Published:Updated:

சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிந்தது! தங்கம் விலை உயர்ந்தது!

சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிந்தது! தங்கம் விலை உயர்ந்தது!
சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிந்தது! தங்கம் விலை உயர்ந்தது!

நடப்பு வர்த்தக வாரத்தில், நேற்று ஒருநாள் மட்டும் சற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை, இன்று (25.10.18) மீண்டும் சரிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று 343.87 புள்ளிகள் சரிந்து 33690.09 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 99.90 புள்ளிகள் சரிந்து 10124.90 என எதிர்மறையாக முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், கடந்த ஆறு மாதங்களிலேயே குறைவான புள்ளியை இன்று தொட்டது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு 10,100 என்ற புள்ளிகளுக்கும் கீழே இறங்கி ஏறியது.


விப்ரோ, கோல் இந்தியா, ஐ.டி.சி, ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் கோடக் மகேந்திரா பேங்க் போன்ற நிறுவனங்கள் லாபம் ஈட்டின. பெரிய நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ., சன் ஃபார்மா, வேதாந்தா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எல்&டி நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. பண்டிகைக் காலமென்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக, தங்கத்தின் விலை 125 ரூபாய் உயர்ந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத உச்சமாக, 10 கிராமுக்கு ரூ.32,625 என்ற விலைக்கு விற்றது.