இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனி 1948-ல் அசோக் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி. இங்கிலாந்தின் ஆஸ்டின் கம்பெனியுடன் தொழில்நுட்ப கூட்டணியில் ஆரம்பமான இந்நிறுவனத்தில், 1949-ம் வருடம் ஏ40 என்ற ஆஸ்டின் கார் அசெம்பிள் செய்யப்பட்டது.

1959-ல் இங்கிலாந்தில் இருந்த லேலாண்ட் கம்பெனி அசோக் மோட்டார்ஸில் கூட்டணி வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது. 1959-ல் அசோக் லேலாண்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1967 முதல் டபுள் டெக்கர் பஸ்ஸை அறிமுகப்படுத்தி பிறகு, 1969-ல் கனரக வாகனங்களில் பவர் ஸ்டீயரிங்கை அறிமுகப்படுத்தியது. இன்று பஸ், லாரி, மிலிட்டரி வாகனங்கள், சொகுசு பஸ்கள் மற்றும் தோஸ்த் என்ற லைட் கமர்ஷியல் வெகிக்கிள் வரை அறிமுகப்படுத்தி வெற்றி நடை போட்டுவருகிறது இந்த கம்பெனி.

தொழில் எப்படி?

. அசோக் லேலாண்ட்டின் தயாரிப்புகள் கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே. இந்திய அரசின் 50,000 கிலோ மீட்டர் சாலை இணைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் போகும் தீவிரம்தான், கமர்ஷியல் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் தொழிலை பெருமளவில் மாற்றி அமைக்கப் போகின்றன. ஆகஸ்ட் 2011 வரை கிட்டத்தட்ட 16,000 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்பட்டுவிட்டன. அடுத்த 10,000 கிலோ மீட்டருக்கான வேலைகள் நடந்து வருகின்றன..
ரயிலில் பொருட்களை எடுத்துச் செல்வதைவிட சாலைகளில் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்வது கிட்டத்தட்ட 10% வரை செலவு குறையும் என்கிறது ஆய்வு முடிவுகள். 2000-01-ல் 40 சதவிகிதமாக இருந்த இந்திய அளவிலான ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து 2009-10-ல் 30 சதவிகிதமாக குறைந்துள்ளது இதையே காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது வாகன விற்பனையும் நன்கு வளர்ச்சி அடையும். கடந்த சில வருடங்களாக வேகமாக அதிகரித்து வரும் மல்டி ஆக்ஸில் வாகனங்களின் விற்பனையே இதற்குச் சான்று. தவிர, அரசு பஸ்கள் 120 முதல் 130 சதவிகித கெப்பாசிட்டியில்தான் (இது சராசரிதான், பீக் ஹவர்ஸில் இதைவிட அதிகம்!) சர்வீஸ்களை நடத்துகின்றன.

அதிக பஸ்களை வாங்க அரசாங்கத்திடம் பணமில்லையே என்று நீங்கள் கேட்கலாம். புதிய வாகனங்கள் அதிகரிப்பை மட்டும் நம்பியே அசோக் லேலாண்டின் பிஸினஸ் இல்லை. பழையன கழிந்து புதியன புகுதல் என்பது பஸ்ஸிற்கு கட்டாயமான ஒன்று. எனவே, ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட் என்பது எப்போதுமே வியாபாரத்திற்கு உகந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், பொருளாதார சுழற்சிக்கு ஏற்ப ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி இருக்கும். 2011-12-ல் மத்திம மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை 5 முதல் 7 சதவிகிதமும், பஸ்களின் விற்பனை 4 முதல் 6 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கம்பெனி எப்படி?

அறுபது வருட அனுபவம், 50 நாடுகளுக்கு விற்பனை, இந்தியாவில் இரண்டு இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட், செக் குடியரசு போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யும் வசதி, நிஸான் மோட்டார் (ஜப்பான்) இலகு ரக கமர்ஷியல் வண்டிகளுக்கான கூட்டணிக்கான ஒப்பந்தம், அமெரிக்க கம்பெனியான ஜான் டீருடன் கட்டடம் கட்ட உதவும் இயந்திரங்களைச் செய்வதற்கான கூட்டணிக்கான ஒப்பந்தம் என பல விதமான கூட்டணிகளை அமைத்து வெற்றி நடைபோடும் கம்பெனி இது.

