Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

Published:Updated:
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு, கடந்த வாரம் மோசமாகத்தான் இருந்தது. சந்தை இத்தனை பலவீனமாக இறக்கம் அடைந்ததற்கு முக்கியக் காரணம், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட வீழ்ச்சிதான். டவ் ஜோன்ஸ் சந்தை மிக மோசமான இறக்கத்தைக் கண்டது. அந்தத் தாக்கம், பிற சர்வதேச சந்தைகளிலும் பங்கு விற்பனையை ஏற்படுத்தி, இறக்கமடையச் செய்தது.

அதிலிருந்து  நாமும் தப்பவில்லை. சந்தைக் குறியீடுகள் நன்றாகவே வீழ்ச்சி கண்டன. பல தனிப்பட்ட பங்குகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. சந்தை, இந்த இறக்கத்திலிருந்து சற்று மீண்டு வந்தாலும், இறக்கத்தின் போக்கில்தான் கடந்த வாரத்தை நிறைவு செய்தது. மேலும், வரும் வாரத்துக்கான கேண்டில் பேட்டர்னும் ட்வீசர் டாப் வடிவில் வலுவான கரடி ஆதிக்கத்துடன் உள்ளது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்திய உச்சத்திலிருந்து சந்தை இதுவரை 7.8%  வீழ்ச்சி கண்டிருக்கிறது.கடந்த ஒரு வருடத்தில் சந்தை அடைந்த இறக்கத்தைக் காட்டிலும் இதுதான் பெரிய இறக்கம். எட்டு நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடந்த மூன்று இறக்கங்களின் ஒரே ஒரு ஷார்ட், ஏழு வர்த்தக நாள்களுக்குத் தொடர்ந்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


சந்தை இன்னும்  இறக்கத்தில்தான் தொடர்கிறது. சந்தை நகர்வுகள் இப்படியே 10 நாள்களாக இருப்ப தால், மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த அறிகுறி ரிவர்சல் கரடி ஆதிக்கப் போக்கை உருவாக்கலாம்.

கடந்த வார இறுதியில், சந்தை அதிகபட்ச பாட்டம் நிலையில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளது. எனவே, பிப்ரவரி மாதத்துக்கான ஏற்ற இறக்கங்கள் பதிவாகிவிட்டதாகவே தெரிகிறது. அந்த வகையில், சந்தை இந்த மாதம் முழுவதும் அந்த வரம்புக்குள்தான் நகர்ந்து கொண்டிருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தே தங்களின் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

லூமேக்ஸ் ஆட்டோ டெக்னாலஜீஸ் (LUMAXTECH)

தற்போதைய விலை: ரூ.855.55


வாங்கலாம்

முன்னணி ஆட்டோ உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான இது, இருசக்கர வாகனப் பிரிவில் தனித்துவமாகப் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தப் பங்கின் போக்கு நிலையாக இருந்து வருகிறது. சமீபத்திய வாரங்களில், இந்தப் பங்கின் போக்கு மாற்றத்துக்குள்ளாகி, தற்போது ஏற்றமடையும் நிலையில் இருக்கிறது. அதற்கான அறிகுறிகளை இந்தப் பங்கில் கடந்த வாரத்தில் பார்க்க முடிந்தது. நல்ல வலுவான மொமென்டத்தில் ஏற்றமடைந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.1,000 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.800-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மெடிக்காமென் பயோடெக் (BSE: 531146)

தற்போதைய விலை: ரூ.688.25


வாங்கலாம்

முன்னணி பார்மா பங்குகள் இன்னும் அழுத்தத்தில் இருந்தாலும், இந்தத் துறையில் உள்ள மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சந்தையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக இருக்கும் மெடிக்காமென் பயோடெக் பங்கின் போக்கில் ஒவ்வொரு மாதமும் நிலையான முன்னேற்றம் தெரிகிறது. அதிலிருந்து இந்தப் பங்கில் தொடர்ந்து முதலீடுகள் வந்தபடி இருப்பது தெரிகிறது.

இந்தப் போக்கு, இந்தப் பங்கின் நிலையான ஏற்றத்துக்கு வழி வகுத்துள்ளது. இடையில் ஏற்பட்ட இறக்கத்துக்குப்பிறகு இந்தப் பங்கு மீண்டும் ஏற்றமடையத் தயாராக இருக்கிறது.

எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.730 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 660-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏசியன் ஆயில் ஃபீல்ட் சர்வீசஸ் (BSE: 530355)

தற்போதைய விலை: ரூ.257.50

வாங்கலாம்

ஆயில் துறை சார்ந்த நிறுவனப் பங்கான இது, தொடர்ந்து நீண்ட காலமாக காளையின் போக்கில் நிலையாக இருந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.

தொடர்ந்து இந்தப் பங்கில், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் புல்பேக் நகர்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருந்திருக்கின்றன.

கடந்த வாரத்தில், மீண்டும் இந்தப் பங்கை வாங்கும் வாய்ப்பு களை உருவாக்கும் வகையிலான நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. இதன் போலிங்கர் பேண்ட் பேட்டர்னைப் பார்க்கும் போதும் இதில் ஏற்பட்ட இறக்க மானது முடிவுக்கு வந்து, மீண்டும் ஏற்றத்துக்கான மொமென்டம் உருவாகியிருக்கிறது.

குறுகிய காலத்தில் ரூ. 280-290 என்ற நிலைக்கு உயரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.240-க்குக்கீழ் வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism