உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அனலிஸ்ட்டை தட்டி எழுப்புங்கள்! -38

கிராமத்து சாலை ஒன்றில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒருவரை தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த குதிரை ஒன்று, ''சார்... இங்க வாங்க! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'' என்று கூப்பிட்டது.

அட! குதிரை கூப்பிடுதேன்னு கிட்டப் போனார். ''சார், நான் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்துன்னு எல்லா ரேஸ்லேயும் ஓடியிருக்கேன். ஒரு ரேஸுல ஸ்லிப்பாகி கால் உடைஞ்சதால

என்னை தரை ரேட்டுக்கு இந்த விவசாயி வாங்கிட்டு வந்து கட்டிப் போட்டுட்டார். ஒரு 5,000 ரூபாய்க்கு என்னை வாங்கிட்டுப் போய் ஒரு ரேஸுல நிறுத்துங்க. குறைஞ்சது ஒரு லட்சமாவது சம்பாதிச்சுத் தர்றேன்''னு சொன்னது.

இதை கேட்டவருக்கு, அட, பேசுற குதிரை ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன? எக்ஸிபிஷன் வைச்சே சூப்பரா சம்பாதிச்சுடலாமேன்னு ஐடியா வர, விவசாயிடம், ''ஐயா, அந்த குதிரையை விலைக்குத் தர்றீங்களா?'' என்றார்.

''நீங்க வேற, அது சொன்ன பொய்யை நம்பிட்டீங்களா! அந்த குதிரை இதுவரைக்கும் ரேஸ்கோர்ஸையே பார்த்ததில்லை. நானும் அதோட பேச்சைக் கேட்டு ஏமாந்துதான் பணத்தை தண்டமா போட்டுட்டேன்'' என்று அலுத்துக் கொண்டாராம் விவசாயி. இப்படி ஒரு ஜோக் பங்குச் சந்தை வட்டாரத்தில் படு பாப்புலர்.

. சந்தையிலும் இது போலவேதான். நல்ல பல பங்குகள், சந்தை வெகுவாய் இறங்கும் போது அவ்வப்போது கண்ணுக்குத் தட்டுப்படவே செய்யும். ஆனாலும், அது எந்த விலையில் இருந்து எந்த விலைக்கு இறங்கியது (ரேஸே பார்க்காத குதிரையை போல) என்பதுதான் அனைவருக்கும் நினைவில் நிற்குமே தவிர, அதன் உண்மை மதிப்பும் அது கிடைக்கும் மிகக் குறைவான விலையும் (பேசும் குதிரை ரூபாய் 5,000-க்கு கிடைப்பது போல) கண்ணில் தெரியவே தெரியாது..
டிரேடிங்கை பொறுத்தவரை, இப்படி திடீர் திடீரென சந்தை வெகு சீப்பாய் மாறிவிட்டது என்பதை நினைவுபடுத்துவது ஆசிலேட்டர்கள்தான்.

அதுவும் அதிவேகத்தில் இறக்கமோ ஏற்றமோ நடந்தால் எதிர்மறையான விஷயங்கள் நடக்கப் போகிறது என்பதை ஆசிலேட்டர்கள் உடனடியாக காட்டிக் கொடுத்துவிடும்.

வில்லியம்ஸ் %ஆர் என்ற ஆசிலேட்டரை பற்றி கடந்த இதழில் பார்த்தோம். சந்தை முடியும் (குளோசிங்) நேரம் என்பது அனைவரும் கையிருப்பை கணக்கு பார்த்து எந்தெந்த பொசிஷனை வைத்துக்கொள்ளலாம், எந்தெந்த பொசிஷன்களை விற்கலாம் என்று பணக்கணக்கு போடும் நேரம்.

டிரேடர்கள் இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் இல்லையா? அப்படி சந்தை முடியும் நேரத்தில் வரும் விலையான குளோசிங் விலையை ஒரு குறிப்பிட்ட பீரியடின் ஹை மற்றும் லோவுடன் ஒப்பிட்டு, அது குளோசிங் ஹைக்கு அருகே உள்ளதா? லோவுக்கு அருகே உள்ளதா? எனப் படம் போட்டுக் காட்டுவதுதான் வில்லியம்ஸ் %ஆர் சார்ட்டின் வேலை.

