வானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் விளையாட்டில் சேர்ந்தார் ஒருவர். தரையில் தியரி வகுப்பு முடிந்தபின் பிராக்டிக்கலுக்காக ஏரோப்ளேனில் ஏறி, நல்ல உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், பாராசூட்டை கட்டிக் கொண்டு கீழே குதிக்கச் சொன்னார்கள். குதித்தவுடன் பாராசூட்டின் கயிற்றை இழுத்தால் அது விரிந்து அவரை மெதுவாக கீழே இறங்க வைக்கும். அவரோ குதித்த பின்னர் ஒரு முறைக்குப் பல முறை கயிற்றை இழுத்தும் பாராசூட் விரிந்தபாடில்லை.

பாராசூட் விரியாமல் வேகமாக கீழே போய்க் கொண்டிருக்கும்போது, மற்றொரு ஆள் ஒரு கேஸ் பலூனில் மேல் நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரிடம், ''உங்களுக்கு பாராசூட் பற்றி ஏதும் தெரியுமா?'' என்று கேட்க, அவரோ பதிலுக்கு, ''உங்களுக்கு கேஸ் பலூன் பற்றி எதுவும் தெரியுமா?'' என்றார். ''தெரியாம ஏறி ஆன் பண்ணிட்டேன்; வேகமா மேலே பறக்க ஆரம்பிச்சுடிச்சி. இறக்கவும் முடியலை, ஸ்பீடை குறைக்கவும் முடியலை'' என்றாராம்.

இரண்டு பேருக்கும் உயரம்தான் பிரச்னை. ஒருவருக்கு இறங்கும் வேகம். மற்றொருவருக்கு ஏறும் வேகம். இதே நிலைதான் புல்களுக்கும் பியர்களுக்கும் சந்தையில். புல் என நினைத்து வாங்கினால் இறங்குகிறது. பியர் என நினைத்து விற்றாலோ ஏறுகிறது. இந்த எதிர்மறை நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் சந்தையில் கொஞ்சம் ஆராய்ந்து அறிந்து வியாபாரம் செய்ய வேண்டும். அந்த ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு டூல்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ்.

. ஆர்.ஓ.சி.யில் பல சௌகரியங்கள் இருந்தாலும் அதிலிருக்கும் சில இடைஞ்சல்கள் பற்றி இப்போது சொல்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, ஆர்.ஓ.சி. கணக்கிடப்படுவது தினசரி விலையை வைத்துத்தான். அப்படி தினசரி விலைகளை வைத்து பத்து நாள் கணக்கிடும்போது மூன்றாம் நாள் விலை வெகுவாக ஏறினால் அன்றைக்கு பயங்கரமான மாற்றத்தை ஆர்.ஓ.சி.யில் காண்பிக்கும். அதற்கு பின்னால் விலைகள் பெரிதாக ஏறாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டு செல்லும்போது 13-வது நாளில் 3-வது நாள் விலை வெளியே செல்லும். 3-வது நாள் விலை பெரிய ஏற்றத்தைச் சந்தித்ததால் அந்த விலை வெளியேறும்போதும், ஆர்.ஓ.சி.யில் பெரிய மாற்றத்தைக் காண்பிக்கும்..
இந்த பிரச்னையை ஏற்கெனவே விலாவாரியாக ஆவரேஜ்களில் பார்த்துள்ளோம். இந்த மாதிரி தேவையில்லாத ஒரு விலைக்கு ஏற்படும் தடுமாற்றத்தை தடுக்க 'மூவிங் ஆவரேஜ்’ விலையை எடுத்துக் கொண்டு ஆர்.ஓ.சி.யை கணக்கிடுவது சரியாக இருக்கும்.

சாதாரண விலைகளை வைத்துக் கொண்டு ஆர்.ஓ.சி.யை கணக்கிட்டால் அடிக்கடி அது எண்ணற்ற சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இ.எம்.ஏ. (ணிஜ்ஜீஷீஸீமீஸீtவீணீறீ னீஷீஸ்வீஸீரீ ணீஸ்மீக்ஷீணீரீமீ) விலைகளைக் கொண்டு கணக்கிட்டால் அது குறைவான கொஞ்சம் உறுதியான சிக்னல்களைத் தர வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளின் விலையை எடுப்பதற்குப் பதிலாக, அந்தந்த நாட்களுக்குரிய 10 நாள் மூவிங் ஆவரேஜ் விலையைக் கணக்கிட வேண்டும். பின்னர், அந்த 10 நாள் மூவிங் ஆவரேஜ் விலைகளை வைத்து ஆர்.ஓ.சி-யை கணக்கிட வேண்டும்.

ஆர்.ஓ.சி.யை கணக்கிடும்போது பத்து நாள் மூவிங் ஆவரேஜ் விலைகளின் நடுவே நடக்கும் வித்தியாசங்களை 21 நாள் கால அளவில்கூட (ஏற்கெனவே மூவிங் ஆவரேஜ் 10 நாட்களுக்கானது) ஆர்.ஓ.சி.யைக் கணக்கிடலாம். புரியவில்லையா? நோட்டில் கொஞ்சம் எழுதிப் பார்த்துவிடலாமா?

