Published:Updated:

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்
மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

இந்த இதழ் நாணயம் விகடன் படிக்க: https://bit.ly/2S4aRZG

சந்தையிலுள்ள முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கவலையைப் போக்கும் விதமாக உடனடியாக புதிய கவர்னரை மத்திய அரசு நியமித்தது. புதிய கவர்னர் செயல்திறன்மிக்கவராக இருந்தபோதிலும், ஆர்.பி.ஐ-யின் சுயத்தை இழக்காமல் நிர்வாகம் செய்வதில் அவருக்குச் சோதனை வரலாம்... 

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மத்திய அரசிட மிருந்து பெரிய கொள்கை மாற்றம் எதையும் இப்போது எதிர்பார்க்க முடியாது. இப்போது நடக்கும் அரசியல் விளையாட்டுகள் குறித்து நன்கு ஆராய்ந்தபின்பே முதலீட்டாளர்கள் செயல்பட வேண்டும்... அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்று எந்தக் கட்சி அரசமைப்பதாக இருந்தாலும், அது தனிக்கட்சி மெஜாரிட்டி யால் அமைந்த அரசாக இருந்தால் மட்டுமே பங்குச் சந்தை ஏறத் தொடங்கும்...

- இவ்வாறாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களை சூழலுக்கு ஏற்றபடி பக்குவப்படுத்துகிறது 'தேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்?' எனும் கவர் ஸ்டோரி.

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

> பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை பல பொருளாதார நிபுணர்கள் ஆதரித்தபோதும், உர்ஜித் படேலின் மௌனம் மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 

> பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப்பிறகு பொருளாதார வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்பட்டது. இதற்குச் சரியான தீர்வு வட்டிவிகித குறைப்புதான் என மத்திய அரசு நம்பியது.

> ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப்பின்னர், வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்த மத்திய அரசு ரிசர்வ் வங்கி அதிகப்படியான டிவிடெண்டை வழங்கும் என எதிர்பார்த்தது. 

> மத்திய வங்கியின் சென்ட்ரல் போர்டின் ஆளுமைக்குக் கட்டுபட்டவரா கவர்னர் என்ற கேள்வி புதிதாக எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2018-ல் ரிசர்வ் வங்கி போர்டில் அரசியல் சார்புள்ளவர்கள் நியமிக்கப் பட்டதும், செப்டம்பர் 2018-ல் பொருளாதார நிபுணர்கள் நீக்கப்பட்டதும் மோதலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. 

- தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் உர்ஜித் படேல். ஆனால், பல உண்மைகளை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வதாக இருந்தது. அந்தக் காரணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல... அவற்றை ஒவ்வொன்றாக நம்மிடம் சொல்கிறது 'உர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்!' எனும் அலசல் பார்வை.

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

"அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரினு கிராமத்துல பொறந்து வளர்ந்து கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு, இப்ப இந்த அளவுக்கு வளர்ந்திருக்கோம். இது தனிமனித சாதனை இல்ல. இது டீம் வொர்க்கோட வெற்றி!"

"எங்க குடும்பத்துல யாருக்குமே பணத்தைத் தேடி ஓட்ற மனசு கிடையாது. ஐ.ஐ.எம்-ல படிக்குறப்ப எனக்குள்ள ‘நான் யாரு’னு ஒரு கேள்வி வந்துச்சு. அந்த கேள்விக்குப் பதிலா என்னை பத்தி நான் 25 பக்கத்துக்கு எழுதினேன். அப்ப முடிவு பண்ணினேன், ஏழை மக்கள்கூட வேலை செய்யணும்னு."

". வளர்ந்து வரும் ஆந்த்ரபிரினர்களுக்கு நாங்க காட்டும் வழி வெற்றியடைறப்ப நாங்களும் வெற்றியடை கிறோம். மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்குற நிம்மதியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை அனுபவிச்சாதான் தெரியும்" 

"வாழ்க்கையில் நாம் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கும்போது, நம்மை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் நபர்கள் மிக முக்கியமானவர்கள்" 

-  தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களைப் பெருமைப்படுத்தும் நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட் 2018’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் உதிர்க்கப்பட்ட வாக்கியங்கள் இவை. இந்த உத்வேகம் தரும் முக்கிய நிகழ்வின் சிறப்பு அம்சங்கள் 'நாணயம் விகடன் - பிசினஸ் ஸ்டார் விருதுகள்.... நம்பிக்கை... உற்சாகம்... பெருமை!' எனும் தலைப்பில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

இந்த இதழ் நாணயம் விகடன் படிக்க: https://bit.ly/2S4aRZG

"ஸ்டார்ட் அப் தொழில்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு மூன்று விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். உங்களுடைய தயாரிப்பு ஒப்பீட்டளவில் தரமானதாக இருக்க வேண்டும்; வாடிக்கையாளர் கள் தாங்கள் விரும்பியதை விரைந்து முடிக்க உதவவேண்டும். மிகக்குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்க வேண்டும். இந்த மூன்றையும் சாத்தியப்படுத்திவிட்டால் வெற்றி பெறுவது எளிதாகிவிடும்." 

ஸ்டார்ட் அப் தொழிலில் ஈடுபடுபவர்கள் செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் உள்ளிட்ட வெற்றி மந்திரங்களை அடுக்கும் 'நாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... தொழில்முனைவர்களை உருவாக்கும் புதிய களம்!' தவறவிடக் கூடாத பகுதி. 

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

*

இந்த வழக்கு தொடர்பாக, தான் இந்தியாவுக்குச் செல்லக் கூடாது என்பதற்காகப் பலவிதமான தடுப்பாட்டங்களை விஜய் மல்லையா கையாண்டார்...

1992-ம் ஆண்டிலிருந்து 28 நபர்களை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர இந்தியா முயற்சி செய்தது. ஆனால், இதில் ஒருவரை மட்டுமே இந்தியாவுக்குக் கொண்டுவர முடிந்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவர முடிந்தால், அது மிக முக்கியமான சாதனையாகவே கருதப்படும்... - விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இதன் பின்னணியையும், இனி நடக்கப் போவதையும் ஆழமாக நோக்குகிறது, 'லண்டன் நீதிமன்றத் தீர்ப்பு... இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா?' எனும் அலசல் பார்வை. 

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்-ல் (NPS) பல முக்கிய சலுகைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. என்.பி.எஸ் திட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபின்பும், பெருவாரியான மக்களிடம் அதுபோய் சேராமல் இருப்பதால், அந்தத் திட்டத்தை சம்பளதாரர்களிடம் ஊக்குவிக்கும்முகமாக பல சலுகைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம். குறிப்பாக 6 சலுகைகள் என்னென்ன என்பதை எளிதாக விவரிக்கிறது 'என்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை?' எனும் சிறப்புப் பார்வை. 

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

நடப்பு 2018-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையில் அதிக இறக்கம் கண்டது, ஸ்மால்கேப் பங்குகள். ஸ்மால்கேப் இண்டெக்ஸ் சுமார் 30% இறக்கம் கண்டிருக்கிறது. பல ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் விலை 50 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஆர்.பி.ஐ கவர்னர் மாற்றத்துக்குப்பிறகு சந்தை நாலுகால் பாய்ச்சலில் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. இந்த ஏற்றத்தில் ஸ்மால்கேப் பங்குகளும் பங்கேற்கின்றன...

"செல்பேசி சேவைகளுக்கான கட்டணம் தொடர்பான மத்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (TRAI) உத்தரவை எதிர்த்து பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள், டெலிகாம் சர்ச்சைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (TDSAT) முறையீடு செய்தன. அதனை விசாரித்த தீர்ப்பாயம், சேவைக் கட்டணம் நிர்ணயிக்க ட்ராயிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று அறிவித்தது... 

- ஸ்மால்கேப் பங்குகள் விலை எப்போது ஏறும்? ஏர்டெல் பங்கின் விலை ஒரே நாளில் 10% அதிகரித்துள்ளதே? முப்பது கோடி பங்குகளைத் திரும்ப வாங்குகிறதே ஐ.ஓ.சி? என பல சந்தேகங்களை களைகிறார் ஷேர்லக்!

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

...இந்த ஃபண்டுகளில் செய்யும் முதலீட்டைக் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்த அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இருக்கிற மகன் / மகள் திருமணத்திற்கு, அவசரகாலச் செலவுகளுக்கு என எந்தத் தேவைக்காக வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலான வங்கி சேமிப்புக் கணக்குகளைவிட இந்த வகை ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்கிறது. மேலும், நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதை முதலீடு செய்யும்போதே குறிப்பிடத் தேவையில்லை...

- லிக்விட் ஃபண்டுகள், கடன் ஃபண்டுகளில் ஒரு வகையாகும். கடன் ஃபண்டுகளிலேயே ஓவர்நைட் ஃபண்டுகளுக்குப்பிறகு மிகவும் குறைவான ரிஸ்க் உள்ள இந்த வகை ஃபண்டுகள் குறித்து முழுமையாக வழிகாட்டுகிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 4 - பள்ளிக் கட்டணம், பிரீமியம்... கைகொடுக்கும் லிக்விட் ஃபண்டுகள்!' தொடர் பகுதி.

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

"வீட்டுக் கடனுக்கான தவணை கட்டத் தாமதமானால் விதிக்கப்படும் அபராதத் தொகை, வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடியது. இவ்வளவுதான் வசூலிக்கவேண்டுமென்று வரையறையை ரிசர்வ் வங்கி விதிக்கவில்லை. வாடிக்கையாளரின் காசோலை, பவுன்ஸ் செய்யப்பட்டால் அதற்கு வங்கியின் சார்பில் அபராதத் தொகை விதிக்கப்படும். கூடுதலாக அந்த நிதிநிறுவனத்தின் சார்பாகவும் அபராதத்தொகை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கான தொகை அதிகமாக இருக்கலாம். செக் பவுன்ஸ் ஆவதால் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது."

மாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்

- வீட்டுக் கடன் தவணை... தாமதமானால் என்ன பாதிப்பு? வெளிநாட்டு இயந்திரங்கள், மூலப்பொருள்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகைகள் கிடைக்குமா? வாகனக் காப்பீட்டில், பம்பர் டூ பம்பர் இன்ஷூரன்ஸ், தேய்மான மில்லாத இன்ஷூரன்ஸ் என்றால் என்ன? உள்ளிட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் தருகிறது கேள்வி - பதில் பகுதி. 

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2S7fDp5

அடுத்த கட்டுரைக்கு