Published:Updated:

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!
ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

இந்த இதழ் நாணயம் விகடன் : https://bit.ly/2RL7dXL

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

நாம் தற்போது இந்த இடத்திற்கு வருவதற்குமுன் இரண்டு பெரிய சந்தைச் சரிவுகள், இரண்டு கூட்டணி அரசாங்கம், இரு பெரும்பான்மை அரசாங்கம், இரண்டு முறை கச்சா எண்ணெய் விலையேற்றப் பிரச்னை, சில முறை ரூபாய் விலை வீழ்ச்சி போன்றவற்றைச் சந்தித்திருக்கிறோம். 2000-ம் ஆண்டில் யாராவது உங்கள் பணத்தை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் 9 மடங்கு உயர்த்திக் கொடுக்கிறேன் எனக் கூறினால், பலரும் ஆஹா என்றுதான் நினைத்திருப்பார்கள்.  

தற்போது 2025-ம் ஆண்டுக்கான வளர்ச்சிகுறித்துப் பார்த்தால், சென்செக்ஸ் புள்ளிகள் 60000 (1.7x) -  90000 (2.5x) வரையில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம்  எதிர்பார்க்கலாம். எனவே, அடுத்த ஆறு ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாக வாய்ப்புள்ளன. பல கணிப்புகள் தவறினாலும், சில கணிப்புகள் பயனுள்ளதாக இருப்பது முக்கியமானதாகும்...

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

... தேர்தல் அல்லது வட்டி விகித உயர்வு என ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து, பங்குச் சந்தை இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சூழலில், பலதரபட்ட  முதலீட்டாளர்களிடமிருந்து வரக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி, பங்குச் சந்தை இனி என்னவாகும், சந்தை இன்னும் இறங்குமா என நிறையப் பேர் போன் செய்து கேள்வி கேட்பார்கள்...

- இதோ, '2025-ல் சென்செக்ஸ் 90000 புள்ளிகள்! - உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா?' என்ற தலைப்பில், செபி சான்றிதழ் பெற்ற முதலீட்டு நிபுணர் பிரவீன் ரெட்டி நமக்காக அலசுகிறார்.

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

ஸ்டெப் அப் கடன்: கடன் வாங்கியபின் தொடக்கக் காலத்தில் இ.எம்.ஐ தொகையைக் குறைவாகவும், காலப் போக்கில் வேலையில் கிடைக்கும் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்புக்கேற்ப இ.எம்.ஐ-யாகத் திருப்பிச் செலுத்தும் தொகை படிப்படியாக அதிகமாகவும் கட்டும் வசதி கொண்டது ஸ்டெப் அப் முறை கடன் திட்டம். இது, புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கி, வீடு வாங்க நினைக்கும் இளைஞர் களுக்கு, அவர்கள் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகையைச் சுமையாக நினைக்காமல் இருக்க உதவும்...

டாப் அப் கடன்: டாப் அப் கடன் என்பது மேற்கூறிய ஸ்டெப் அப் கடனுக்கு மாறானது. ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதலாகக் கடன் பெறும் வசதி கொண்டதுதான் டாப் அப் கடன் திட்டம். வீட்டைப் புதுப்பித்தல், வீட்டை விரிவாக்கம் செய்தல், குடும்பத்தில் திருமணம், உயர்கல்வி, விடுமுறையைக் கழிக்க எனப் பல்வேறு தேவை களுக்காக டாப் அப் கடன் கிடைக்கும். தனிநபர் கடன்களுடன் ஒப்பிடுகையில், இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு...

- வீட்டுக் கடன் வாங்கும்போது பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வருவதுண்டு. எந்தக் கடனை எப்போது, எந்தத் தேவைக்கு வாங்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கவே செய்கிறது. வீட்டுக் கடனில் ஸ்டெப் அப் லோன், டாப் அப் லோன் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன, யாருக்கு எது ஏற்றதாக இருக்கும் என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கிறது, 'ஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?' எனும் சிறப்பு வழிகாட்டும் கட்டுரை.

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

டிவி நியூஸ் புரடியூசர் ஒருவர் சொல்கிறார்... "நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்ட எங்கேயும் எப்போதும் போகத் தயாராக இருந்து பணி செய்தேன். வேளாவேளைக்கு சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி என்பது எள்ளளவும் இல்லாதுபோக, கிடைத்ததைச் சாப்பிட்டு, கிடைத்த நேரத்தில் தூங்கி நான் பெற்றது என்ன தெரியுமா? மிகவும் குறுகிய காலத்தில் 60 பவுண்ட் எடை கூடியதுடன்,  குடும்பத்தில் தகராறு வந்து விவாகரத்து ஆனது தான் மிச்சம்” என்கிறார். 

''இந்தவிதப் பிரச்னைகளை 'நிறுவனங்கள் உருவாக்கும் சமூக மாசுபாடு (social pollution)' என்றார் ஒரு பேராசிரியர். அது மிக மிகச் சரியான சொற்பதம் என்பதை இன்றைக்கு நாம் உணர ஆரம்பித்துள்ளோம்'' என்கிறார் ஆசிரியர்.

இதில் கொடுமை என்னவென்றால், இப்படி மன அழுத்தத்தைத் தரும்வகையில் நிறுவனங்கள் செயல்படுவதால் பணியாளர்களின் நலம் மட்டுமல்ல, நிறுவனங்களின் நலனும் பெருமளவு கெட்டுப்போகவே செய்கிறது என்கிறார் ஆசிரியர். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை  (Sustainability) குறித்து வாய்கிழிய பேசும் இந்த நிறுவனங்களில் பலவும் மனிதர்களின் நிலைத்தன்மை (Human sustainability) குறித்து கவலை கொள்வதேயில்லை. இது ஒரு தோல்வி-தோல்வி (lose-lose) சூழலையே பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தருகிறது என்கிறார் ஆசிரியர்...

-  சம்பளத்துக்காக (pay check) மரணத்தை எதிர்கொள்ள வேண்டியதை நிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதுதான் 'டையிங் ஃபார் எ பே செக்'. நவீனகால நிறுவன மேலாண்மை முறைகள் நிறுவனங்களின் செயல்பாட்டையும் பணியாளர்களின் உடல் நலத்தையும் எப்படிப் பாதிக்கின்றன என்பதை விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தின் சிறப்பு அம்சங்களை நமக்குத் தருகிறது, 'அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்' எனும் ஆர்ட்டிகிள்.

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

... பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் மேனேஜ்மென்ட். இந்தியாவில் தினசரி பிரச்னைகளுடனே நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் வளர்பவர் களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் கிடையாது. உதாரணத்துக்கு, சில பல ஆண்டு களுக்கு முன்பு கொல்கத்தாவில் எட்டு மணி நேரம் அளவுக்கு மின்சாரம் இருக்காது. ஆனால், எந்த எட்டு மணி நேரம் என்பது தெரியாது. இந்தச் சூழலில்தான் இந்தியர்கள் வளர்கிறார்கள். அதனால் இந்திய மேனேஜர்களுக்கு பிரச்னைகளைத் தீர்ப்பது என்பது இயல்பாக இருக்கிறது.

இந்த இதழ் நாணயம் விகடன் : https://bit.ly/2RL7dXL

அதேபோல பல கலாசார/ சமூகங்களுடன் இந்தியர்களான நாம் வாழ்ந்து வருகிறோம். அதாவது மாற்று கலாசாரத்தைப் புரிந்து அவர்களுடன் இணைந்து செயல் படுகிறோம். இது பணிச்சூழலில் இந்திய மேனேஜர்களுக்கு உதவியாக இருக்கிறது. அதனால்தான் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் உயரதிகாரிகள் இங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறார்கள்...

- எஸ் அண்டு பி 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் அமெரிக்கர்களை அடுத்து, அதிகமாக இருப்பது  இந்தியர்கள்தான். இதற்குக் காரணம் இவர்கள் இந்தியாவில் வளர்ந்த சூழல் மற்றும் குடும்பங்களின் அமைப்புதான் எனக் கூறுகிறது 'தி மேட் இன் இந்தியா மேனேஜர் (The Made in India Manager)' என்னும் புத்தகம். இதன் கவனிக்கத்தக்க அம்சங்களைத் தருகிறது 'சூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா!' எனும் கட்டுரை. 

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

கடந்த சில மாதங்களாக இருக்கும் இந்த பிரச்னை காரணமாக ஜெட் ஏர்வேஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. 2018-ம் ஆண்டு ஜனவரியில் 876 ரூபாயில் வர்த்தகமான இந்த பங்கு, ஆனால், 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி 245 ரூபாய் என்னும் அளவுக்குச் சரிந்தது. இதனால் முதல் ரூ.7,000 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.

ஜனவரி முதல் மார்ச் வரை யிலான காலத்தில் ரூ.1,700 கோடி, 2020-ம் நிதியாண்டில் ரூ.2,445 மற்றும் 2021-ம் நிதியாண்டில் ரூ.2,167 கோடியை இந்த நிறுவனம் கடன் தொகையைச் செலுத்த வேண்டும். அதிகக் கடன், நஷ்டம், தர மதிப்பீட்டுச் சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தொடர் சிக்கலில் இந்த நிறுவனம் இருக்கிறது. 

- ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அடுத்த கிங்ஃபிஷராகக்கூட மாறலாம் என்று எச்சரிக்கும் 'சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி?' எனும் சிறப்புப் பார்வை, சிக்கல்களில் இருந்து விடுபட மூன்று வாய்ப்புகளையும் முன்வைக்கிறது. 

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

நம் நாட்டில் தயாரிக்கப்படும் சுவிட்சுக்கும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் சுவிட்சுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் சுவிட்சுகள் கைக்கு அடக்கமாக, சிறிய அளவில் இருக்கும். நம் நாட்டில் தயாரிக்கப்படும் சுவிட்சுகளோ கரடுமுரடாக, பெரிய அளவில் இருக்கும். நான் வெளிநாட்டுத் தரத்தில் சுவிட்சுகளைத் தயார் செய்திருந்ததால், அதை வாங்குவதற்குப் பல பெரிய நிறுவனங்கள் மறுத்துவிட்டன. சிறிய அளவிலான சுவிட்சுகள் எத்தனை நாளைக்கு வருமோ என்று சந்தேகப்பட்டனர். 

