Published:Updated:

கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை சந்தித்த நிறுவனப் பங்குகள்!

தெ.சு.கவுதமன்
கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை சந்தித்த நிறுவனப் பங்குகள்!
கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை சந்தித்த நிறுவனப் பங்குகள்!

வர்த்தகத் தொடக்க நாளான இன்று (15.10.2018) திங்கள்கிழமை, இந்தியப் பங்குச்சந்தை இறங்குமுகத்தில் பயணிக்கிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து இறக்கத்தில் பயணித்த சந்தை, வர்த்தக இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்கள் மனதில் ஓரளவு நிம்மதியை வரவழைத்த சூழலில், இன்று மீண்டும் இறக்கத்தில் பயணிப்பது கவலைகொள்ளச்செய்கிறது. 


இன்றைய தினம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைச் சந்திக்கிறது. இதன் காரணமாக ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி., ஆகிய எண்ணெய் நிறுவனப் பங்குகள் 1 - 4 சதவிகிதம் இறக்கம் கண்டுள்ளன. வங்கிகள், ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி., தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கடந்த ஓராண்டில் இல்லாத இறக்கத்தைத் தொட்டுள்ளன. இந்த இறங்குமுகமான சூழலுக்கு இடையில், ஐ.டி., ஃபார்மசூட்டிக்கல் நிறுவனப் பங்குகள் நல்ல நிலையில் தொடர்கின்றன. அதேபோல், சர்க்கரை நிறுவனங்களான திரு ஆரூரன் சுகர்ஸ் லிமிடெட், உத்தம் சுகர்ஸ் மில்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு நம்பிக்கை அளிக்கின்றன.