வில்லியம்ஸ் %ஆர் அன்றைய குளோசிங்கிற்கும் சமீப கால (காலம் உங்கள் தேவைக்கேற்றாற்போல் -7,10,14 நாட்கள்) ஹைக்கும் அல்லது லோவிற்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து காட்டுவதாகும். சந்தை மேலே போய்க்கொண்டிருக்கும் போது குளோசிங் விலை சமீபத்திய ஹைக்கு அருகே சென்று குளோஸ் ஆகவில்லை என்றால் புல்கள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது ஷார்ட் போக வேண்டிய நேரம்.

சந்தை கீழே போய்க்கொண்டி ருக்கும் போது குளோசிங் விலை சமீபத்திய லோவுக்கு அருகே சென்று குளோஸ் ஆகவில்லை என்றால் பியர்கள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது லாங் போகவேண்டிய நேரம்.

வில்லியம்ஸ் %ஆர் ஆசிலேட்டர் மூன்று விதமான சிக்னல்களை கொடுக்கும். புல்லிஷ் அல்லது பியரிஷ் டைவர்ஜன்ஸ், தோல்வியடைந்த ஸ்விங்குகள் (பெண்டுலம் போல் ஒரு சைடில் இருந்து மறு சைடில் போவது - கீழிருந்து மேல்/மேலிருந்து கீழ் என), ஓவர்-பாட் மற்றும் ஓவர் சோல்ட் சிக்னல்கள் என்பவையாகும் அது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிஃப்டியின் செப்டம்பர்-11 முதல் டிசம்பர் 25, 2011 வரையுள்ள சார்ட்டைப் பாருங்கள். எப்போதெல்லாம் வில்லியம்ஸ் %ஆர் லைன் 20-ல் உள்ள ரெட்லைனை தாண்டிச் சென்றுள்ளதோ, அப்போதெல்லாம் நிஃப்டி மேலே சென்றுள்ளது. எப்போதெல்லாம் ரெட்லைனை தாண்டி கீழே சென்றுள்ளதோ, அப்போதெல்லாம் கீழே சென்றுள்ளது.

டைவர்ஜன்ஸ்கள் என்பது மிகவும் அபூர்வமாக வில்லியம்ஸ் %ஆர் ஆசிலேட்டரில் வரும். டைவர்ஜன்ஸ் என்பது வில்லியம்ஸ் %ஆர் லைன் மேலேயுள்ள ரெஃபரென்ஸ் லைனை, அதாவது ரெட் லைனைத் தாண்டி ஏறிவிட்டு பின்னர் இறங்கி மீண்டும் அந்த லெவலை தாண்ட முடியாமல் தடுமாறி இறங்கும்போது அதை 'பியரிஷ் டைவர்ஜன்ஸ்’ என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது, புல்கள் ஏற்கனவே தொட்ட எல்லையைத் தொட முடியாததால் அவர்களால் பலத்தைக் கூட்ட முடியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனவே, சந்தை இறங்குவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல், வில்லியம்ஸ் %ஆர் லைன் கீழேயுள்ள புளூ லைனை தாண்டிச் சென்று திரும்ப ஆரம்பித்த பின்னர் விலை இறங்கினால் பியர்கள் பவரை இழந்து வருகிறார்கள் என்றும் விலைகள் மேலே போக வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், புல்லிஷ் டைவர்ஜன்ஸை பார்த்தால் லாங்கும், பியரிஷ் டைவர்ஜன்ஸை பார்த்தால் ஷார்ட்டும் போகவேண்டும்.

அடுத்த முக்கியமான உபயோகம், ஒரு ஸ்விங் தோல்வி யடைவதைக் கணிப்பது. அதாவது, விலையில் ஒரு மேல்நோக்கிய (புல்) ராலி நடக்கும் போது வில்லியம்ஸ் %ஆர் லைனும் மேலே போகவேண்டும். அப்படிப் போகும்போது, மேலேயுள்ள ரெஃபரென்ஸ் லைனான ரெட்லைனை அடைய முடியாமல் வில்லியம்ஸ் % ஆர் லைன் திடீரென கீழே போனால் மேல்நோக்கிய ஸ்விங் தோல்வி அடைந்துவிட்டது என்று அர்த்தம்.