அசோக் லேலாண்ட் இந்தியாவின் இரண்டாவது பெரிய மத்திம ரக மற்றும் கனரக (மீடியம் மற்றும் ஹெவி) கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனி. 2010-11-ல் கிட்டத்தட்ட 30% கனரக கமர்ஷியல் வாகனங்களில் மார்க்கெட் ஷேரையும், இலகுரக

கமர்ஷியல் வாகனங்களில் சிறிதளவு மார்க்கெட் ஷேரையும் தன்வசம் கொண்டுள்ளது. அதே சமயத்தில், இந்திய பயணிகள் பஸ் செக்மென்டில் கிட்டத்தட்ட 50% மார்க்கெட் ஷேரைக் கொண்டுள்ளது. கமர்ஷியல் வாகனங்கள் செக்மென்டில் இந்தியா முழுக்க தனது வியாபாரத்தை விருத்தி செய்ய கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது.

வியாபாரம் எப்படி?

கமர்ஷியல் வண்டிகளின் வியாபாரத்தைப் பற்றி பேசுவதற்கு முன் வட்டி விகிதத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். இன்றைய சூழ்நிலையில் புதிதாக கடன் வாங்குபவர்கள் சராசரியாக 13.5% முதல் 17% வட்டிக்கும், சிறிய ஆப்ரேட்டர்கள் 12.5 முதல் 15.5% வட்டிக்கும், பெரிய ஆப்ரேட்டர்கள் 11.5 முதல் 14.5% வட்டிக்கும் கடன் வாங்க முடிகிறது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் இந்த வட்டியும் குறையும். அதனால் வாகன விற்பனையும் அதிகரிக்கும்.

தவிர, உள்நாட்டுத் தேவைகளை மட்டுமே நம்பியிராமல் ஏற்றுமதி செய்வதன் மூலம் தன் வியாபாரத்தினை வளரச் செய்துவருகிறது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் (2010-11) ஏற்றுமதி வர்த்தகத்தில் 35 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ள அசோக் லேலாண்ட், அடுத்த வருடம் 30 சதவிகிதத்தை அடைய வாய்ப்புண்டு.

இது தவிர, ராணுவத்திற்கு வாகன விற்பனை, வாகன உதிரிபாக விற்பனை, மின்சார ஜெனரேட்டர்களுக்கான டீசல் இன்ஜின்கள் விற்பனை என பல்வேறு விற்பனை மூலமும் லாபம் பார்த்து வருகிறது அசோக் லேலாண்ட்.

விரிவாக்கம் ஏதும் உண்டா?

அடுத்த நிதியாண்டில் நிறைவு பெறுகிற மாதிரி 240 கோடி ரூபாய்க்கான விரிவாக்கத் திட்டங்களை தீவிரமாகச் செய்துவருகிறது அசோக் லேலாண்ட். அடுத்த நிதியாண்டில் கேப்பிட்டல் குட்ஸ் விரிவாக்க எல்லையை 600 கோடியாக வைத்துள்ளது. கடன் அளவீட்டில் டெட்-ஈக்விட்டி ரேஷியோ 1:1 லெவலை 2011-12 இறுதியில் தாண்டாது என்றும் அசோக் லேலாண்ட் எதிர்பார்க்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் புதுமை என்பது பெரிய செலவினத்தை உண்டு பண்ணுவதும் மற்றும் பெரிய வியாபார உத்தியாகவும் எப்போதும் அமைகிறது. அதிலும் இப்போது நிலவும் எரிபொருள் விலை ஏற்றத்தால் உபயோகிப்பாளர்கள் மத்தியில் எரிபொருள் சிக்கனத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கேற்ப அசோக் லேலாண்ட் நெப்ட்யூன், ஹெச் சீரீஸ் போன்ற எரிபொருள் சிக்கனம் தரும் புதிய இன்ஜின்களை உருவாக்கி வருகிறது.

