Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
டந்த வாரத்தில் சந்தையில் பல மாற்றங்கள் நடந்தேறின. ஒரு நாளில் சந்தை 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. மற்றொரு நாளில் சரிவில் துவங்கி பாசிட்டிவ்வில் முடிவடைந்தது. இன்னொரு நாள் நெகட்டிவ்வில் தொடங்கி பாசிட்டிவ்வாக முடிவடைந்தது. அதாவது, சந்தையால் ஒரு கட்டத்துக்குப் பிறகு மேலே செல்ல முடியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.

சந்தை மேலே செல்ல போதுமான பாசிட்டிவ் காரணங்கள் எதுவும் இப்போது தெரியவில்லை. ஒரு சில மாதங்கள் வரைக்கும் இதே நிலைதான் நீடிக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். சந்தை ஒருவிதமாக செட்டில் ஆகும் சமயத்தில் நாம் புதிதாக பங்குகளை வாங்குவது பற்றி யோசிக்கலாம். அதுவரை நாம் பொறுமையாக இருப்பதே நல்லது. சந்தை திரும்ப மேலே வரும் சமயம் பார்த்து நம் முதலீட்டை வேகப்படுத்தலாம்.

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலை

கடந்த வாரத்தில் பி.டி.சி. இந்தியா, வோல்டாஸ், டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா உள்ளிட்ட மூன்று பங்குகளை சராசரி செய்திருப் போம். இதில் பி.டி.சி. இந்தியா பங்கினை மூன்றாவது முறையும் சராசரி செய்து விட்டோம். அதாவது, பி.டி.சி. இந்தியா பங்கில் 10,000 ரூபாயை முதலீடு செய்துவிட்டோம். நமது விதிமுறைப்படி ஒரு பங்கில் 10,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யக்கூடாது. அதனால் இனி பி.டி.சி. இந்தியா பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம். 74 ரூபாய் என்பதை இலக்கு விலையாக வைத்துக் கொண்டு அந்த பங்கில் முதலீட்டை தொடரவும். இலக்கு விலை வந்தவுடன் விற்றுவிடலாம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

டின்பிளேட் இந்தியா, வோல்டாஸ் ஆகிய பங்குகளை இரண்டுமுறை சராசரி செய்து விட்டோம். இனி இந்த பங்குகளில் ஒரே ஒருமுறை மட்டும் சராசரி செய்தால் போதும். அதற்குமேல் வேண்டாம்.

வாங்கிய பங்குகள் எல்லாம் இப்படி சரிந்து கொண்டிருக் கிறதே, எப்போதுதான் நாம் லாபத்தைப் பார்ப்பது என்று முதலீட்டாளர்களுக்குத் தோன்றலாம். ஆனால், நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் அனைத்து பங்குகளும் சரியவில்லை. உதாரணத்துக்கு, சந்தை கடுமையாக சரிந்தாலும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், டெக் மஹிந்திரா, ஜாக்ரன் பிரகாஷன் உள்ளிட்ட பங்குகள் சரியவில்லை. டெக் மஹிந்திரா பங்கு மிகவும் குறைவான அளவிலேயே சரிந்திருக்கிறது. நம் போர்ட்ஃபோலியோ மிகவும் பேலன்ஸ்டாக இருக்கிறது என்பதையே இது காண்பிக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

நாம் சரியான திசையிலே சென்று கொண்டிருக்கிறோம். சந்தை மேல் நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்போது புதிதாக முதலீடுகள் செய்யலாம். அதேசமயம், சந்தை மேலே செல்லும்போது நமது போர்ட்ஃபோலியோவில் சில பங்குகள் வெளியேறவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது நமது போர்ட்ஃபோலியோவின் எல்லையை இன்னும் விரிவுபடுத்தலாம். அதாவது, பல துறைகளில் இருக்கும் தரமான பங்குகளில் முதலீடு செய்யலாம். பொறுமையாக இருப்பவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். நாமும் அதையே கடைப்பிடிப்போம்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு