Published:Updated:

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!
2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

இந்த இதழ் நாணயம் விகடன்:  https://bit.ly/2SsmBoP

* வரவிருக்கும் ஆண்டுகளில், சர்வதேச நிதிச் சந்தைகள் பழைய பாதைக்குத் திரும்பினால், மத்திய வங்கிகள் தேவைக்கும் அதிகமான தங்கத்தை மீண்டும் வாங்கும்பட்சத்தில், நகைக்காக அல்லாத தங்கத்தின் தேவை அதிகரிக்கும். சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவதாலும், வட்டி விகிதம் அதிகரிப்பதாலும் அடுத்த 2/3 ஆண்டுகளில் இது நடப்பதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, தங்கத்தில் 10% அளவுக்கு மிதமான ஒதுக்கீட்டைசெய்து  வைத்துக்கொள்ளலாம்...

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

* கிரெடிட் ரிஸ்க்குகள் இல்லாத ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பது முக்கியமானது. முதலீட்டுக் காலத்தைப் பொறுத்தே வட்டி விகித ஆபத்து இருப்பதால், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்லதாக இருக்கும். அதேசமயம், நிதிச் சிக்கலை ஏற்படுத்தும் கடன் ரிஸ்க்குகள் வருவாயில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும்...

* அமெரிக்கச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளதாக ஆகிவிட்ட சூழ்நிலையிலும்கூட, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஈட்டும் திறன் மேம்பட்டிருப்பதால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரிக்கும்...

- லாபகரமாகப் பிரித்து முதலீடு செய்வது (அஸெட் அலோகேஷன்) எப்படி என்பது குறித்த தனது கருத்துகளைத் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நாணயம் விகடன் வாசகர்களுடன் 'டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!' எனும் தலைப்பில் பகிர்ந்திருக்கிறார் யுனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் செயல் இயக்குநர் ஜி.மாறன்.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

ஏறக்குறைய அடுத்த காலாண்டுக் காலம் வேறெந்த பாதகமும் நடந்துவிடக்கூடாது என்ற பதற்றமான சூழலுடன் தான் தற்போதைய சந்தை நிலவரம் உள்ளது...

கடந்த 20 ஆண்டுகளின் அனுபவத்தில் பார்த்தால், பொதுத் தேர்தல்களின்போது, சந்தை பெரிதாக எந்தவிதமான தாக்கத்துக்கும் உள்ளாகவில்லை. பொருளாதாரம் முன்னோக்கிச் செல்லும். ஆனால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும், வர்த்தகப் போர் காரணமாகவும் ஏற்றுமதிக்குப் பாதகமான சூழலைச் சந்திக்கக்கூடும். கச்சா எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும்...

- வர்த்தகப் போர்கள், வட்டிவிகித உயர்வு, தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட பாதிப்பு, கச்சா எண்ணெய் பிரச்னை, இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு, சந்தை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றை அலசி, 'பங்குச் சந்தை.... 2019-ல் எப்படி இருக்கும்?' என்பதைச் சொல்கிறார் ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

"நாங்கள் மதுரையிலிருந்து செயல்படுவதில் எங்களுக்குப் பல வசதிகள் கிடைத்தன. உதாரணமாக, மதுரையில் ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய அலுவலகத்தை எளிதில் சென்றுவரக்கூடிய இடத்தில் அமைத்திருக்கிறோம். சென்னையில் இதேமாதிரி ஓர் அலுவலகத்தை அமைக்கவேண்டும் என்றால், நிறைய செலவு செய்திருக்க வேண்டும். அல்லது நகருக்கு வெளியே வெகுதொலைவில் அமைத்திருக்க வேண்டும்..."

- பதினெட்டு ஆண்டுகளுக்குமுன் மதுரையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் இன்று ஆசிய நாடுகளைத் தாண்டி, சர்வதேச அளவில் செயல்படத் தொடங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வளர்ச்சி. மதுரையில் இருந்துகொண்டு ஒரு கே.பி.ஓ (Knowledge process outsourcing) வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கிருஷ்ணன். இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது என்று அவரிடமே கேட்டோம். கடந்த 18 ஆண்டுகளான தனது தொழில் வாழ்க்கையை நம்மிடம் 'மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!' எனும் தலைப்பில் பகிர்ந்திருக்கிறார் 45 வயதான நாகராஜ்.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

புனேவைச் சேர்ந்த ட்ரூ எலிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1.5 கோடி நிதியை முதலீடாகத் திரட்டியது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அப்போது சந்தோஷமாக இருந்த இந்த விஷயம், தற்போது சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த முதலீட்டை வருமானமாக எடுத்துக் கொண்டு, ரூ.40 லட்சம் வரி (ஏஞ்சல் டாக்ஸ்) செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பல நிறுவனங்களுக்கும் பிரிவு 56(2) கீழ் ஏஞ்சல் டாக்ஸ் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதனால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலவரத்தில் உள்ளன...

இந்த இதழ் நாணயம் விகடன்:  https://bit.ly/2RkdjKY

- ஏஞ்சல் வரி என்றால்? ஏன் வந்தது ஏஞ்சல் டாக்ஸ்? என்ன செய்ய வேண்டும் மத்திய அரசு..? - இப்படி பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்கிறது 'ஸ்டார்ட்அப்களைக் கலவரப்படுத்தும் ஏஞ்சல் டாக்ஸ்!' எனும் சிறப்புக் கட்டுரை.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

> உங்கள் குழந்தைகளுடன் பட்ஜெட் தயாரியுங்கள்!

உங்கள் பிள்ளைகளுக்குப் பணத்தைச் சேமிப்பதற்கும், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கும் சொல்லிக்கொடுங்கள்; நிதி தொடர்பான அடிப்படைக் கருத்துகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது குடும்பத்தின் நிதி இலக்குகளை  அவர்களுக்குப் புரியவைக்கும். மேலும், அவர்கள் வளர்ந்தபின்பு பணத்தைப் பொறுப்புடன் செலவழிக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தரும். சேமிப்பு மற்றும் செலவு, முதலீட்டில் அனைவரும் பங்கேற்கும்போது, அதன் பலனை அடைவதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெருமையுடன் பங்கேற்க முடியும்.

- இதுபோல ஹெல்த் இன்ஷூரன்ஸ் முதல் அவசரகால நிதி வரை, நீங்கள் செயல்படுத்த வேண்டிய 10 தீர்மானங்களை முன்வைக்கிறது '2019 புத்தாண்டு... வாழ்வை வளமாக்கும் 10 நிதி, முதலீட்டு தீர்மானங்கள்!' எனும் கைடன்ஸ் கட்டுரை.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

"அதிக நேரம் அலுவலகத்தில் செலவிடுதல், எக்கச்சக்கமாக பிஸியாக இருத்தல், தூங்கக்கூட நேரமில்லாது இருத்தல் போன்ற அனைத்தையும் செய்தபின்னருமே, வேலை மீதியிருந்தால் அதுவே பெரும் மன உளைச்சலைத் தருவதாக அமைந்துவிடுகிறது. தொடர்ந்து சோர்வாயிருத்தல் (பிஸியாக இருப்பதால்) என்பது ஒரு அங்கீகாரம் இல்லை; முட்டாள்தனம்" என்று சொல்லி ஆரம்பிக்கிறது ஜாசன் ப்ரைட் மற்றும் டேவிட் ஹெய்ன்மெய்ர் ஹான்ஸன் என்ற இருவரும் இணைந்து எழுதிய 'இட் டஸின்ட் ஹேவ் டு பி கிரேசி அட் வொர்க்' எனும் புத்தகம்.

- புத்தகத்தை முழுமையாக வாசித்த அனுபவத்தை நமக்குத் தருகிறது, இந்நூலின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய 'சூப்பர் பவர்... உங்கள் இலக்கை எட்ட வைக்கும் எட்டு மணி நேரம்!' எனும் கட்டுரை.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

> "ஒரு தனிநபர் முதலீட்டாளருக்குப் பணம் மற்றும் துணிவைவிடப் பொறுமைதான் மிகவும் முக்கியம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் அதற்காகப் பதற்றப்படாமல் பொறுமை காத்திருந்தால் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்..."

> ''பங்குச் சந்தையில் பல்வேறு கட்டுக் கதைகள் நிலவும். அவற்றையெல்லாம் நம்பக் கூடாது. அதிக ரிஸ்க் எடுத்தால்தான் அதிக லாபம் கிடைக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் எந்த லாஜிக்கும் கிடையாது." 

> "நம் நாட்டைப் பொறுத்தவரை, 'டைம் பவுன்ட் இன்வெஸ்டிங்'தான் சிறந்தது. அதிக வருமானம் தருமென்ற குருட்டு நம்பிக்கை, ஆர்வத்தைத் தூண்டும். பலர் அந்த ஆர்வத்தின் காரணமாக கடன் வாங்கி முதலீடு செய்வார்கள்." 

- இப்படி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான வழிகாட்டும் முத்துகளைத் தெளித்துள்ளது 'நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!' எனும் பகுதி.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

கடந்த ஓராண்டு காலம் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், 2019 தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் மார்க்கெட் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும்.

2019-ல் மாடரேட்-ஆக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிகேப் ஃபண்டுகள் சாதகமாக இருக்கும். அக்ரெஸிவ் முதலீட்டாளர் களுக்கு மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் சாதகமாக இருக்கும்...

- ஸ்மால்கேப் ஃபண்டுகள், மிட்கேப் ஃபண்டுகள், லார்ஜ்கேப், மல்டிகேப் ஃபண்டுகள் மற்றும் ஹைபிரீட் ஃபண்ட் ஆகியவற்றின் கடந்த கால நிலையையும், தற்போதையச் சூழலையும் அலசி ஆராய்ந்து, 'மியூச்சுவல் ஃபண்ட்... 2019 எப்படி இருக்கும்?' என்று விவரிக்கிறார் சுரேஷ் பார்த்தசாரதி. 

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

புத்தாண்டில் இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? 

"டிசம்பரில் சர்வதேசப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சரிவான போக்கினால் ஏற்பட்ட அச்சம், அடுத்த ஜனவரி மாதத்தையும் கவலையுடன் எதிர்நோக்க வைத்துள்ளது. இதனால், ஜனவரி மாதம் இந்திய பங்குச் சந்தை மந்தமான நிலையே காணப்படும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.  

புத்தாண்டில்  இந்தியச் சந்தையின் போக்கை முக்கியமாக இரண்டு விஷயங்கள் நிர்ணயிக்கும். முதல் விஷயம், சர்வதேச காரணங்கள் அதாவது, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் போன்றவை. அடுத்தது, நிறுவனங் களின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவு களுக்கேற்ப சந்தையில் ஏற்றஇறக்கம் இருக்கும்.

- இது மட்டுமின்றி நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் நிதித் திரட்டுவது குறைந்துள்ளதே? அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் பதிவுகள் 2018-ல் அதிகரித்துள்ளதற்கு என்ன காரணம்? உலக அளவில் பங்குச் சந்தைகளில்  அதிகம் இழப்பு ஏற்பட்டுள்ளதே?  விதிமுறை மீறல்  வழக்குகளை முடித்து வைப்பதில் செபி வேகம் காட்டுகிறதே? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் ஷேர்லக்.

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகளுக்கு டாக்ஸேஷன், பங்கு சார்ந்த ஃபண்டுகளுக்கு உள்ளதுதான். 12 மாதங்களுக்குமேல் வைத்திருந்து ரிடெம்ப்ஷன் செய்யும்போது, வரும் லாபத்தில் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வரிச் செலுத்த வேண்டாம். அதற்குமேல் உள்ள லாபத்திற்கு 10% வரிச் செலுத்த வேண்டும். 12 மாதத்திற்குள் ரிடெம்ப்ஷன் செய்தால், வரும் லாபத்திற்கு 15% வரிச் செலுத்த வேண்டும்...

2019... லாபமா? சாபமா? - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அலசல்கள்!

- கலப்பின ஃபண்டுகள் என ஹைபிரீட் ஃபண்டுகளை அழைக்கலாம். இந்த வகை ஃபண்டுகள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொத்து வகைகளில் முதலீட்டை மேற்கொள்கின்றன. இந்தவகை ஃபண்டுகளின் ரிஸ்க் அளவு முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளைவிட குறைவு. வருமானமும் சற்று குறைவே. ஹைபிரீட் ஃபண்டுகளை 6 அல்லது 7 வகைகளாக செபி பிரித்துள்ளது. அவற்றில் அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகளைப் பற்றி இந்த வாரம் விரிவாகச் சொல்லியிருக்கிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடர் பகுதி.

இந்த வார நாணயம்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2SugOPV