பல லட்சம் ரூபாய்க்கு சுவிட்சுகளைத் தயார் செய்து, அவை விற்கவில்லை என்றால் எப்படி யிருக்கும்? நான் கலங்கிப் போய்விட்டேன். அந்தச் சமயத்தில், இந்தத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான எல்&டி நிறுவனம் எங்களுடைய சுவிட்சுகளை விற்பனை செய்வதற்கு முன்வந்தது.  அந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுக்க அலுவலகங்கள் இருந்ததால், எங்கள் உற்பத்தியும் வேகமெடுக்க ஆரம்பித்தது. 

- கோவையிலிருந்து பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களில் ஸ்பெஷலானது, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள சால்சர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். காரணம், இந்த நிறுவனத்தின் சேர்மன் துரைசாமி மூன்று நிறுவனங்களை வெற்றிகரமாக ஐ.பி.ஓ வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார். ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட இன்னும்கூட பல நிறுவனங்கள் யோசித்து வரும் நிலையில், துரைசாமி மட்டும் எப்படி மூன்று முறை ஐ.பி.ஓ வந்தார் என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவரது வெற்றிப் பயணத்தைக் கண்ணாடியாக காட்டுகிறது 'கோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ்.. மூன்று முறை ஐ.பி.ஓ... வெற்றியின் ரகசியம்!' எனும் சிறப்புக் கட்டுரை.

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

இப்போது பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

''லார்ஜ்கேப் நிறுவனங்கள் இரும்பு உற்பத்தி, சிமென்ட் உற்பத்தி எனப் பெரிய தொழில்களை மட்டுமே நடத்திவருகின்றன. ஆனால், மிட்கேப்  நிறுவனங்கள் பலவிதமான தொழில்களைச் செய்துவருகின்றன. உதாரணமாக, டயர் தயாரிப்பு, கெமிக்கல் உற்பத்தி போன்ற தொழில்களில் பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், மிட்கேப் நிறுவனங்கள் சிறப்பாகச் செய்துவருகின்றன. எடுத்துக்காட்டாக, வாகனங்களின் விற்பனை குறைந்தாலும், டயர்களின் விற்பனை குறையாது. காரணம், ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் புதிதுபுதிதாக டயர்களைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். சர்க்கரைப் பங்குகள் குறித்த காலத்தில் ஏறியிறங்கும் என்றாலும், ஆண்டுக்கு 2% வளர்ச்சி கண்டுதான் வருகிறது. இதுமாதிரியான தொழில்களைச் செய்துவரும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் பல. இந்தமாதிரியான நிறுவனங்களைக் கண்டறிந்து, முதலீடு செய்வதே சரியான உத்தியாக இருக்கும்.''

- இதுமட்டுமின்றி, 'பொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும்?' என்பதையும்  'ஈக்வினாமிக்ஸ்' ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டியில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 

ஷேர் மார்க்கெட் to ஹோம் லோன்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 ஆர்ட்டிகிள்ஸ்!

இப்போதிருக்கும்  கடன் சார்ந்த ஃபண்டுகளில் மிகவும் குறைந்த ரிஸ்க் உடையது லிக்விட் ஃபண்டுகள்தான் என்பது பொதுவான கருத்து. ஏனென்றால், அதைத்தான் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கி வந்தன; தற்போதும் வழங்கி வருகின்றன. லிக்விட் ஃபண்டுகளைவிட குறைவான ரிஸ்க் உடைய ஃபண்டுகள் ஓவர்நைட் ஃபண்டுகள் ஆகும். சமீபத்தில் நடந்த ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தின் பிரச்னைக்குப்பிறகு இதைப் பலரும் உணர்ந்துள்ளார்கள். குறிப்பாக, இந்த வகை ஃபண்டுகளில் பெருமளவில் முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆகவே, இப்போதுதான் இந்தவகை ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடம் பிரபலமாகி வருகின்றன.

இந்த வகை ஃபண்டுகளை இதுவரை அறிமுகம் செய்யாத நிறுவனங்கள் இப்போது இந்த  ஃபண்டுகளை (என்.எஃப்.ஓ) அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், ரிலையன்ஸ், டி.எஸ்.பி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆதித்ய பிர்லா போன்ற ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது ஓவர்நைட் ஃபண்டுகளை சந்தைக்குக் கொண்டுவந்தன...

- ஓவர்நைட் ஃபண்டுகள் என்றால்..? யாருக்கு உகந்தது? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு உரிய பதில் தருவதுடன், சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடரின் 'ரிஸ்க் குறைவான ஓவர்நைட் ஃபண்டுகள்!' எனும் பகுதி.

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2Cvg1aH

அடுத்த கட்டுரைக்கு