Published:Updated:

தொடர்ந்து 5 - ம் நாளாக சந்தை வீழ்ச்சி! 24-09-2018

பால குமார் கே.எஸ்.
தொடர்ந்து 5 - ம் நாளாக சந்தை வீழ்ச்சி! 24-09-2018
தொடர்ந்து 5 - ம் நாளாக சந்தை வீழ்ச்சி! 24-09-2018

கடந்த 4 வர்த்தக தினங்களில் நஷ்டத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் முதல் தினமான இன்று, முதலீட்டாளர்கள் சந்தையின் குறுகிய கால நிலை பற்றிய கவலையுடன் பங்குகளை விற்க தலைப்பட்டதால், ஒரு பெரிய சரிவினைக் கண்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 536.58 புள்ளிகள், அதாவது 1.46 சதவிகிதம் சரிந்து 36,305.02 என்ற நிலையில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 168.20 புள்ளிகள், அதாவது 1.51 சதவிகிதம் சரிந்து 10,974.90 என முடிந்தது.

தொடர்ந்து 5 - ம் நாளாக சந்தை வீழ்ச்சி! 24-09-2018

சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கியக் காரணங்கள் :

கச்சா எண்ணெய் விலை : கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரத்திலேயே இருப்பதும், நவம்பர் மாதம் அமலுக்கு வரவிருக்கும் இரான் மீதான தணிக்கை காரணமாக சப்ளை பாதிக்கப்பட்டு அதன் காரணமாகவும், ரஷ்யா மற்றும் OPEC நாடுகள் உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அரசின் எண்ணத்துக்கு இணங்க தயங்குவது அல்லது மறுப்பது காரணமாகவும், விலைகள் மேலும் உயர வாய்ப்பிருப்பதாலும், சந்தையின் போக்கு இறங்குமுகமாகவே இருக்கிறது.

அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு, டாலருக்கெதிராக தொடர்ந்து பலவீனமான நிலையிலேயே இருப்பது மற்றுமொரு  முக்கியக் காரணம்.

நிதி நிலைமை பற்றிய கவலையினால், வங்கி மாற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குகள் மற்றுமொரு பெரிய சரிவை இன்று சந்தித்ததும், சந்தையின் பெரிய சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

தவிர, அமெரிக்க - சீன வர்த்தகப் பூசல், சீன அரசு அமெரிக்காவின் மற்றுமொரு பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்காத நிலையில் மேலும் பெரிதாக வாய்ப்பிருப்பது முதலீட்டாளர்களின் மனநிலை தொய்வுடனேயே இருக்க காரணமாகி, சந்தையின் வீழ்ச்சிக்கும் வித்திட்டது.

ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும் நிலையில் தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் முன்னேறின. ஏனைய துறைகள் சார்ந்த பங்குகள் பெரும்பாலும் சரிவையே கண்டன.

இன்று மிகவும் விலை சரிந்த சில பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 7.6%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 7%
மஹிந்திரா & மஹிந்திரா 6.4%
ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் 6.2%
பஜாஜ் ஃபைனான்ஸ் 5.2%
இந்தஸ்இந்த் பேங்க் 4.9%
அதானி போர்ட்ஸ் 4.5%

பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், லூப்பின், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ், கோடக் பேங்க், சிப்லா, அல்ட்ராடெக் சிமென்ட், எச்.டி.எப்.சி பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஐ.டி.சி பங்குகளை 2 முதல் 4 சதவிகிதம் வரை சரிந்தன.

விலை அதிகரித்த சில பங்குகள் :

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 5%
கோல் இந்தியா 2.3%
இன்போசிஸ் 2.1%
டெக் மஹிந்திரா 1.4%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.4%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 538 பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. 2111 பங்குகள் விலை சரிந்தும், 169 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.