இந்த வாரம் நாம் அலசப் போகும் கம்பெனி ஏரோஸ்பேஸ், அக்ரி பிஸினஸ், ஆட்டோமோட்டிவ் உதிரிபாகங்கள், கட்டுமானத்திற்கு உதவும் கருவிகள், கன்சல்டிங் சர்வீஸ், பாதுகாப்பு, எனர்ஜி, விவசாய உபகரணங்கள், ஃபைனான்ஸ் மற்றும் இன்ஷூரன்ஸ், தொழிற்சாலைகளுக்கான உபகரணங்கள், ரிசார்ட்ஸ் மற்றும் ஓட்டல்கள், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், ரீடெயில் மற்றும் டூவீலர் என்ற 18 முக்கிய தொழில்களிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தைதான்.

1945-ல் ஒரு ஸ்டீல் டிரேடிங் கம்பெனி யாக ஆரம்பிக்கப்பட்டு 1947-ல் ஆட்டோமொபைல் துறையில் குதித்த நிறுவனம். வில்லீஸ் என்ற ஜீப்பை இந்தியாவில் முதல் முதலில் அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம்தான்.

கம்பெனி எப்படி?

. 100 நாடுகள், 1,44,000 தொழிலாளர்கள் என ஒரு மல்டி நேஷனல் கம்பெனியாக திகழ்கிறது இந்நிறுவனம். 'எப்போதும் முதல் முறையிலிருந்தே சரியாகச் செய்வதே’ தனது தரக்கொள்கை என இந்நிறுவனம் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறது. 1947-ல் யுட்டிலிட்டி வாகனமாகிய ஜீப்பை அறிமுகப்படுத்திய மஹிந்திரா இன்று ஸ்கார்ப்பியோ, பொலீரோ, ஜைலோ போன்ற பல யுட்டிலிட்டி வாகனங்களையும், கார், பிக்-அப் வேன், கமர்ஷியல் வாகனங்கள் போன்ற பல ரக வாகனங்களையும் வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது..
1960-ல் டிராக்டர்களை தயாரிக்க ஆரம்பித்த மஹிந்திரா, இன்றளவில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் டிராக்டர்களை விற்று வருகிறது. இந்திய டிராக்டர் சந்தையில் கடந்த முப்பது வருடங்களாக 40 சதவிகித மார்க்கெட் ஷேரை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய விவசாயிகளில் 10% பேரே டிராக்டர் வைத்திருக்கிறார்கள். அதனால், மஹிந்திராவின் டிராக்டர் பிரிவிற்கு இன்னும் நிறையவே வியாபாரத்திற்கு ஸ்கோப் இருக்கிறது. தவிர அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா, மத்திய கிழக்காசிய நாடுகள், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளிலும் டிராக்டர் விற்பனையை செய்து வருகிறது. இப்படி இந்நிறுவனமும் அதன் குழும நிறுவனங்களும் கால் பதித்திருக்கும் எல்லாத் தொழிலையும் விவரித்தால் குறைந்தபட்சம் 10 பக்கங்களாவது தேவைப்படும். அதனால் தொழில் அலசலை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

தொழில் எப்படி?

என்னதான் பொருளாதார சூழ்நிலை மங்கலாக இருந்தாலும் இது இப்படியே வெகுநாட்கள் இருந்துவிடப் போவதில்லை. மீடியம் டேர்ம் மற்றும் லாங் டேர்மில் நிச்சயமாக நிலைமை மாறத்தான் போகிறது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படி நிலைமை மாறும்போது இந்திய சந்தைதான் உலகத்திலிருக்கும் ஆட்டோமொபைல் சந்தைகளில் வேகமாக வளரும் ஒரு சந்தையாக இருக்கும். அதேபோல் இந்திய விவசாயத்தில் இயந்திரங்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மஹிந்திராவின் வியாபாரமும் அதிகரிக்கும் எனலாம்.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

உலகளாவிய கம்பெனிகளின் போட்டிகளை கடந்து, ஆட்டோமொபைல் சந்தையில் வெற்றி பெற்று நிலைத்து நிற்கிறது இந்நிறுவனம். டிராக்டர் விற்பனை, போட்டி நிறைந்தது. தவிர, கிராமப்புற சந்தையை நம்பி இருக்கிறது. எனினும் மஹிந்திரா டிராக்டர் விவசாயிகளின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற பிராண்டாக இன்றுவரை இருக்கிறது.

அதேபோல் யுட்டிலிட்டி வாகனங்களில் டொயோட்டா, ஃபோர்டு, மிட்சுபிஷி என்ற உலகத்தின் பெரிய கம்பெனிகள் எல்லாம் போட்டி போடும்போதும் பொலீரோ, ஸ்கார்ப்பியோ, ஜைலோ என தொடர்ந்து ஹிட்களையே கொடுத்து வந்துள்ளது மஹிந்திரா. நவீன காலத்திற்கேற்ற மாற்றங்களை, தேவையான சமயங்களில் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி வெற்றிநடை போட்டு வருகிறது. மேக்சிமோ என்ற பிக்-அப் வண்டி இந்த வரிசையில் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் வெற்றியை பெற்ற ஒன்று என்று சொல்லலாம். டிராக்டரில்

40 சதவிகிதமும், யுட்டிலிட்டி வாகனங்களில் 61 சதவிகிதமும் மார்க்கெட் ஷேரை தக்க வைத்துக் கொண்டிருப்பது ஒன்றும் சாமானியமான காரியமில்லை. அதிலும் யுட்டிலிட்டி வாகனங்களின் விற்பனையில் 60% கிராமப்புறங்களிலிருந்து வருகிறது என்பது இந்நிறுவனம் மீது கிராமப்புற மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தையே காட்டுகிறது.

வட இந்தியாவில் மிகப் பெரிய பிராண்ட் ஆன பஞ்சாப் டிராக்டரை வாங்கியதன் மூலம் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெற்றிநடை போடத் துவங்கியுள்ளது மஹிந்திரா. இந்திய சந்தை மட்டுமல்லாமல், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வருகிறது. கொரியன் கம்பெனியான சங்யோங் மோட்டார் கம்பெனியை வாங்கியதன் மூலம் கொரிய ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனச் சந்தையில் 14 சதவிகிதத்தைக் கைப்பற்றியுள்ளது மஹிந்திரா. சமீப காலமாக கொரியாவில் சங்யோங் மோட்டாரின் வியாபாரம் கொஞ்சம் சரியில்லை என்றாலும்கூட சங்யோங்கின் புராடக்ட்களை பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் லாபம் பார்க்க முயற்சி செய்து வருகிறது மஹிந்திரா.

என்ன ரிஸ்க்?

முதல் ரிஸ்க், மூலப் பொருட்களின் விலை மாறுதல்கள் லாபத்தை பதம் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது ரிஸ்க், மஹிந்திராவின் நிர்வாகம் மிகப் பெரியது. 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள்,

6 ஜாயின்ட் வெஞ்சர்கள், 10-க்கும் மேற்பட்ட அசோசியேட்கள் என பெரிய பல உதிரிபாகங்கள் பொருத்திய டீசல் இன்ஜினே கம்பெனிக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றது. கம்பெனிக்குள் இருக்கும் கம்பெனிகள் பல ஒன்றுக்கொன்று வியாபார ரீதியாக சார்ந்திருப்பதால் ஒன்றின் பர்பார்மென்ஸ் தொய்வடைந்தால் பலவிதமான லாபத் தேய்மானங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் வளமான தொழில், திறமையான நிர்வாகம், உலகளாவிய வியாபாரம், பற்பல தொழில்களில் வெற்றிகரமான கால் பதிப்பு என சீரான வெற்றியை அடைந்து வந்துள்ள இந்நிறுவன ஷேர்களை வாசகர்கள் வாங்கலாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.