Published:Updated:

எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 6 ஆண்டுகள் தடை விதித்த `செபி’!

எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 6 ஆண்டுகள் தடை விதித்த `செபி’!
எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 6 ஆண்டுகள் தடை விதித்த `செபி’!

எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனத்தையும் அதன் முன்னாள், இந்நாள் இயக்குநர்கள் நால்வரையும் பங்குச் சந்தையிலிருந்து ஆறு ஆண்டு காலத்துக்கு செபி நீக்கியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாக வசூலித்த தொகையை மூன்று மாத காலத்துக்குள் திருப்பி அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. 

எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனம், செபி-யில் பதிவுசெய்யப்படாமல் கூட்டு முதலீட்டுத் திட்டப்படி செயல்பட்டுவந்த காரணத்தால், 2015 ஜூன் மாதத்தில் செபி-யின் இடைக்கால உத்தரவின்படி, அந்த நிறுவனமும் இயக்குநர்களும், பொதுமக்களிடமிருந்து புதிய மூலதனத்தைப் பெறுவது தடைசெய்யப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், 2010-11 காலகட்டத்தில், 2,554 முதலீட்டாளர்களிடமிருந்து 'வீட்டுமனை விற்பனை' திட்டத்தின்படி ரூ.11.27 கோடி வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தொகையை, செபியிடம் அனுமதிச் சான்றிதழ் பெறாமலேயே கூட்டு முதலீட்டுத் திட்டத்தின்படி முறைகேடாக வசூலித்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனமும், அதன் தற்போதைய இயக்குநர்களான குர்பிரீத் சிங், குர்லால் சிங் ஆகியோர் ஆறு ஆண்டு காலத்துக்கும், அதன் முன்னாள் இயக்குநர் பிரசாந்த் சர்மா நான்காண்டு காலத்துக்கும், ஸ்ரீஹர்மீந்தர் சிங் ஆறு ஆண்டு காலத்துக்கும் பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட உள்ளனர். வாடிக்கையாளர்களிடம் வசூலித்த தொகையைத் திருப்பியளித்த பின், இந்தத் தடைக்காலம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.