நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், இந்தியப் பங்குச் சந்தை நெகட்டிவ் செய்திகளால் இறக்கத்தைக் கண்டது. குறியீடுகளின் குறுகிய கால சப்போர்ட் நிலைகள் வரைக்கும் சந்தை இறக்கம் கண்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


வாரத்தின் இடையில், நிஃப்டி புள்ளிகள் 10000-க்கும் கீழே இறங்கின. சந்தை இன்னும் கீழே இறங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தால், புதிதாக முதலீடு செய்ய பெரிதாக யாரும் முன்வரவில்லை.  அதேநேரத்தில், வாரத்தின் இடையில் உருவான சந்தையின் ஏற்றம், கேப் அப்  ஓப்பன்கள் உருவாக உதவியது. ஆனால், அது லாபகரமாக இருக்க வில்லை.

சீன இறக்குமதி பொருள்கள்மீது அமெரிக்கா அதிக வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், வர்த்தகப் போர் உருவாகியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்கச் சந்தை இறக்கம் கண்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தையும் இறங்கியது.

தற்போது பங்குச் சந்தையில் சென்டிமென்ட் நெகட்டிவாகவே காணப் படுகிறது. வெள்ளிக்கிழமை யன்று சந்தை இறங்கிய நிலையில், புதிய முதலீடுகள் எதுவும் இல்லை என்பதால், சற்று இறுக்கமான நிலையே காணப்பட்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வங்கிப் பங்குகள் இறக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுத்துறை வங்கிப் பங்குகளின் விலை இறங்கிக்கொண்டிருக்க, இதனுடன் தனியார் துறை பங்குகளும் சேர்ந்துகொண்டன.  நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வாங்கியான எஸ்பிஐ-ன் விலையும் இறங்கியே காணப் பட்டது. நிஃப்டி இண்டெக்ஸில் வங்கிப் பங்குகளின் வெயிட்டேஜ் 35 சதவிகிதமாக இருப்பதால், நிஃப்டி குறியீடும் அதிக இறக்கம் கண்டது.

வங்கிப் பங்குகளின் விலை தொடர்ந்து இறக்கம் கண்டால், வரும் வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் மந்தமாகவே காணப்படும். தற்போது பேங்க் நிஃப்டி சப்போர்ட் 23500 ஆக உள்ளது.  சந்தை ஏற்றத்துக்குத் திரும்பும் வரை இதில் முதலீடு செய்யாமல் காத்திருப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பி.ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (PIIND)

தற்போதைய விலை: ரூ.839.75


வாங்கலாம்

பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், வேகமாக வளர்ந்துவரும் வேளாண் அறிவியல் நிறுவனமாகும். இது, விவசாய வேதிப்பொருள்கள் தயாரிப்பு குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடத்தி, தீர்வு தரக்கூடிய பெரிய நிறுவனமாகும்.

இந்த நிறுவனப் பங்கு விலை 2017-ம் ஆண்டில் கீழிருந்து மேலேறி வலுவான வளர்ச்சியைப் பெற்றபின்னர், ஃபிபனோசி ரீட்ரேஸ்மென்ட் லெவலில் 61.8% என்ற அளவில் இருக்கிறது. கடந்த வாரத்தில், பங்கு வர்த்தக நகர்வில் நிலையானதொரு மீட்சியைப் பார்க்க முடிந்தது.

எனவே, இந்த நிறுவனப் பங்குகள் இதேபோல மீண்டுவர முடியுமென நம்பலாம்.  தற்போது ரூ.812 என்கிற நிலையிலிருந்து மீண்டும் மேலேறி ரூ.840-க்கு அதிகரித்துள்ளது. ஸ்டாப்லாஸ்  ரூ.826-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.  இந்தப் பங்கின் விலை ரூ.886 முதல் ரூ.895 வரை உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாரிகோ (MARICO)

தற்போதைய விலை: 325.55

வாங்கலாம்

தற்போதைய சந்தை நிலவரப்படி, பல நிறுவனங்களின் பங்குகள் சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் தற்காப்புத் தன்மையின் காரணமாக, மீண்டும் ஒருமுறை மேலேறி முதலீட்டாளர்களிடையே வாங்கும் ஆர்வத்தை மாரிகோ நிறுவனப் பங்கு ஏற்படுத்துகிறது. 
மேலும், தொடர்ச்சியாகச் சற்று மேலேறிய நிலையிலேயே விலை தொடர்கிறது. இந்தப் பங்கை அதன் தற்போதைய விலை மற்றும் ரூ.320-க்கு இறங்கும் வரையிலும் வாங்கலாம்.

இந்தப் பங்கின் விலை ரூ.337 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.317-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தாமஸ்குக் (THOMASCOOK)

தற்போதைய விலை 268.70

வாங்கலாம்

 தாமஸ்குக் நிறுவனத்தின் பங்கு விலை, இறக்கத்திலிருந்து மீண்டு  கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிறுவனம், அதன் குவெஸ் (Quess) நிறுவனத்தின் வணிகக் கட்டமைப்பை எளிமைப்படுத்தி, அதன்மூலம் சிறந்த மதிப் பீட்டைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக,  இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்து, பங்கின் விலை புதிய உச்சத்தை அடையத் தயாராகியுள்ளது. இது மொமென்டம் இண்டி கேட்டரில் உறுதிப்பட்டுள்ளது.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம்.  குறுகிய காலத்திலேயே இந்தப் பங்கின் விலை ரூ.295-305 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.259-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.