Published:Updated:

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!
ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

இந்த இதழ் நாணயம் விகடன்:  https://bit.ly/2CwCyoy

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேல் முதலீட்டை வைத்திருக்கத் தயார், ஆனால், அதிக ஏற்ற இறக்கம் இல்லாத எல்லாக் காலத்துக்கும் ஏற்ற எவர்கிரீன் ஃபண்டுகளாக வேண்டும்" என நினைப்பவர்களுக்காக ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டூரேஷன் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட், யூ.டி.ஐ ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் ஹைபிரீட் பாண்ட் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் மற்றும் கோட்டக் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் ஆகிய ஆறு ஃபண்டுகள் பரிந்துரைக்கப்படுகிறது.  இவை கடன் பத்திரங்களிலும், ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும் சேர்த்து முதலீடு செய்து, ஃபண்டுகளின் வருமானத்தில் நிகழும் ஏற்ற இறக்கத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. இந்த ஃபண்டுகளின் ரிஸ்க் அளவு உள்ளிட்ட தகவல்களுடன் முழுமையாக வழிகாட்டுகிறது, 'ஏற்ற இறக்க சந்தை... ரிஸ்க் குறைவான ஸ்மார்ட் ஃபண்டுகள்!' எனும் கவர் ஸ்டோரி. 

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``விவசாயிகளின் கடனை மொத்தமாகத் தள்ளுபடி செய்வதால், விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க முடியாது. விவசாயக்  கடன் தள்ளுபடிகள் குறுகிய கால தீர்வுகளை மட்டுமே கொடுக்கும். மேலும், இந்தக் கடன் தள்ளுபடி சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதே இல்லை..."

"...வங்கிகள் விவசாயத் துறைக்கு கடன் தரத் தயங்குவார்கள். இதனால் வெளியிடத்தில் அதிக வட்டிக்கு வாங்கும் சூழல் உருவாகும். இது விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும்..."

- விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வியூகங்களில் ஒன்றாகிவிட்ட அரசியல் சூழலில், இதுகுறித்த நிதர்சனப் பார்வையை வழங்கியிருக்கிறது, 'விவசாயக் கடன் தள்ளுபடி... பிரச்னைகளுக்குத் தீர்வா?' எனும் சிறப்புக் கட்டுரை.

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``இன்றைய தலைமுறை, சேமிப்புகளை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். இன்ஷூரன்ஸ் போடுவதென்பது நம்முடைய ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவத் தேவைக்கானது மட்டுமேயன்றி முதலீடாக அதைப் பார்க்கக்கூடாது. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸில் பணத்தைப் போடுவது தவறு. அதிக விலைகொடுத்து சொந்த வீடு வாங்குவதைவிட குறைவான வாடகை வீட்டில் வசிப்பதே மேல். அதிகப்படியான தினசரி செலவுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. நல்ல வேலையில் இருப்பதைக் கணக்கில்கொண்டு அதிக வங்கிக் கடன்களைப் பெறுவது தவறு. வேலை பறிபோகும் சூழல் வந்தால் சிரமத்தைச் சந்திக்க நேரிடும். சொந்த வீடு வாங்குவதாகக் கொண்டால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடனைச் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கான பராமரிப்புக் கட்டணம், வரி, இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட இதரச் செலவுகள் இருக்கும். எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது..." 

- இதுபோல் பல்வேறு கருத்துகளைத் தெளித்துச் சென்றிருக்கிறார்கள், முக்கிய நிறுவனங்களின் நிறுவனர்களும், நிதி நிபுணர்களும். நாணயம் விகடன் நடத்திய ஃபைனான்ஸ் கான்க்ளேவ் கடந்த வாரம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் உற்சாகமாகத் தொடங்கி, கலகலப்பாக முடிந்தது. பங்குச் சந்தை முதலீடு குறித்த நமது தவறான எண்ணத்தை உடைத்து, சரியான சிந்தனையைத் தருவதாக இருந்தது இந்த இரண்டு நாள் கருத்தரங்கம். அதன் முக்கிய அம்சங்களைத் தருகிறது 'முதலீடு, லாபம், தேர்தல்... உற்சாகமாகத் தொடங்கிய நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்!' எனும் செய்தித் தொகுப்பு. 

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

"...வாழ்க்கையை விடுங்கள். ஒவ்வொரு நாளிலுமே நாம் செய்யவேண்டிய ஹைலைட் டான விஷயம் என்ன என்பதை நாம் கண்டறிந்தால், அதுவே நம்மை கவனச் சிதறலிலிருந்து முழுமையாகக் காப்பாற்றும். சரி, ஹைலைட்டான விஷயத்தை எப்படிக் கண்டறிவது என்கிறீர்களா?  எதை இன்றைக்குள் அவசியம் முடிக்கவேண்டும், எந்த வேலை முடிந்தால் எனக்குத் திருப்தி அதிகமாக இருக்கும், நாளின் இறுதியில் மீண்டும் சிந்தித்தால், எந்த வேலையை முடித்தது என்னுடைய சந்தோஷத்தை அதிகப்படுத்தும் என்ற மூன்று கேள்விகளே ஹைலைட்டைக் கண்டறிவதற்காகக் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.."

-  பைத்தியக்காரத்தனமான வாழ்க்கையின் வேகத்தைக் குறைப்பது எப்படி? நாம் பிஸியாக இருப்பதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு,  குறைந்த அளவு கவனச்சிதறலுடன் செயல்பட்டால், நமது வாழ்க்கையை அனுபவித்தும் வாழ முடியும் என்கிறது 'மேக் டைம்' என்னும் புத்தகம். இந்த நூலின் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் 'உங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!' எனும் கட்டுரையை வாசித்தாலே புத்தகத்தை வாசித்து முடித்த ஃபீல் பெறலாம்!

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்று, வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்த முயற்சியில் சமீபத்தில் இறங்கியது. முதல்கட்டத் தேர்வில் பலரையும் சோதித்துப் பார்த்து, சரியான நபர்களை மட்டும் இறுதிச் சுற்றுக்கு அனுப்பும் வேலையைச் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ரோபோக்கள் செய்தன. ரோபோக்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து, சரியான நபர்களைத் தேர்வுசெய்து வேலைக்கு எடுப்பது மனிதவளப் பிரிவு அதிகாரிகள் வேலையாக இருந்தது.  எப்போதும் இரண்டு மாதங்கள் நடக்கும் இந்தத் தேர்வு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், ஒரே மாதத்தில் முடிந்து விட்டது."

-  ‘டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்ட் ட்ரான்ஸ் ஃபார்மேஷன்’ கருத்தரங்கில் பகிரப்பட்ட முக்கிய தகவல்களையும், கருத்துகளையும் முழுமையாகத் தருகிறது 'செயற்கை நுண்ணறிவு... ரோபோக்கள் நம் வேலைகளைப் பறித்துவிடுமா?' எனும் செய்திக் கட்டுரை.

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``ஓலா நிறுவனம் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து சேவையை வழங்கிவருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் வசம் ஒரு கார்கூட கிடையாது. அதனிடம் இருப்பது தொழில்நுட்ப மென்பொருள் மட்டுமே. அதன்மூலம் கார் உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும், வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைக்கிறது. வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் குறித்த கவலை இல்லை. ஓட்டுநர்களும் பேரம் பேசுவதில்லை. வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. ஆக, இங்கே தொழில்நுட்பம் நமக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதேபோலதான் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தொழில்நுட்பத்தால் பல பணியாளர்களும், உணவகங்களும், வாடிக்கையாளர்களும் பயனடைகிறார்கள்..."

தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் வெற்றி சாத்தியமாவதை எடுத்துச் சொல்கிறது 'வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!' எனும் நாணயம் பிசினஸ் கான்க்ளேவ் கவரேஜ். அத்துடன், ஸ்டார்ட்அப்களுக்குத் தேவையான நிதி குறித்தும் விவரிக்கிறது.

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

தற்போதைய பங்குச் சந்தை சூழ்நிலையில் சிறுமுதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

``ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, பொறுமை மிக முக்கியம். முதலீட்டைப் பிரித்து (அஸெட் அலோகேஷன்) முதலீடு செய்யுங்கள். இதர முதலீடுகளான தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்.

எந்தவொரு முதலீட்டிலும் வருமானத்தைத் துரத்தாதீர்கள். உங்களின் போர்ட்ஃபோலியோவில் மல்டிகேப் மியூச்சுவல் ஃபண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் நிகழும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு எப்போதும் கவலைப்பட வேண்டாம். பங்குச் சந்தை முதலீடு என்றாலே ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். இதனால், முதலீட்டை வேறு முதலீடுகளுக்கு மாற்றத் தேவையில்லை."

- மியூச்சுவல் ஃபண்ட் துறையில்  20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வரும் டி.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சு வல் ஃபண்டின் மூத்த ஃபண்ட் மேனேஜருமான கோபால் அகர்வால் அளித்த சிறப்புப் பேட்டியைத் தவறவிடாதீர்கள். 

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

``2019-ம் ஆண்டைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தைகள் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் என்று பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான கிரெடிட் சூஸே கணித்துள்ளது. இதற்கு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதும், மத்திய வங்கிகளின் இறுக்கமான நிதிக் கொள்கையுமே காரணமாக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது. அதேசமயம், இதிலிருந்து இந்தியச் சந்தை தப்பிக்க முடியாது என்றும், இருப்பினும் அதன் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..."

- தற்போதையை போக்குகள் மட்டுமின்றி 2019-ன் பங்குச்சந்தை போக்குகள் குறித்த தகவல்களையும் தேடித் தேடிப் பகிர்ந்திருக்கிறார் ஷேர்லக். குறிப்பாக, 'புத்துயிர் பெறும் பொதுத்துறை வங்கிகள்!' பற்றி விரிவாகவே சொல்கிறார். 

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

முகமது அலியின் நம்பிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் (சண்டைக் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும்) நம்மைப்போன்று குறைந்த  வளங்களை வைத்துக்கொண்டு பெரிய விஷயங்களைச் சாதிக்க நினைக்கும் மத்தியதர வர்க்க நபர்களுக்கு பெரியதொரு முன்னுதாரணமானதாகவும் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்...

ஏற்றத்துக்கு குறி: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 குறிப்புகள்!

உலக சாம்பியன் ஆனதற்குப் பின் நல்லதொரு கறுப்பு இன குத்துச்சண்டை வீரராக,  ஸ்பான்சர்களின் சொல்பேச்சு கேட்பவராக அவர் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவரோ உடனடியாகத் தன்னுடைய அடிமைத்தனத்தைக் குறிக்கும் பெயரை முகமது அலி என்று மாற்றினார். அமெரிக்காவில் சிவில் உரிமைக்குப் போராடும் அவருடைய இனத்தவர்களின் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
 
- காபி கேன் இன்வெஸ்ட்டிங் தொடரில் `முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்!' பகுதி தவிர்க்கக் கூடாத ஒன்று.

இந்த வார நாணயம்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PZ2Gf6