Published:Updated:

மூன்று நாள் சரிவுக்குப் பின் ஏற்றம் கண்டது சந்தை! 01-10-2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூன்று நாள் சரிவுக்குப் பின் ஏற்றம் கண்டது சந்தை! 01-10-2018
மூன்று நாள் சரிவுக்குப் பின் ஏற்றம் கண்டது சந்தை! 01-10-2018

மூன்று நாள் சரிவுக்குப் பின் ஏற்றம் கண்டது சந்தை! 01-10-2018

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொடர்ச்சியாகக் கடந்த மூன்று வர்த்தக தினங்களில் சரிவைக் கண்ட இந்திய பங்குச்சந்தை, அக்டோபர் மாதத்தின் முதல் தினமான இன்று பெரும்பாலான நேரத்தை நெகடிவ் பிரதேசத்தில் கழித்தபோதிலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நிலவிய பாசிட்டிவான போக்கினால், முன்னேற்றம் கண்டு லாபத்துடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரு கட்டத்தில் சுமார் 270 புள்ளிகள் சரிந்திருந்தாலும், இறுதியில் 299.00 புள்ளிகள், அதாவது 0.83 சதவிகித லாபத்துடன் 36,526.14 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 77.85 புள்ளிகள், அதாவது 0.71 சதவிகிதம் உயர்ந்து 11,008.30 என முடிவுட்டற்றது. ஒரு கட்டத்தில்  நிஃப்டி சுமார் 110 புள்ளிகள் சரிந்து 10,821.55 என்று இருந்தது.

மூன்று நாள் சரிவுக்குப் பின் ஏற்றம் கண்டது சந்தை! 01-10-2018

நார்த் அமெரிக்கன் ஃப்ரீ ட்ரேட் அக்ரீமென்ட் (NAFTA) குறித்த பிரச்னை தீர்வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், இங்கு மனநிலை பாசிட்டிவாக மாற சற்று உதவியது. 

கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் IL&FS நிறுவனத்தை அரசு எடுத்துக்கொள்வதாக வந்த செயதி, சமீப தினங்களில் கடும் சரிவைக் கண்ட வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவங்களின் பங்குகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவியது.   

ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை சற்று மேம்பட சுமார் 36,000 கோடி ரூபாய் அளவிலான அரசு பாத்திரங்களை வங்கிகளின் மூலம் வாங்க முடிவுசெய்தது, மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்திய உற்பத்தித்துறையின் செயல்பாடு நன்கு அமைந்திருப்பதாக வந்த அறிக்கை ஆகியவையும் சந்தையின் முன்னேற்றத்துக்கு உதவின.

யெஸ் பேங்க் இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டது, அவ்வங்கியின் பங்குகள் ஏறுமுகம் காண உதவியது.

அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால், தகவல் தொழில் நுட்பத்துறை பங்குகள் விலைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் சந்தையின் பாசிட்டிவான முடிவுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

யெஸ் பேங்க்  9.7%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் 6.1%
ஹிண்டால்கோ 5.85%
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 3.3%
ஹவுசிங் டெவெலப்மென்ட்  ஃபைனான்ஸ் 3.2%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.1%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்,  எய்ச்சேர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ்,  இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, கோல் இந்தியா மற்றும் விப்ரோ பங்குகள் 2 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்தன.
பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும்  எச்.டி.எஃப்.சி. பேங்க் பங்குகளும் நன்கு உயர்ந்தன.
விலை அதிகரித்த மேலும் சில பங்குகள் :
லட்சுமி விலாஸ் பேங்க்  20%
IL&FS ட்ரான்ஸ்போர்ட்டேஷன் 19.5%
திவான் ஹவுசிங் 15.5%
 இன்ஃபிபீம் 14.2%
எவெரெடி இண்டஸ்ட்ரீஸ் 9.9%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1046 பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. 1620 பங்குகள் விலை சரிந்தும், 189 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு