Published:Updated:

சந்தையில் மீண்டும் சரிவு! 26-09-2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்தையில் மீண்டும் சரிவு! 26-09-2018
சந்தையில் மீண்டும் சரிவு! 26-09-2018

சந்தையில் மீண்டும் சரிவு! 26-09-2018

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐந்து நாள்கள் கடும் சரிவுக்குப் பின் நேற்று நல்ல முன்னேற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை, இன்று மீண்டும் களையிழந்து நஷ்டத்தில் முடிவடைந்தது.

துவக்கத்தில் சில நிமிடங்கள் மட்டுமே பாசிட்டிவ் திசையில் பயணித்த பின், சரியான சப்போர்ட் இல்லாத காரணத்தால் சரிந்த இந்திய பங்குச் சந்தை, வர்த்தக நேரம் முழுதும் இன்று தொய்வுடனேயே இருந்தது.

சந்தையில் மீண்டும் சரிவு! 26-09-2018

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று 109.79 புள்ளிகள் அதாவது 0.30 சதவிகிதம் சரிந்து 36,542.27 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 13.65 புள்ளிகள் அதாவது 0.12 சதவிகிதம் கீழிறங்கி 11,053.80 என்ற நிலையில் முடிவுற்றது.

அமெரிக்க பெடரல் ரிசர்வின் மானிட்டரி பாலிசி வெளிவர இருக்கும் நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு மெத்தனமான போக்கே காணப்பட்டது.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சற்று கூடியிருந்தாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையிலேயே இருப்பதும், மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியமிருப்பதாலும், முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் பெரிதாக எந்த முனைப்பும் காட்டவில்லை.

மேலும், இன்று அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு, அடுத்த உயர்வு விரைவில் நடக்கக்கூடிய சாத்தியமிருப்பதாக பெடரல் ரிசர்வின் அறிக்கை இருக்குமானால், அது ரூபாயின் மதிப்பை சரிக்கும் எனத் தோன்றுவதால், சந்தையில் மெத்தனமான போக்கே இருந்தது.


இன்று விலை சரிந்த பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் 3.1%
பார்தி இன்ஃப்ராடெல் 2.9%
விப்ரோ 2.9%
ஐ.டி.சி 2.6%
எஸ்.பி.ஐ. 2.3%
எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் 2.2%
மாருதி சுசூகி 2%
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 1.9%
KPIT டெக்னாலஜிஸ் 7.3%
ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ் 6.1%
PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் 5.2%
8கே மைல்ஸ் 5%
வக்ராஞ்சி 4.7%

விலை அதிகரித்த சில பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 6.9%
யு.பி.எல்.  5.7%
வேதாந்தா 4.7%
டைட்டன் 2.6%
ஹிண்டால்கோ 1.8%
யெஸ் பேங்க் 1.7%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.7%
சிப்லா 1.6%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.6%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1282 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1346 பங்குகள் விலை சரிந்தும், 184 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு