இந்திய சந்தை சரிவதற்கு ஐரோப்பிய நாடுகளோ அல்லது அமெரிக்காவோ காரணமல்ல; இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகள்தான் காரணம் என கடந்த வாரம் சொல்லி இருந்தேன். நான் சொன்னது போலவே நமக்கிருக்கும் பல பிரச்னைகள் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. முக்கியமாக ஐ.ஐ.பி. குறைந்திருப்பது, ரூபாய் மதிப்பு சரிந்திருப்பது போன்றவற்றைச் சொல்லலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைந்திருந்தாலும்கூட அது போதுமானதாக இருந்திருக்காது.

200 வார சராசரி புள்ளி, கடந்த இரண்டு வருடத்தில் குறைந்தபட்ச நிஃப்டி புள்ளி ஆகியவற்றை உடைத்துக் கொண்டு சந்தை கீழே சென்றிருப்பதால், சந்தை இறங்கு முகத்தில்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதை கடந்த பல வாரங்களாகவே நான் சொல்லி வந்தாலும், இப்போது கொஞ்சம் உறுதியாகவே சொல்கிறேன்.

உள்ளபடியே நாம் இப்போது கொஞ்சம் சிக்கலான நிலைமையில்தான் இருக்கிறோம்.

. 2007-08-ம் ஆண்டுகளில் நாம் வேகமான சரிவை சந்தித்ததால், அந்த வீழ்ச்சியின் வலி நமக்கு தெரியாமலே போய்விட்டது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திப்பதால் கொஞ்சம் அதிகமான வலியை உணர்கிறோம். மேலும், ரூபாய் மதிப்பு சரிவடைவது நம் சிக்கலை அதிகரிக்கவே செய்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட்கள் டாலர்களில் பணத்தைக் கடன் வாங்கி இருப்பதால், அசல், வட்டிக்கு மேல் ரூபாயின் சரிவையும் சேர்த்து கட்ட வேண்டி இருக்கிறது. இதனால் நிறைய நிறுவனங்களின் லாபம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கே சரியாகிவிடும்போல் தெரிகிறது..
இந்த நிலைமை சரியாக இன்னும் சில காலம் பிடித்தாலும், கிடைக்கும் சமயங்களில் நாம் முதலீடு செய்ய தயங்க கூடாது. நாம் போர்ட்ஃபோலியோ ஆரம்பிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும் என்று தெரிந்துதான் நம் முதலீட்டை ஒரு ஒழுங்குமுறையில் அமைத்தோம்.

ஏ.பி.ஜி. ஷிப்யார்டு பங்கு பி.எஸ்.இ.-ல் வர்த்தகமான அதிகபட்ச விலையே 428 ரூபாய்தான். எப்படி 431 ரூபாய்க்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். அந்த வாரத்தில் என்.எஸ்.இ.-ல் (டிசம்பர் 1-ம் தேதி) 432 ரூபாய் என்ற அதிகபட்ச விலையில் வர்த்தகமானது. அதிக வர்த்தகம் என்.எஸ்.இ.-ல் நடந்திருப்பதால் அந்த விலையையே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலை!

இப்போதைக்கு 14 பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கின்றன. இன்னும் ஆறு பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றாலும், சந்தையின் சூழ்நிலை சரி இல்லாததால் இப்போதைக்குப் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். சந்தை வீழ்ச்சி அடைய அடைய நாம் முதலீடு செய்திருக்கும் பங்குகள் சராசரி ஆகிக் கொண்டே இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் முதலீடுதான்.

இந்த வாரம்கூட என்.ஹெச்.பி.சி., டாடா ஸ்பான்ச், கொரமண்டல் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று பங்குகள் சராசரி செய்யச் சொன்ன விலையை அடைந்திருக்கிறது. 14 பங்குகளில் 11 பங்குகளை இதுவரை சராசரி செய்திருக்கிறோம். இன்னும் மூன்று பங்குகளை நாம் சராசரி செய்யவில்லை. அதாவது, அந்த பங்குகள் சந்தையின் வீழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்று புரிந்து கொள்ளலாம். சந்தை ஒரு நிலைக்கு வரும் வரை புதிய முதலீடுகளை தவிர்த்து ஏற்கெனவே இருக்கும் பங்குகளை சராசரி செய்யலாம்.

இதுவரை சுமார் 69,000 ரூபாய்க்கு முதலீடு செய்திருக்கிறோம். இன்னும் 1.3 லட்சம் ரூபாய் கையில் இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்கு பணம் தேவை. அந்த பணம் நம்மிடம் இருக்கிறது. 'கேஷ் இஸ் கிங்’ என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை www.vikatan.com இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.