முதலில், டிசம்பர்-1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள நாட்களில் ஓவ்வொரு நாளுக்குமான 10 நாள் மூவிங் ஆவரேஜ் விலையை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பின்னர், டிசம்பர் 22-க்கும் டிசம்பர்-1-க்கும் இடையே உள்ள 21 நாள் இடைவெளிக்கு ஆர்.ஓ.சி.யை கணக்கிட்டு சார்ட்டில் புள்ளி வைத்து கோடு சேர்க்க வேண்டும்; அடுத்து டிசம்பர் 23 மைனஸ் டிசம்பர் 2 என ஒவ்வொன்றாக ஆர்.ஓ.சி. எண்களை சார்ட்டில் புள்ளிவைத்து கோடு சேர்த்தால் ஆர்.ஓ.சி. லைன் கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் ஆர்.ஓ.சி. எண்கள் மிகவும் நிதானமானவையாகவும் அடிக்கடி சிக்னல் களைக் கொடுக்காதவையாகவும் இருக்கும்.

இப்படி இ.எம்.ஏ.-வை பயன்படுத்தி போடப்படும் ஆர்.ஓ.சி. லைன் சந்தையில் இருப்பவர்களின் நெடுநாளைய போக்கில் ஏற்படும் மாற்றத்தைக் காண்பிக்கும். சாதாரண ஆர்.ஓ.சி. லைன் சந்தையில் இருப்பவர்களின் அன்றாடப் போக்கினை காண்பிக்கும். இதனால்தான் இதை 'ஸ்மூத்டு ஆர்.ஓ.சி.’ என்றும் அழைப்பார்கள்.

'ஸ்மூத்டு ஆர்.ஓ.சி.’ நடுவில் இருக்கும் ஜீரோ லைனைத் தாண்டி மேலே போனால் அந்த பங்கை வாங்க வேண்டும். 'ஸ்மூத்டு ஆர்.ஓ.சி.’ நடுவில் இருக்கும் ஜீரோ லைனைத் தாண்டி கீழே போனால் அந்த பங்கை விற்க வேண்டும். விலைகள் தாறுமாறாக ஏறிய நேரத்தில் 'ஸ்மூத்டு ஆர்.ஓ.சி.’ பெரிதாக மேலே போகவில்லை என்றால், கூட்டம் ஒன்றும் பெரிதாக உற்சாகத்தில் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனை 'பியரிஷ் டைவர்ஜன்ஸ்’ என்று அழைப்பார்கள். விலைகள் வேகமாக ஏறும்; ஆனால் கூட்டத்தில் உற்சாகமோ / வேகமோ இருக்காது. இந்த நிலைக்குச் சந்தை வரும்போது ஷார்ட் போய் சம்பாதிக்கலாம்.

அதேபோல் மார்க்கெட் தாறுமாறாக இறங்கி 'ஸ்மூத்டு ஆர்.ஓ.சி.’ பெரிதாக கீழேப் போகவில்லை எனில், கூட்டம் ஒன்றும் பெரிதாக பயப்படவில்லை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை 'புல்லிஷ் டைவர்ஜன்ஸ்’ என்று அழைப்பார்கள். விலைகள் வேகமாக இறங்கும். ஆனால், சந்தையில் இருப்பவர்களோ கிடைத்த விலைக்குப் பங்கை விற்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டும். இந்த சூழ்நிலை சந்தையில் வந்தால் அந்த பங்கை வாங்கிப் பார்க்கலாம்.

மார்க்கெட் கடல் போன்றது. மேலேயும் கீழேயுமாக பெரிய அலையும் சிறிய அலையுமாக ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கும். கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன அலை வேண்டும் என்று அதற்குத் தெரியாது. சிறிய அலை வரும் என்று எதிர்பார்த்து நீங்கள் கரையில் இருக்கும்போது மிகப் பெரிய அலை வந்து உங்களை தூக்கி அடித்துவிடும். சிறிய அலை வந்து உங்கள் காலைத் தொட்டுச் சென்றால் நீங்கள் சந்தோஷப்பட்டு ரசிப்பீர்கள். தூக்கி அடித்தால் மூச்சு முட்டிவிடும். கடலுக்கு உங்கள் சந்தோஷமும், வருத்தமும் தெரியாது. சந்தோஷமும் வருத்தமும் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், நீங்கள் கரையில் இருப்பதே கடலுக்குத் தெரியாது. உங்களால் கடலை கன்ட்ரோல் செய்ய முடியாது. நீங்கள் நிற்கும் இடத்தைத்தான் கன்ட்ரோல் (மாற்றியமைக்க) செய்ய முடியும்.

மீன் பிடிக்க, காற்று வாங்க என கடல் பல உபயோகங்களைக் கொண்டிருந்தாலும், அதனருகில் எல்லையைத் தாண்டி தவறான வானிலையில் சென்றால் அது உங்களை கவிழ்த்திவிடும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். சந்தையும் கடல் போலத்தான். கடலின் வானிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தூரத்தில் நின்று ரசிக்கிற மாதிரி சந்தையின் நிலையை அறிந்து ரசிக்க (சம்பாதிக்க) டெக்னிக்கல் அனாலிசிஸ் உதவுகிறது. இன்னுமொரு முக்கியமான டெக்னிக்கை அடுத்த வாரம் சொல்கிறேன்..!

(வளரும்...)