Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்திலும் காளையின் போக்கில் வர்த்தகமானது சந்தை. நிஃப்டி, வாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு வரம்பில் உயர்ந்து வர்த்தகமானது. நிஃப்டி, அப்போது அடைந்த கூடுதல் வளர்ச்சியை வாரம் முழுவதும் தக்கவைத்துக்கொண்டு புதிய வரலாற்று உச்சங்களைப் பதிவு செய்தது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், வெள்ளிக்கிழமையன்று சந்தையில் திடீர் இறக்கம் ஏற்பட்டது. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய செய்தியாளர்கள் கூட்டம் ஏற்படுத்திய பதற்றம்தான். ஆனால், விரைவிலேயே அந்தப் பதற்றத்திலிருந்து மீண்டு சந்தை, ஏற்றத்தின் போக்கில் வர்த்தகமானது.

இதிலிருந்து சந்தை, காளையின் போக்கில் வலுவாக இருப்பது, மேலும் ஏற்றமடையும் வாய்ப்பு களுடன் இருப்பதை உறுதி செய்யும் அறிகுறி யாகவே தெரிகின்றன.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல, நிஃப்டியின் ஏற்றத்துக்கு ஐ.டி துறை பங்குகளின் ஏற்றம் உதவியாக இருந்திருக்கின்றன. ஐ.டி துறை முன்னணி நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் இரண்டின் காலாண்டு முடிவுகளும் எதிர்பார்த்தபடி இருந்ததால், ஐ.டி துறை குறியீடு ஏற்றம் கண்டது. இனிவரும் நாள்களிலும் ஐ.டி துறை நன்றாக ஏற்றமடையும் வாய்ப்புகளுடன் இருக்கின்றன.

ஆனால், பேங்க் நிஃப்டியின் செயல்பாடு முன்னேற்றம் இல்லாமல் தடையாகவே தொடர் கிறது. ஆனாலும், தனியார் வங்கிகள் தங்களின் தற்போதைய விலையில் தங்களைத் தக்கவைத்திருக் கின்றன. சில வங்கிகளின் நிதிநிலை முடிவுகள் பாசிட்டிவாக வந்தால் உதவியாக இருக்கும். எனவே, வரும் வாரத்தில் வங்கிகளின் காலாண்டு முடிவுகளும் வங்கிப் பங்குகளின் நகர்வுகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படும்.

நிஃப்டி தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால், ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவு பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதை மேலும் தொடரலாம். கடந்த வாரத்தில் இந்த இரண்டு குறியீடுகளுமே நன்றாக ஏற்றம் கண்டிருக்கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!சந்தையில் வர்த்தகமும் பரவலாக நன்றாகவே இருக்கிறது. காரணம், சந்தையில் முதலீடுகள்  குவிவது தொடர்ந்து சிறப்பாகவே இருக்கிறது. இதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் முதலீடு செய்த பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது. இது பாசிட்டிவான அறிகுறியாக இருக்கிறது.

இது காலாண்டு முடிவுகள் வெளியாகும் காலம் என்பதால், வரும் வாரத்தில் பல பங்குகளைச் சந்தையில் கவனிக்க வேண்டும்.  நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்மீது எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கடந்த சில காலாண்டுகளைக் காட்டிலும், இப்போது முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவே, அந்த நம்பிக்கை ஏமாற்றமளிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.

நிஃப்டி விரைவிலேயே 11000 என்ற நிலையை அடையும் சாத்தியம் இருப்பதால், காளையின் போக்கில் வாரத்தின் இடையில் ஏற்படும் இறக்கங்களை, முதலீட்டுக்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அரவிந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ் (ARVSMART)

தற்போதைய விலை: ரூ.209.30

வாங்கலாம்


ஸ்மார்ட் சிட்டி பிசினஸுடன்  தொடர் புடைய நிறுவனப் பங்குகள் சந்தையில் நல்ல டிமாண்டில் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்தப் பங்கு சில காலமாக சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. கடந்த வாரத்தில் அதன் ஏற்றத்தின் போக்கு வலுவாக இருந்தது. புதிய உச்சங்களையும் நோக்கி நகர்ந்தது. இந்தப் போக்கு, வரும் காலங்களிலும் தொடரும் என்பதால், தற்போதைய விலையில் வாங்கலாம். சில வாரங்களில் 230 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் 195-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாப்கோ (WABCOINDIA)

தற்போதைய விலை ரூ.7,623.70


வாங்கலாம்

இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னில் காளையின் போக்கைப் பார்க்க முடிகிறது. சில காலத்துக்கு முன், இந்தப் பங்கின் உச்சநிலையில் நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து நிலையான ஏற்றம் இந்தப் பங்கில் இருந்து வந்தது. தற்போது, இந்த நிலையிலிருந்து பிரேக் அவுட் ஆகி மேலும் வலுவாக ஏற்றமடையத் தயாராக இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். மூன்று மாதங்களில் ரூ.9,000 வரை உயர வாய்ப்புள்ளது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எவ்ரெடி இண்டஸ்ட்ரீஸ் (EVEREADY)

தற்போதைய விலை: ரூ.456.50

வாங்கலாம்


நீண்ட பாரம்பர்யம் கொண்ட பேட்டரி உற்பத்தி நிறுவனமான எவ்ரெடி, புதிய பிசினஸ்களில் நுழைய இருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில், இந்தப் பங்கை வாங்குபவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.ஏற்கெனவே வலுவான ஏற்றத்தின் போக்கில் இருந்துவரும் இந்தப் பங்கு, கடந்த வாரத்தில் மேலும் உச்சத்தை அடைந்து வர்த்தகமானது. இந்தப் போக்கு, இதன் சார்ட்டில் மேலும் தொடர்ந்து ஏற்றமடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.500 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.425-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.