Published:Updated:

நான்கு நாள்கள் சரிந்தபின் இன்று ஏறுமுகம் கண்டது சந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான்கு நாள்கள் சரிந்தபின் இன்று ஏறுமுகம் கண்டது சந்தை
நான்கு நாள்கள் சரிந்தபின் இன்று ஏறுமுகம் கண்டது சந்தை

இன்றைய உயர்வுக்கான முக்கிய காரணமாக இருந்தது கடந்த சில நாள்களில் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு பங்குகளின் விலைகள் வாங்குவதற்குத் தூண்டும் வகையில் இருந்ததும், வியாழனன்று டெரிவேட்டிவ்ஸ் கான்ட்ராக்ட்ஸ் எக்ஸ்பைரி இருப்பதால் வணிகர்கள் தங்கள் விற்பனை பொசிஷன்களை ஸ்கொயர் ஆப் செய்வதற்காக short - covering செய்ததுமேயாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த நான்கு நாள்களாக இறங்குமுகமாக இருந்து பெரும் நஷ்டங்களைக் கண்ட இந்திய பங்குச் சந்தை இன்று (24.10.18) ஒரு நல்ல துவக்கத்துக்குப் பின் மதியம் சிறிது துவண்டாலும், உடனேயே சுதாரித்து முன்னேறி குறிப்பிடத்தக்க லாபத்துடன் நிறைவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று 186.73 புள்ளிகள் அதாவது 0.55 சதவிகிதம் உயர்ந்து 34,033.96 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 77.95 புள்ளிகள் அதாவது 0.77 சதவிகிதம் உயர்ந்து 10,224.75 என்ற நிலையில் முடிவுற்றது.

இன்றைய உயர்வுக்கான முக்கிய காரணமாக இருந்தது கடந்த சில நாள்களில் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு பங்குகளின் விலைகள் வாங்குவதற்குத் தூண்டும் வகையில் இருந்ததும், வியாழனன்று டெரிவேட்டிவ்ஸ் கான்ட்ராக்ட்ஸ் எக்ஸ்பைரி இருப்பதால் வணிகர்கள் தங்கள் விற்பனை பொசிஷன்களை ஸ்கொயர் ஆப் செய்வதற்காக short - covering செய்ததுமேயாகும் .

இது தவிர, டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணம். நேற்று டாலருக்கு 73.57 என்று முடிந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 73.14 என்ற அளவுக்கு முன்னேறியது. பின்னர் சற்று சரிந்தபோதிலும், 73.22 ரூபாய் என்ற நிலையில், லாபத்துடனேயே வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் நேற்று காணப்பட்ட கடும் சரிவும் நல்ல சாதகமான விஷயமாக அமைந்தது. பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள், அந்நிறுவனம் தன்னுடைய ஆப்ரிக்க யூனிட்டை விற்பனை செய்ததையடுத்து, கணிசமாக முன்னேறியது. 

இன்று சந்தை லாபத்துடன் முடிவுற்றபோதிலும், புவி அரசியலில் தற்போது காணப்படும் கலவரமாக சூழலும், வர்த்தக பூசல் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சியில் உண்டாகக்கூடிய தடங்கல்களும் பற்றிய கவலை முதலீட்டாளர்களை ஒரு நிதானமான முறையில் செயல்பட வைத்து என்பதும் உண்மையே. இதன் காரணமாகவே, சந்தையில் இன்னமும் பல பங்குகள் பெரிய அளவில் சமீப தினங்களில் சரிந்திருந்த போதிலும், அவற்றை வாங்கும் ஆர்வத்தை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தவில்லை.

சந்தையில் இன்று விலை அதிகரித்த சில பங்குகள் :

பஜாஜ் ஃபைனான்ஸ் 11%

பார்தி ஏர்டெல் 10.8%

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 7.2%

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 5.55%

பாரத் பெட்ரோலியம் 4.75%

ஏசியன் பெயின்ட்ஸ்  4.5%

ஹிண்டால்கோ 4.5%

பஜாஜ் ஃபைன்சர்வ் 4.3%

எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் 3.5%

இந்தஸ்இந்த் பேங்க் 3.25%

ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் 3%

ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.1%

இவை தவிர, கேன்ஃபின் ஹோம்ஸ், ஓபராய் ரியால்ட்டி, M&M ஃபைனான்சியல், IIFL ஹோல்டிங்ஸ், EID பாரி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், RBL பேங்க், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, GE ஷிப்பிங், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரேடிக்கோ கெய்தான், வக்ராஞ்சி நிறுவனப் பங்குகளும் நல்ல முன்னேற்றம் கண்டன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1363 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1203 பங்குகள் விலை சரிந்தும், 150 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு