கடந்த வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே சந்தை உயர்ந்து பிறகு சரிவில் முடிவடைந்தது. அவ்வப்போது சந்தை ஏறினாலும், ஏற்றத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சந்தை இன்னும் ஏறுமுகத்துக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சந்தை தொடர்ந்து மூன்று வாரங்களாக 200 நாள் மூவிவ் ஆவரேஜுக்குக் கீழே முடிவடைந்தது, 123 வார குறைந்தபட்ச புள்ளியைவிட சரிந்தது போன்றவை இன்னும் சந்தை சரியும் என்பதையே உறுதி செய்கின்றது.

மேலும், வரும் வாரங்களில் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பிக்கும். வட்டி விகித உயர்வு, ரூபாய் சரிவு போன்ற பல காரணங்களால் காலாண்டு முடிவுகள் சந்தைக்கு நல்லதாக இருப்பது போல தெரியவில்லை. தவிர, இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ் இருக்கும் நிறுவனமான ரிலையன்ஸில் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் பேட்டர்ன் உருவாகி இருப்பதால் அந்த பங்கு மேலும் சரிவடைய வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே இண்டெக்ஸ் சரி இல்லாத சூழ்நிலையில் முக்கியமான பங்காக இருப்பதால் இந்த பங்கு சரிந்தால் இண்டெக்ஸும் சரிவடையும்.

பல ஐரோப்பிய நாடுகளுக்கான ரேட்டிங்கை மூடி, எஸ் அண்ட் பி மற்றும் ஃபிட்ச் போன்ற ரேட்டிங் ஏஜென்சிகள் வரும் வாரங்களில் வெளியிட இருக்கின்றன. பெரும்பாலும் இவை நெகட்டிவ்வாகவே இருக்க வாய்ப்பு அதிகம். அப்படி நெகட்டிவ்வாக இருந்தால் யூரோ சரிவடையும். அதனால் டாலர் வலிமையாகும். டாலர் வலிமையானால் இந்திய ரூபாய் சரிவடையும். அல்லது இப்போதிருக்கும் நிலையிலேயே இருக்கும். இது போன்ற சமயங்களில் சந்தை மேலே செல்லும் வாய்ப்புக் குறைவாக இருக்கும்.

காலாண்டு முடிவுகள், ரேட்டிங் ஏஜென்சிகளின் முடிவுகள் தெரிய வரும்போது சந்தை இன்னும் கொஞ்சம் சரிந்திருக்கும். அதன்பிறகு புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிக்கலாம். அதுவரை நாம் பொறுத்திருப்போம்.

போர்ட்ஃபோலியோ இன்றைய நிலையில்...

. கடந்த வாரத்தில் சந்தை சரிந்தாலும் எந்த பங்கும் நான் சராசரி செய்யச் சொன்ன விலைக்கு வரவில்லை. அதனால் இந்த வாரத்தில் எந்த பங்கினையும் நீங்கள் வாங்கி சராசரி செய்திருக்க முடியாது. சில பங்குகள் சராசரி விலைக்கு அருகில் வர்த்தகமாகிறது. வரும் வாரத்தில் அந்த பங்குகள் சராசரி ஆகலாம்..
வரும் வாரங்களில் மிகக் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கும்போது நம் போர்ட்ஃபோலியோவின் நஷ்டம் குறைந்துகொண்டே வரும். 2012-ம் ஆண்டில் நாம் செய்யப்போகும் முதலீடுகள் நம் வாழ்வில் மறக்க முடியாத முதலீடுகளாக இருக்கும். இருக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

காலியான கம்பெனி!

கோகோ கோலா 1977-ல் இந்தியாவைவிட்டு வெளியேறிய சமயம், டபுள் கோலா என்கிற பெயரில் அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் தில்லாக பிஸினஸில் கால் பதித்தது. அப்போது எல்லா குளிர்பானங்களும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்தே விற்கப்பட்டன. இந்த பாட்டிலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்.

ஆனால், வீட்டுக்குப் போன பாட்டில்கள் மீண்டும் கடைக்கு வரவில்லை. பாட்டில் தட்டுப்பாட்டால் இரண்டே மாதத்தில் அந்த கம்பெனி இழுத்து மூடப்பட்டது. விசாரித்தபோதுதான் தெரிந்தது, லோக்கல் குளிர்பான கம்பெனி ஒன்று, ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தந்து, பாட்டில்களை உடைத்திருக்கிறது என்று! பிஸினஸை எப்படி பஞ்சர் செய்கிறார்கள் பாருங்கள்!

- அத்வைத்