Published:Updated:

சந்தையில் மீண்டும் பெரும் சரிவு! 05-10-2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்தையில் மீண்டும் பெரும் சரிவு!  05-10-2018
சந்தையில் மீண்டும் பெரும் சரிவு! 05-10-2018

சந்தையில் மீண்டும் பெரும் சரிவு! 05-10-2018

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தற்போது, சந்தையில் கரடி ராஜ்ஜியம் தலைவிரித்தாடுகிறது என்றால் அது மிகையில்லை. கடந்த இரண்டு நாள்கள் கடுமையாகச் சரிந்த பின்னர் சற்று சுதாரிக்கும், சில பங்குகளாவது முதலீட்டாளர்களின் கவனத்தை பாசிட்டிவாக ஈர்க்கும் என்று பார்த்தால், இன்றும் மளமளவென்று பங்குகளின் விலை சரியத்தான்செய்தன.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ், இன்று 792.17 புள்ளிகள். அதாவது 2.25 சதவிகித நஷ்டத்துடன் 34,376.99 என்ற நிலையில் முடிவுற்றது. ஒருகட்டத்தில் இக்குறியீடு சுமார் 970 புள்ளிகள் சரிந்து 34,202.22 என்றிருந்தது.

சந்தையில் மீண்டும் பெரும் சரிவு!  05-10-2018

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 282.80 புள்ளிகள். அதாவது 2.67 சதவிகிதம் சரிந்து 10,316.45-ல் முடிந்தது. 

சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணங்கள் :

தனது மானிட்டரி பாலிசியை இன்று அறிவித்த ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தாமல் விட்டது, கரன்சி மேலும் மதிப்பிழக்க வகை செய்யும் என்ற கவலை. தவிர, இனி தனது பாலிசி இறுக்கிப் பிடிக்கப்பட்டதாக இருக்கும் என்று அது அறிவித்திருப்பது, வரவிருக்கும் பாலிசி அறிவிப்புகள் பற்றிய ஒரு பயத்தை உண்டாகியிருக்கிறது.

ரூபாயின் மதிப்பு முதன் முறையாக டாலருக்கு 74-க்கும் கீழ் சரிந்தது.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் நான்கு வருட உயரத்தை எட்டியது. 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான எக்சைஸ் வரியை 1.5 சதவிகிதம் குறைந்திருக்கும் அரசு, ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் ஒரு ரூபாய் குறைக்கும்படி கூறியிருக்கிறது. இதனால், இந்நிறுவனங்களின் வருவாய் பெரிதாக பாதிக்கப்படக்கூடும் என்பதால், இவற்றின் பங்குகள் இன்று மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன. 

தவிர, அதிகரித்துவரும் அமெரிக்க அரசு பத்திரங்களின் மீதான வருவாய் காரணமாக உலகச் சந்தைகளில் பங்குகள் சரிந்திருப்பதும், இந்தியச் சந்தையின் சரிவுக்குக் காரணம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் துறைகளைச் சேர்ந்த ஒரு சில பங்குகள் தவிர ஏனைய துறைகளைச் சேர்ந்த பல பங்குகள் இன்று நஷ்டத்திலேயே முடிந்தன.

இன்று பலத்த நஷ்டமடைந்த சில பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்  24.5%
பாரத் பெட்ரோலியம்  19.6%
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 16.25%
ஓ.என்.ஜி.சி  14.6%
கெயில் இந்தியா 10.3%
பஜாஜ் ஃபைனான்ஸ் 9.8%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 6.5%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 6.3%
அதானி போர்ட்ஸ் 6%
ஹவுசிங் டெவெலப்மென்ட் 5.25%
மாருதி சுசூகி 5.2%
பஜாஜ் ஆட்டோ 5.15%
யெஸ் பேங்க் 5.15%
ஹிண்டால்கோ 4.9%
ஸ்டேட் பேங்க் 4.8%
பார்தி ஏர்டெல் 4.4%

வேதாந்தா, ஐ.டி.சி, அல்ட்ராடெக் சிமென்ட், க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் 3 முதல் 4 சதவிகிதம் வரை சரிந்தன.

விலை அதிகரித்த சில பங்குகள் "

இன்ஃபோசிஸ்  2.2%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.7%
பார்தி இன்ஃப்ராடெல் 1.7%
டைட்டன் 1.2%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 700 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1949 பங்குகள் விலை சரிந்தும், 132 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு