எஸ்.தியாகராஜன்

'கறுப்புப் பணம் நாட்டை விட்டு ஒழிவதால்தான் ரூபாயின் மதிப்பு சரிகிறது' என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி   கருத்து தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிவதால் ரூபாய் மதிப்பு சரிவு: சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம்
கறுப்புப் பணம் ஒழிவதால் ரூபாய் மதிப்பு சரிவு: சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம்

'கறுப்புப் பணம் நாட்டை விட்டு ஒழிவதால்தான், ரூபாயின் மதிப்பு சரிகிறது' என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் ஒழிவதால் ரூபாய் மதிப்பு சரிவு: சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம்

கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  கூறியதாவது, 'அமெரிக்கா முன்னேறிய நாடாக இருக்கும் வரையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகத்தான் இருக்கும். நாட்டில் இருந்து கறுப்புப் பணமாக இந்திய ரூபாய் வெளியே சென்றுகொண்டிருப்பதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துவருகிறது.

இந்தியாவில் இருக்கும் பணத்தின் பெரும் தொகை கறுப்புப் பணமாக உள்ளது. இந்தப் பணம், தற்போது நாட்டில் இருந்து வெளியே செல்கிறது. எனவே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையத்தான் செய்யும். மிக வளர்ந்த நாடு என்ற நிலையை அமெரிக்கா இழக்க நேரிடும்போது, இதர நாடுகளின் பண மதிப்பு கூடும். தற்போது அதற்கான வாய்ப்பில்லை. அதுவரை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வாக இருப்பதைத் தடுக்க இயலாது' என்றார்.