Published:Updated:

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!
பிரீமியம் ஸ்டோரி
நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நான்கு நாள்கள் ஏற்றத்திலும், ஒரேயொரு நாள் சிறிய அளவிலான இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, (10588-10690 எல்லைகளைத் தொட்டு) வார இறுதியில் வாராந்திர ரீதியாக 122 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.   

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

தற்போதைக்கு காளைகளின் பலம் சற்றுக் கூடுதலாகவே இருப்பதைப்போன்ற சூழலே நிலவுகிறது. அவ்வப்போது சிறிய இறக்கங்கள் வந்தாலுமே மீண்டும் ஏற்றங்கள் வந்துவிடுவது இதையே காட்டுகிறது. இனி 10600 லெவலைத் தக்கவைத்துக்கொண்டால், 10700-10770 என்பதும் சாத்தியமே என்பதற்கான டெக்னிக்கல் சூழலின் ஆரம்ப நிலையிலேயே தற்போதைக்கு சந்தை இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

வால்யூமின்மீதும், செய்திகளின்மீதும் தொடர்ந்து கவனம் வையுங்கள். சராசரி வால்யூமைவிட கணிசமாகக் குறைவாக தொடர்ந்து வர்த்தகமானாலோ, நெகட்டிவ் செய்திகள் வந்தாலோ, காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாது போனாலோ, சிறியதொரு (அதிகபட்சமாக 10500 வரையில்) டெக்னிக்கல் கரெக்‌ஷன் எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும்.  

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் இந்தச் சூழலில் வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் கூடிய சிறிய எண்ணிக்கையிலான உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளும் வண்ணமே டிரேடிங் செய்யவேண்டும்.

கேப் ஓப்பனிங் வந்தால், நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்ய ஆரம்பிக்கவும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர் நைட் வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.   

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

வரும் வாரத்தில், அனைத்து நாள்களிலும் கடைசி அரைமணி நேரத்திற்கு முன்னரே வியாபாரத்தை முடித்துக் கொள்வது நல்லது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம்  அட்டவணையில் தரப்பட்டு ள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்வது நல்லது.

நிஃப்டியின் போக்கு: சற்றுக் கூடுதலாகவே தெரியும் காளைகளின் பலம்!

டிரேடர்ஸ் பக்கங்கள் டேட்டா பகுதியைப் படிக்க : http://bit.ly/2D83egm