அதே போல் சந்தையில் இறங்கும் (பியர்) ராலி நடக்கும் போது கீழேயுள்ள ரெஃபரென்ஸ் லைனைத் தாண்டாமல் திடீரென திரும்பி வில்லியம்ஸ் %ஆர் லைன் மேலே போனால் கீழ்நோக்கிய ஸ்விங் தோல்வி அடைந்ததாக அர்த்தம்.

இதன் இன்னொரு பயன்பாடு, ஓவர் பாட் மற்றும் ஓவர் சோல்டை காண்பிப்பது. இதை கண்டுபிடிப்பது மிக மிகச் சுலபம். வில்லியம்ஸ் %ஆர் லைன் ரெட்லைனைத் தாண்டி மேலே போகும் போது அண்மையில் அது சென்ற உயரத்தை அடைந்தவுடன் ஓவர் பாட் என்று அர்த்தம் செய்து விற்பதற்கான சிக்னல் தருகிறது என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அதே போல், புளூ லைனைத் தாண்டி கீழே போகும் போது அண்மையில் சென்ற லெவலை அடைந்தவுடனேயே ஓவர் சோல்டாய் ஆகிவிட்டது என்றும் வாங்குவதற்கான சிக்னல்களைத் தருகிறது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில் ஒரு சின்ன சூட்சுமம் இருக்கிறது. அது என்ன?

சில சமயம் உச்சத்திலோ, அடிமட்டத்திலோ வில்லியம்ஸ் %ஆர் லைன் கொஞ்சநாள் தங்கிவிடும். அப்போது நடந்து கொண்டிருக்கும் டிரெண்ட் தொடர்கிறது என்று அர்த்தம்.

அப்படி தொடர்ந்து ஒரு லெவலில் இந்த லைன் நின்றால் நடக்கும் டிரெண்ட் ஸ்ட்ராங் ஆகிக்கொண்டே போகிறது என்று புரிந்து கொண்டு ஷார்ட்டைத் தவிர்க்க வேண்டும். அதே போல், கீழே போய் ஒரு லெவலில் தொடர்ந்து இருக்கும்போது இறங்கும் டிரெண்ட் தொடரும் என்று புரிந்துகொண்டு லாங் போவதைத் தவிர்க்க வேண்டும்.

ஓவர் பாட் மற்றும் ஓவர் சோல்ட் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது மேஜர் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்த பின்னரே முறையே ஷார்ட் மற்றும் லாங் போகவேண்டும்.

உதாரணமாக, வீக்லி சார்ட் பியரிஷாகவும், இன்ட்ரா-டே வில்லியம்ஸ் %ஆர் சார்ட் ஓவர் சோல்டாகவும் காண்பித்தால், ஷார்ட்தான் போகவேண்டுமே தவிர லாங் போகக்கூடாது. தொடர்ந்து சார்ட்களை கவனித்தால் இந்த நுணுக்கங்கள் சுலபமாகப் புரிந்துவிடும். மேலும், ஒரு புதிய டெக்னிக்குடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

(வளரும்...)

சின்ன விஷயம்! நிறைய வருமானம்!

உலகின் மிகப் பெரிய ஃபர்னிச்சர் கடையான ஸ்வீடன் நாட்டு இக்கியாவை தொடங்கியவர் இங்வர் காம்ராத். தன் கடைகளில் ஃபர்னிச்சர் வாங்குபவர்களின் பிரச்னையை இங்வர் கவனித்தார். மேசை, நாற்காலி, கட்டில் வாங்க வருகிறவர்கள் அதை வேன்களில் எடுத்துச் செல்ல நிறைய செலவு செய்து கொண்டிருந்தார்கள்.

இதை தவிர்க்க, நினைத்த மாத்திரத்தில் பிரித்து, மீண்டும் சேர்க்கிற மாதிரியான மேசை, நாற்காலி, கட்டில்களை அவர் செய்து விற்க ஆரம்பித்தார். அந்த ஐடியா அவருக்கு அள்ளிக் கொடுத்தது எக்கசெக்கமான பணம்! சின்ன யோசனையும் பெரிதாகச் சம்பாதித்துத் தரும்!

- அத்வைத்