2010-11-ல் 55 புதிய ஊர்களில் டீலர்களை நிறுவியுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் டீலர் நெட்வொர்க்கை 50% வளர்த்துள்ளது. நிஸானுடன் சேர்ந்து லைட் கமர்ஷியல் வாகனங்களைத் தயாரித்து (தோஸ்த்) விற்பனை செய்து வருகிறது அசோக் லேலாண்ட். ஜான் டீருடன் சேர்ந்து கட்டடம் கட்டுவதற்கு உண்டான வாகனங்கள் தயாரிக்கும் முயற்சியில் புராஜெக்ட் ஒன்று நடைபெற்று வருகிறது.

ரிஸ்க் ஏதும் இல்லையா?

வட்டி விகித ஏறுதல், கமாடிட்டி விலை ஏறுதல் (மெட்டல்கள் அதிக அளவில் உபயோகிக்கும் தொழில்), பொருளாதார வீழ்ச்சி என எல்லா விஷயங்களும் அசோக் லேலாண்டின் லாபத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் தாண்டி இந்தத் தொழிலில் போட்டி என்பது மிகவும் அதிகமாகிக்கொண்டே போகிறது.

தவிர, கொஞ்சம் நாள் முன்னர் வரை வாகனம் குறித்த டெக்னிக்கல் இன்புட்களை தருவதற்காக கூடவே இருந்த இவெகோ நிறுவனமும் இப்போது அசோக் லேலாண்டுடன் இல்லை. அசோக் லேலாண்ட் நிஸானுடன் சேர்ந்து தற்போது ஆரம்பித்திருக்கும் எல்.சி.வி. பிஸினஸில் ஏற்கனவே பல கம்பெனிகள் கடுமையான போட்டி போடுகின்றன. எனவே, இந்த டிவிஷன் லாபம் தர நீண்ட நாட்கள் ஆகலாம். புதிய எமிஷன் நார்ம்ஸ்கள் அமுல்படுத்தப்படும்போது இன்ஜின்கள் தயாரிப்பில் செலவுகள் அதிகரிக்கவே செய்யும். போட்டிகள் அதிகமாகும் போது அந்த தயாரிப்புச் செலவு அதிகரிப்பை கஸ்டமரிடமிருந்து வாங்க முடியாமல் போய் லாபத்தைக் குறைத்து விற்க வேண்டி வரலாம். இதனாலும் லாபம் குறைய வாய்ப்புள்ளது.

என்னதான் புதிய போட்டியாளர்கள் வந்தாலும், ஆட்டோமொபைல் துறையில் நீண்ட நாள் வியாபாரத்தில் இருக்கும் கம்பெனிக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கைதான். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை நிச்சயமாக அசோக் லேலாண்டின் வியாபாரச் சக்கரத்தை சுழல வைக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். அதனால், வாசகர்கள் இந்திய பொருளாதாரம் மேல்நோக்கிச் செல்லும் போது லாபம் பார்க்கும் எண்ணத்துடன் அசோக் லேலாண்டின் ஷேர்களை வாங்கிப் போடலாம் என்பது தான் நாணயம் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.

யோசித்தால் சக்ஸஸ்தான்!

வில்லியம் ஆடிஸ் என்ற இளைஞர் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காகச் சிறையில் இருந்தார். ஜெயிலில் எப்படி நேரம் போக்குவது என்று தெரியாமல் தவித்த ஆடிஸின் சாப்பாட்டில் ஒரு எலும்புத்துண்டு கிடைத்தது. அவர் அதை நன்றாக கடிக்க, அதில் பல ஓட்டைகள் விழுந்தன. சில ரோமத் துண்டுகள் காற்றில் பறந்து வந்தன.

விளையாட்டாக அந்த ரோமத்துண்டுகளை எலும்பு ஓட்டைகளுக்குள் சொருகி, எலும்புத் துண்டைக் கடித்தார் ஆடிஸ். இதனால் பல் சுத்தமானதாக அவருக்கு ஒரு உணர்வு. சிறையைவிட்டு வெளியே வந்ததும் அவர் செய்த முதல் வேலை, எலும்புக்கு பதிலாக பிளாஸ்ட்டிக்கில் ரோமத்துண்டு வைத்து, டூத் பிரஷ் செய்து விற்றதுதான்! புதிதாய் யோசித்தால் நிச்சயம் சக்ஸஸ்தான்!

- அத்வைத்